Published:Updated:

`அட்லீ என்ன உங்கள மாதிரி வெட்டியா இருக்குறாரா?' – ட்ரோல் செய்தவர்களைக் கதறவிட்ட விஜய் ரசிகர்கள்

அஸ்வினி.சி
`அட்லீ என்ன உங்கள மாதிரி வெட்டியா இருக்குறாரா?' – ட்ரோல் செய்தவர்களைக் கதறவிட்ட விஜய் ரசிகர்கள்
`அட்லீ என்ன உங்கள மாதிரி வெட்டியா இருக்குறாரா?' – ட்ரோல் செய்தவர்களைக் கதறவிட்ட விஜய் ரசிகர்கள்

நம் மக்கள் பலரிடம் ஒரு கெட்டப்பழக்கம் இருக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்துக் கிண்டல் செய்வார்கள். திரைப் பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள், விளையாட்டு வீரர்கள் என பாரபட்சம் பார்க்காமல் உருவக் கேலி செய்து மீம்ஸ், வீடியோ எனப் பதிவிட்டு ட்ரோல் செய்வார்கள். அப்படிச் செய்வது கருத்துச் சுதந்திரம் என்று வேறு விளக்கம் கொடுப்பார்கள். இந்த ட்ரோல் குரூப் இம்முறை டார்கெட் செய்துள்ளது இயக்குநர் அட்லீயை.

சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின்போது இயக்குநர் அட்லீ - பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் இருவரும் அருகருகே அமர்ந்து மேட்ச் பார்த்தனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பயங்கர வைரலாகின. ஏற்கெனவே தளபதி 63 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஷாரூக் தோன்றுவார், `மெர்சல்' இந்தி ரீமேக்கில் ஷாரூக் நடிப்பார் எனச் செய்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், இருவரும் அருகருகே அமர்ந்து மேட்ச் பார்த்தது விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் அட்லீ - ஷாரூக் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படங்களை பகிர்ந்து நிறத்தை வைத்து சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அப்படி ட்ரோல் செய்பவர்களை நல்லுள்ளம் கொண்ட நெட்டிசன்கள் பலர் ரவுண்டு கட்டத் தொடங்கிவிட்டனர். அட்லீயை ட்ரோல் செய்து பதிவிட்டவர்களின் ட்விட்டர், முகநூல் பக்கங்களில் கடுமையாகச் சாடி கமென்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக விஜய் ரசிகர்கள் அட்லீயை கலாய்க்கும் நெட்டிசன்களைப் பதிலடி கொடுத்து வருகின்றனர். அவற்றில் சில பதிவுகள் கீழே..

``முன்னர் அட்லீ, பிரியா திருமணப் புகைப்படங்களை ட்ரோல் செஞ்சீங்க. இப்போ ஷாரூக் கானுடன் அட்லீ இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ட்ரோல் செய்றீங்க. இதில் என்ன வித்தியாசம் தெரியுமா.. அட்லீ உச்ச நட்சத்திரங்களை இயக்கி மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வருகிறார். ட்ரோல் செய்பவர்கள் இன்னும் ட்ரோல் மட்டும்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள்’’

``அட்லீ உழைப்பால் உயர்ந்தவர். இன்று ஷாரூக் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். நாளை ஷாரூக்கையே இயக்குவார். நீங்கள் மீம்ஸ் போட்டு அவரது வளர்ச்சியை ஒன்றுமே செய்துவிட முடியாது’’

``நீங்கள் வீட்டில் உட்கார்ந்து மேட்ச் பார்த்து மீம்ஸ் பதிவிடுகிறீகள். அட்லீ விஐபி சீட்டில் உட்கார்ந்து மேட்ச் பார்க்கிறார். இதுதான் உங்களுக்கும் அவருக்கு இருக்கும் வித்தியாசம்’’

``கறுப்புதான் நம்ம நிறம். அதுதான் அழகு .. கெத்து.. இந்த சிறிய வயதிலேயே ஹிட் படங்களைக் கொடுத்து பெரிய நடிகர்களை இயக்கியவர் மீது நிறவெறி கமென்டுகள் வீசுவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்’’

இவ்வாறு பதிவிட்டு ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.  மேலும் சிலர் அட்லீ ஆர்மி என்று ஹேஷ் டேக் போட்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற நிறவெறி கிண்டல்களுக்கு அட்லீ சொன்ன பதில் கீழே...