Published:Updated:

ஹார்வி ஆலையும் துயரப் புன்னகையும்!

Su Venkatesan

ஹார்வி ஆலையும் துயரப் புன்னகையும்!

ஹார்வி ஆலையும் துயரப் புன்னகையும்!

ஹார்வி ஆலையும் துயரப் புன்னகையும்!

Published:Updated:
Su Venkatesan
ஹார்வி ஆலையும் துயரப் புன்னகையும்!

ன் சொந்த ஊர் ஹார்விபட்டியின் இயல்பையும் அதன் உயிர்ப்பையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன்.

ஹார்வி ஆலையும் துயரப் புன்னகையும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''ஹார்விபட்டியின் கதை ஏகத்துக்கும் சுவாரஸ்யமானது. ஹார்வி சகோதரர்கள் நடத்திய ஆலை, தமிழகத்தின் மிகப் பெரிய ஆலைகளில் ஒன்று. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில்  25 ஆயிரம் ஆண்களும், 18 ஆயிரம் பெண்களும் வேலை பார்த்து இருக்கிறார்கள்.  ஒரு ஷிப்ட்டுக்கு சுமார் 12 ஆயிரம் பேர் ஆலையை விட்டு வெளியேறி, அதே எண்ணிக்கையில் தொழிலாளிகள் ஆலையின் உள்ளே  வேலைக்காக நுழைவார் களாம்.  எவ்வளவு பிரமாண்டமான ஆலை என்று யோசித்துப் பாருங்கள். மதுரைக்குத் தூங்கா நகரம் எனப் பெயர் வந்ததில் இந்த ஆலைக்குப் பெரும் பங்கு உண்டு. ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்  என்பதால் நள்ளி ரவு 2 மணிக்கு மக்கள் வேலையை முடித்து விட்டு உணவருந்த வருவார்கள். ஆகவே மக்களுக்காக இரவில் உணவுக் கடைகள் ஓயாமல் செயல்பட்டன. ஹார்வி ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 1937-ல் மாபெரும் போராட்டம் நடத்தினார்கள். மிகப் பெரும் இழப்புகளுக்குப் பிறகு ஆலை நிர்வாகம் தொழிலாளிகளுக்கான பணிமனை கள் கட்டித்தர ஒப்புக்கொண்டு உருவாக்கியது தான்  இந்த ஹார்விப்பட்டி.

பள்ளி, வீடு, அழகான பூங்கா, திட்டமிட்டுக் கட்டப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் என துல்லியமான திட்டமிடலோடு இந்தப் பகுதி உருவானது.

எங்கள் பகுதியின் மிகப் பெரிய அடையாளம் அன்றைக்கு இயக்கப்பட்ட ரயில். தொழிலாளியின்  குடியிருப்புகளில் இருந்து ஆலை வரை தொடர்ந்து பயணித்த ரயில் அது. அந்த ரயில் ஒரு மாபெரும் பிராணி போலவே எங்களுக்கு காட்சி அளித்தது. அதில்தான் குழந்தைகள் விளையாடினார்கள். இளைஞர்கள் காதல் வளர்த்தார்கள். தொழிலாளர்கள்  ஆனந்தமாகத் துயில் பயின்றார்கள். 80-களில்  நிர்வாகம் மற்றும் மில் தொழிலாளிகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தால் தன் பயன்பாட்டை நிறுத்திக்கொண்டது அந்த ரயில்.

ஹார்வி ஆலையும் துயரப் புன்னகையும்!

ராஜாஜி, பெரியார், திரு.வி.க., ஜீவா, பி.ராமமூர்த்தி, சங்கரய்யா போன்ற பெரும் தலைவர்கள் உரையாற்றிய மில்லின் கேட் வாசலில்  இப்போது காலத்தின் துயரப் புன்னகை போலவே நான்கே நான்கு பூக்கடைகள் மட்டும் இருக் கின்றன.

ஹார்வி ஆலையும் துயரப் புன்னகையும்!

இந்தப் பகுதி உலகப் போரின்போது உருவாக்கப்பட்டதால் 15 முதல் 20 அடி ஆழம்கொண்ட பதுங்கு குழிகள் ஆறு இடங்களில் இருந்தன. உலக அரசியலின் அடையாளமாக இருந்த அந்தக் குழி களை காலப்போக்கில் குப்பைத் தொட்டி ஆக்கிவிட் டார்கள் மக்கள். இன்றைக்கும் அந்த பதுங்கு குழிகள் இருந்த வழியாக போகிற பொழுது நெஞ்சம் வலிக்கிறது.

வைகை நீரோடும்  கால்வாய்க்கு அருகில் பள்ளி இருந்ததால் மழைக் காலங்களில் நாங்கள் வகுப்பைப்  புறக்கணித்துவிட்டு, அந்த வாய்க்காலில் மீன்  துள்ளி எழும்புவதைப் பார்க்கப் போய்விடுவோம். அன்றைக்கு ஊருக்குள் அரசியல் அடையாளங்கள் அனுமதிக்கப்பட்டது இல்லை. அதையும் மீறி கம்பம் வைத்தார்கள் கம்யூனிஸ்ட்கள். அந்தப் பதற்றம் அடங்க ஒன்றரை வருடங்கள் ஆயிற்று. ஊரில் அப்போது ஒவ்வொரு கட்சியின் பெயரிலும் ஒரு படிப்பகம் உண்டு. அதற்கு எதிரில் கிணறும் உண்டு. வெவ்வேறு படிப்பகத்தில் படிப்பவர்களும் ஒரே கிணற்றில் நீராடுவார் கள்.

மறக்கவே முடியாத மனிதர் இளங்குமரன் என்னும் என் தமிழ் ஆசிரியர். ஆழ்ந்த தமிழ் அறிவு உடையவர். காவிரிக் கரையில்வள்ளு வர் சிலை, வள்ளுவர் கோயில், பாவாணர் நூலகம் ஆகியவற்றை நிறுவியவர். அவர் பாடம் நடத்துவதே இசைபோல இருக்கும். இங்கே பல சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ் வழியில் சடங்குகள் இல்லாமல் நடந் தன. அது, அரசியலும், மொழியும் கைக் கோத்துக்கொண்டதன் ஆரம்பப் புள்ளி எனலாம். அன்றைக்கு 40 ஆயிரம் பேர் வேலை பார்த்த இடத்தில் இன்றைக்கு இரு நூறுக்கும் குறைவான தொழிலாளர்களே உள்ளார்கள். நவீன கருவிகள் மற்றும்ஆக்கங் கள் மனிதர்களை மட்டும் அல்ல; ஒரு பெரிய பண்பாட்டின் மிச்சத்தையும் குலைத் துப் போட்டுவிட்டது!''

ஹார்வி ஆலையும் துயரப் புன்னகையும்!
ஹார்வி ஆலையும் துயரப் புன்னகையும்!

- பூ.கொ.சரவணன்
படங்கள்: என்.விவேக், பா.காளிமுத்து 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism