Published:Updated:

த்ரிஷாவுக்கு ஒரு உம்மா கொடு!

த்ரிஷாவுக்கு ஒரு உம்மா கொடு!

த்ரிஷாவுக்கு ஒரு உம்மா கொடு!

த்ரிஷாவுக்கு ஒரு உம்மா கொடு!

Published:Updated:

மிழக வரலாற்றில் முதல்முறையாக... த்ரிஷாவுக்கு முத்தம் கொடுக்கும் வீர, ஈரப் போட்டியை நடத்தி, ஏரியா முழுவதும் உதட்டில் புண்ணோடு திரிகிறார்கள் தேனியை அடுத்த வீரபாண்டி  கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.

த்ரிஷாவுக்கு ஒரு உம்மா கொடு!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொங்கல் தினத்தில் ஊரில் கபடி, பாட்டிலில் தண்ணீர் ஊற்றுதல், உறி  அடித் தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று பலதரப் பட்ட போட்டிகளை நடத்துவார்கள். இந்தப் போட்டிகள் போரடித்துப் போய் விட்டதோ என்னவோ... வீரபாண்டி  கிரா மத்தைச் சேர்ந்த 'ஊர்க்காவலன் இளைஞர் பாசறை’யைச் சேர்ந்த இளைஞர்கள் (நல்லா காக்கறீங்கப்பா ஊரை!) சுவற்றில் த்ரிஷா படத்தை ஒட்டிவிட்டு, கண்களைக் கட்டி த்ரிஷாவுக்கு முத்தம் கொடுக்கும் போட்டியை நடத்தி ஏரியாவில் சூட்டைக் கிளப்பி இருக் கிறார்கள்.

வீரபாண்டி  பொது மந்தையில் உள்ள கோயில் சுவரில் குடும்பக் குத்துவிளக்கு காஸ்ட்யூமில் இருக்கும் த்ரிஷாவின் படத்தை ஒட்டிவிட்டார்கள். போட்டிக் கட்டணம் நபர் ஒன்றுக்கு  20 ரூபாய்.

அறிவிப்பு வந்ததும் ஆஜாராகிவிட்டார் கருப்பு. சிச்சுவேஷனுக்குப் பொருத்தமாக 'பொறுடி வர்றேன்!’ என்ற வாசகம்கொண்ட டி-ஷர்ட் அணிந்து இருந்தார். அவருக்குத் துண்டால் கண்ணைக் கட்டிவிட்டு மூன்று முறை இடவலமாக சுற்றிவிட்டார்கள். (இது போகும் பாதையை குழப்பிவிடும் டெக்னிக்) 'ரைட்டா..’, 'ரைட்டா..’ என்று அடிமேல் அடிவைத்து சுவரை நோக்கி நடந்தவர், சுவருக்கு அருகில் இருந்த வீரமணியின் உதடுகளை நோக்கி 'உம்ம்ம்ம்’ என்று உதடுகளைக் குவிக்க,  'ஏலேய் இவன் என்னைய கெடுக்க வர்றாண்டா...’ என்று ஜாலியாக அலறினார் வீரமணி.  

அடுத்தாக த்ரிஷாவை முத்தம் கொடுக்க, களம் இறங்கியவர்  ஜான் பாண்டியன். நின்று நிதானித்து த்ரிஷா படம் இருக்கும் திசையை நோக்கி ஜான் பாண்டியன் நடக்க, விசில் பறந் தது. ''விசில் அடித்து சிக்னல் கொடுக்கக் கூடாது. மீறி விசில் அடித்தால் ஊரைவிட்டு பொங்கல் முடியும் வரை தள்ளிவைப்போம்'' என்று மைக்கில் ஜாலி எச்சரிக்கை வர, விசில் சத்தம் அடங்கியது. இதற்குள் குழப்பமான ஜான் பாண்டியன் விலகிச் சென்று சுவரில் முத்தம் கொடுத்து அவுட் ஆனார்.

த்ரிஷாவுக்கு ஒரு உம்மா கொடு!
த்ரிஷாவுக்கு ஒரு உம்மா கொடு!

''அடுத்ததாக நம்பிக்கை நாயகன் மந்தி முருகன்'' என்று மைக் அலற கைதட்டல் ஊரைப் பிளந்தது. இவர் இரண்டு வருடங்களுக்கு  முன்பு சிம்ரனுக்கு முத்தம் கொடுத்து, சென்ற வருடம் சினேகாவின் உதடுகளைக் காயப்படுத்தி தொடர்ந்து பரிசுகள் பெற்று வருபவராம். கண்களை கட்டும் முன் த்ரிஷாவை அதிபயங்கர மாக உற்றுப் பார்த்தவர், ஆட்டத்துக்கு ரெடியானார். பாதி தூரம் சரியாகச் சென்றவர், பின்னர் ரைட் எடுத்து வேப்ப மரத்தை நோக்கி நடக்க ஆரம் பித்தார். நடக்கவிருக்கும் விபரீதத்தை எதிர் பார்த்து அத்தனை பேரும் வாய் பொத்தி சிரிக்க, வேப்ப மரத்துக்கு முத்தம் கொடுத்து ரத்தம் பார்த்தார் மந்தி முருகன்.

''த்ரிஷாவின் உதடுகளில் 'சென்மை’ (வாசனை திரவியம்) தடவிவிட்டு, மூக்கால்மோப் பம் பிடித்து முத்தம் தர நம்மூர் இளைஞர்கள் ஐடியா செய்து இருப்பதாகத் தகவல் வந்து உள்ளது. மானம் உள்ள, வீரம் உள்ள தமிழர்கள் நாம். குறுக்குப் புத்தி கூடாது.'' என்று அறிவிப் பாளர் எச்சரிக்கை செய்ய, துண்டால் த்ரிஷா வின் உதடுகளை அழித்தார்கள்.  

இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முத்தப் போட்டியில் தோல்வி அடைய, எல்லா ரும்  கொஞ்சம் டயர்டு ஆனார்கள். இளைஞர் களுக்கு நம்பிக்கை தர, எஜமான் என்கிற இளைஞர் கண்களைக் கட்டாமலேயே த்ரிஷா வுக்கு முத்தம் கொடுக்க பாய்ந்துவந்தார். அவரைவிட வேகமாக வந்த விழாக் கமிட்டி, எஜமானின் வாயைப் பொத்தி அலேக் ஆக தூக்கி அப்புறப்படுத்தினார்கள். ''இனி எஜமான் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது!'' என்று மைக்கில் ரெட் கார்டை அறிவித்தார் நடுவர்.

மறுபடியும் நான்காவது முறையாக பணம் கட்டி ஆட்டைக்கு வந்தார் மந்தி முருகன்.  த்ரிஷாவின் படம் முன்பு சரியாகச் சென்றவர், ''அடிடா மாப்ள கிஸ்ஸு''  என எங்கு இருந்தோ குரல் வந்ததும், பாய்ந்து சரியாக முத்தம் கொடுத்து பரிசுக் கோப்பையைத் தட்டிச் சென் றார்.  

''அடுத்ததாக தமன்னாவுக்கு முத்தம் கொடுக் கும் போட்டி. போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் தங்கள் பெயரைப் பதிவுசெய்யுமாறு விழாக் குழு கேட்டுக்கொள் கிறது'' என்று அறிவிக்க, த்ரிஷாவை விட்டுவிட்டு தமன்னா படத்தை மொய்க்க ஆரம்பித்தது கூட்டம்!

த்ரிஷாவுக்கு ஒரு உம்மா கொடு!

- சண்.சரவணக்குமார்
படங்கள்: வி.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism