Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

ணையம் 1, சோபா 0.

 இதுதான் இந்த வாரத்தின் சோபா (SOPA Stop Online Piracy Act) சச்சரவின் ஸ்கோர். இப்போதைக்கு இந்த மசோதாவை விவாதிக்கப்போவது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம், இணையத் தின் பலம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் விக்கிபீடியா. இந்த வார புதன் கிழமை முழுதும் ஆங்கில விக்கி பக்கங்களை இருட்டாகக் காட்ட ஆரம்பித்தது. இந்தப் பக்கங்களுக்கு வருகை தந்த பயனீட்டாளர்களுக்கு சோபா எவ்வளவு மோசமானது என்பதைப் பற்றிய விளக்கங் கள். ஒரே நாளில் 162 மில்லியன் பயனீட் டாளர்களை இந்தச் செய்தி அடைந்திருக் கிறது.

கூகுள் கையெழுத்து சேகரிக்கும் இயக்கம் ஒன்றைத் தொடங்கி, ஒரே நாளில் கிட்டத்தட்ட 5 மில்லியன்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

கையெழுத்துகளைச் சேகரித்தது. இப்படிப் பல டெக் நிறுவனங்கள் தங்களுக்கு முடிந்த வரையில் சோபா மசோதாவுக்கான எதிர்ப்புகளை இணை யத்தைப் பயன்படுத்தித் தெரிவிக்க, நியூயார்க் நகரில் மசோதாவுக்கான கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது.

சரி, என்ன விளைவு?

சோபா மசோதாவைத் தயாரித்து அதை ஆமோதித்தும், மறுமொழி செய்தும் வந்த பல செனட்டர்கள் தங்களது சார்பு நிலையை மாற்றிக்கொண்டுவிட்டனர். மசோதா கைவிடப்படவில்லை என்றாலும், கால வரையறை இன்றி தள்ளிப்போடப்பட்டது. இணைய ஆர்வலர்கள் இப்போதைக்குச் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.

இந்த மசோதா, சட்டமாக மாறுவது தடைபட்டு இருக்கும் எரிச்சலாலோ என்னவோ, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. (FBI) பல நாடுகளின் ஒத்துழைப்புடன் மிகப் பிரபலமான மெகாஅப்லோட் (www.megaupload.com) தளத்தைக் கைப்பற்றி இருப்பதோடு, அந்தத் தளத்தை நிறுவி நடத்திவரும் பலரைக் கைது செய்திருக்கிறது.

அறிமுகம் இல்லாதவர்களுக்கு மெகா அப்லோட்பற்றிய குயிக் பின்னணி.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

2005-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தளம் 'இணையப் பெட்டகம்’ (Cyber locker) என்ற அடைமொழியுடன் கிடுகிடுவெனப் பிரபலமாகத் தொடங்கியது. 150 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்களுடன் லாபகரமாக இயங்கிவந்த இந்தத் தளத்தின் முக்கிய நோக்கம், பயனீட்டா ளர்கள் தமது கோப்புகளைப் பதிவேற்றம் செய்து பகிர்ந்துகொள்ளவைப்பது. சிறப் பாகப் பதிவேற்றம் செய்பவர்களுக்கு மெகாஅப்லோட் தளம் பரிசுகள் வழங்கும். பதிவேற்றப்பட்ட கோப்புகளைப் பதி விறக்கம் செய்துகொள்ள விரும்புபவர்கள் தளத்துக்குப் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்த விரும்பாதவர்கள் இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், இந்த இலவசப் பயனீட்டுக்குக் கொடுக்கப்படும் இணையக் கற்றை அகலம் (Bandwidth) குறைவு என்பதால், பதிவிறக்கம் செய்ய அதிக நேரம் எடுக்கும். இதுதான் மெகா அப்லோட் தளத்தின் பிசினஸ் மாடல்.  

கோப்புகளைப் பதிவேற்றம் செய்யப் பரிசு உண்டு என்பதால், வீடியோக்களும் திரைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்படுவது இந்தத் தளத்தில் அதிகரித்தது. ஒரு காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதற்கு முன்னரே இந்தத் தளத்தில் அவற்றின் திருட்டுப் பதிப்புகள் பதிவேற்றப்படும் நிலை உருவானது. திரைப்படத் தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பான எம்.பி.ஏ.ஏ. (Motion Pictures Association of America) கடுப்பாகிப் புகார் செய்ய, மெகாஅப்லோட் அவர்கள் சுட்டிக்காட்டும் சில ஆயிரம் லிங்க்குகளை மட்டும் ஒவ்வொரு நாளும் நீக்குவதற்கு ஒப்புக்கொண்டது. ''இதெல்லாம் போதாது; பல நூறு மில்லியன் கணக்கில் அறிவுசார் சொத்துரிமைகொண்ட படைப்புகள் மெகா அப்லோடைப் பயன்படுத்தித் தொடர்ந்து பகிர்ந்துகொள்ளப்படுகின்றன'' என்ற புகாருக்கான பதில்தான் மெகாஅப்லோட் மூடப்பட்டதும் அதை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதும்!

சென்ற வாரத்தில் 'தேடல் மற்றும் உங்கள் உலகம்’ என்ற கூகுளின் புதிய வசதியையும் அது உருவாக்கிய சச்சரவுகளையும்பற்றிச் சொல்லி இருந்தேன். தனக்குச் சொந்தமான கூகுள் சமூக ஊடகத் தளத்தில் இருந்து தகவல்களைப் பயனீட்டாளர்களுக்குத் தேடல் பதில்களை அளிக்கப் பயன்படுத்தப்போவதுதான் இந்தப் புதிய வசதி.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

90 மில்லியன் பயனீட்டாளர்களைக் கொண்டு இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், கூகுள் , ஃபேஸ்புக் அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. கூகுளுக்குத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஃபேஸ்புக்குக்கு விருப்பம் இல்லை. இதன் விளைவாக, சராசரிப் பயனீட்டாளரின் சமூகத் தொடர்புத் தகவல்கள் ஃபேஸ்புக் என்ற சுவரிட்ட தோட்டத்துக்குள் பூட்டப்பட்டு, தகவல் தேடலுக்குப் பயணிக்காமல் போகிறது. கூகுளின் தகவல் சேகரிப்பில் பயனீட்டாளரான உங்களது பங்களிப்பு என்பது எதுவும் இல்லை. ஆனால், ஃபேஸ்புக்கில் நீங்களும் உங்கள் நண்பர்களும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் அனைத்தும் உங்களுக்கே சொந்தமானவை என்றாலும் அதை ஃபேஸ்புக்குக்கு வெளியே பெற்றுக்கொள்ள எந்த வசதியும் இல்லை. பயனீட்டாளர்கள் தங்களுக்குச் சொந்தமான இந்தத் தகவலை கூகுளுக்கு நேரடியாகக் கொடுக்க முடிந்தால், அதன் மூலம் தேடல் பதில்களை மெருகுபடுத்த முடியும். இதைச் செய்ய வேண்டும் என்ற பயனீட்டாளர் குரல் விரைவில் வலுவாகக் கேட்கத் தொடங்கும் என நம்புகிறேன்.

LOG OFF

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism