Published:Updated:

"சசிகலாவை வெளியேற்றியது எம்.ஜி.ஆர்.தான்!"

"சசிகலாவை வெளியேற்றியது எம்.ஜி.ஆர்.தான்!"

"சசிகலாவை வெளியேற்றியது எம்.ஜி.ஆர்.தான்!"

"சசிகலாவை வெளியேற்றியது எம்.ஜி.ஆர்.தான்!"

Published:Updated:

ண்மையான அ.தி.மு.க. தொண்டனுக்கு 'எம்.ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்து மந்திரம்தான் உயிர் மூச்சு. எம்.ஜி.ஆர். நாகராஜனுக்கும்அப்படித் தான். அதீத அன்பு காரணமாக எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டி, பூஜை செய்துகொண்டு இருக்கிறார் இந்த எம்.ஜி.ஆர் பக்தர்!

"சசிகலாவை வெளியேற்றியது எம்.ஜி.ஆர்.தான்!"
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1986-ல் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாடு நடந்தபோது, 48 நாட்கள் விரதம் இருந்து எம்.ஜி.ஆரின் ஏழு அடி உயர 'கட்-அவுட்’டை அனுப்பானடியில் இருந்து எம்.ஜி.ஆர். தங்கி இருந்த அசோக் ஹோட்டல் வரை அலகு குத்தி இழுத்து வந்தார் நாகராஜன். விஷயம் தெரிந்து பதறிய எம்.ஜி.ஆர், ''இப்படி எல்லாம் செய்யலாமா?'' என்று நாகராஜனை அழைத்து கண்டித்துஇருக்கி றார். ''தலைவா உங்களுக்கு வாய் பேசமுடியாதுனு கருணாநிதி கட்சிக்காரங்க சொன்னாங்க.அதுக் காகத்தான் திருப்பரங்குன்றம் முருகனுக்கு வேண்டிக்கிட்டு அலகு குத்தி வந்தேன்'' என்று நாகராஜன் வெள்ளந்தியாகச் சொல்ல, அவரைக் கட்டித் தழுவிக்கொண்ட எம்.ஜி.ஆர். ஒரு லட்ச ரூபாயை அன்பளிப்பாகக் கொடுத்து இருக்கிறார்.  அன்று முதல் இவர் பெயர் 'எம்.ஜி.ஆர். நாகராஜன்’ ஆனது.

''தலைவர் கொடுத்த பணத்துல அனுப்பானடியில அவருக்காக ஒரு கோயில் கட்டி, தலைவர் சிலைவெச்சு பூஜை எல்லாம் செஞ்சேன். அடுத்த வருஷமே மறுபடியும் மதுரைக்கு வந்த தலைவரைப் பார்க்கறதுக்காக ஹோட்டலுக் குப் போனேன். 'இப்ப என்ன செஞ்சுட்டு வந்துருக்கே?’னு தலைவரு கோவமாக் கேட்டாரு. 'நீங்க குடுத்த காசுல உங்களுக்குக் கோயில் கட்டி இருக்கேன் தலைவரே’னு சொன்னதும் கோப மான அவர், 'எத்தனை தடவை சொன்னாலும் நீ  திருந்தவே மாட்டியா?’னு சத்தம் போட்டார், என்னை சர்க்யூட் ஹவுஸ்ல உக்காரவெச்சுட்டு, அப்போ இருந்த போலீஸ் சூப்பிரெண்ட் கே.வி.எஸ்.மூர்த்தியை அனுப்பானடிக்கு அனுப்பினாரு. அவரும் அங்கே போயி பார்த் துட்டு வந்து, 'கோயில் கட்டிருக்கிறது உண்மை தான்’னு ரிப்போர்ட் கொடுத்தாரு. அதைக் கேட்டுட்டு, 'நாளைக்கு காலையில என்னை வந்து பாரு’னு சொல்லி அனுப்பினார். எங்கே திட்டுவிழுமோனு பயந்துக்கிட்டு மறுநாள் தலை வரைப் பார்க்கப் போகலை. ஆனா, பி.ஆர்.சி. (பாண்டியன் போக்குவரத்துக் கழகம்) அதிகாரிகள் என்னைத் தேடி வீட்டுக்கே வந்துட்டாங்க. 'பி.ஆர்.சி. கேன்டீன்ல சி.எம். உனக்கு சமையல் காரர் வேலை குடுக்கச் சொல்லிருக்காருப்பா’னு சொல்லி உத்தரவைக் கொடுத்தவங்க, 'மாசம் 750 ரூபாய் சம்பளம். ஒன்றரை வருஷம் கழிச்சு வேலை நிரந்தரமாயிடும்’னு சொல்லிட்டுப் போனாங்க.  

என் தங்கத் தலைவன் இறந்த பின்னாடி, என்னை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க.  இடைத்தேர்தல் வெற்றி விழா கூட்டத்துக்காக மதுரையிலேர்ந்து சென்னைக்கு சைக்கிள் பயணம் போய் புரட்சித் தலைவி அம்மாவுக்கு வீரவாள் பரிசு குடுத்தேன். அப்ப, 'தலைவர் கொடுத்த வேலையைப் பிடுங்கிட்டாங்கம்மா’னு சொன்னேன். உடனே வேலையில் சேர ஆர்டர் போட்டு, வேலை வாங்கிக் கொடுத்தாங்க. ரெண்டு வருஷம் முன்னாடி ரிட்டையர்மென்ட் ஆனேன். நான் தலைவருக்கு கட்டியிருந்த கோயில் ரொம் பப் பெரிசு. மாநகராட்சி இடத்துல ஆக்கிரமிச்சுக் கட்டினதா சொல்லி தி.மு.க ஆட்சியில் கோயிலை இடிச்சுட்டாங்க. தங்க நிகர்த் தலைவனின் பெய ரும் புகழும் மக்கள் மனசில் எப்பவும் இருக்க ணும்னு எட்டு மாசத்துக்கு முந்தி மாநகராட்சியில முறைப்படி தீர்மானம் போடவெச்சு, மறுபடி கோயிலைக் கட்டிட்டேன்!'' என்கிறார் நாகராஜன்.  

வெள்ளி, செவ்வாய் அன்று கோயிலுக்கு வந்து மறக்காமல் தீபம் ஏற்றுகிறார்கள் எம்.ஜி.ஆர் பக்தர்கள். அ.தி.மு.க. விழாக்கள், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்த நாட்களுக்கு இங்கே சிறப்பு பூஜைகளும் உண்டு. மார்கழி மாதம் முழுக்க  எம்.ஜி.ஆர். கோயிலில் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் அமர்க்களப் படுகிறது. அப்போது பக்திப் பாடல்களுக்கு பதிலாக எம்.ஜி.ஆர். படத்தில் இடம்பெற்ற கொள்கைப் பாடல்களை முழங்கவிடுகிறார் நாகராஜன்.

''தலைவரு அடிக்கவும் செய்வாரு.  அணைக்கவும் செய்வாரு. ஆனா, தலைவர் இறந்ததுக்குப் பின்னாடி அடிக்க மட்டும்தான் ஆள் இருந்துச்சு; அணைக்கிறதுக்கு ஆள் இல்லை. இப்ப நிலைமை மாறிருச்சு. தலைவரோட ஆன்மாதான் சசிகலா கூட்டத்தை வெளியேத்திருச்சு. என் தலைவனின் இயக்கத்துக்கு இனிமேல்தான் மறுமலர்ச்சி!'' உற்சாகத்தோடு விடை கொடுத்தார் அந்த எம்.ஜி.ஆர். பக்தன்.

"சசிகலாவை வெளியேற்றியது எம்.ஜி.ஆர்.தான்!"

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism