Published:Updated:

மல்லாட்டை மனிதர்களும்... இங்கிலீஷ் ஏசுவும்!

மல்லாட்டை மனிதர்களும்... இங்கிலீஷ் ஏசுவும்!

மல்லாட்டை மனிதர்களும்... இங்கிலீஷ் ஏசுவும்!

மல்லாட்டை மனிதர்களும்... இங்கிலீஷ் ஏசுவும்!

Published:Updated:
மல்லாட்டை மனிதர்களும்... இங்கிலீஷ் ஏசுவும்!

மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருணா, திருவண்ணாமலைப் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

மல்லாட்டை மனிதர்களும்... இங்கிலீஷ் ஏசுவும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''திருவண்ணாமலையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வரகூர்தான் என் பெற்றோர்களின் பூர்வீகம். என் அப்பா, திருவண்ணாமலை மண்டித் தெருவில் பெரிய வியாபாரி. வியாபாரி என்றால் சொந்தமாக மண்டி வைத்து வியாபாரம் பார்க்கவில்லை. அந்த மண்டித் தெருவுக்கு சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து வந்து சேர்கிற விளை பொருட்களுக்கு விலை போடுகிறவர். அதிலும் மல்லாட்டைக்கு (மணிலா கொட்டை என்பதன் வழக்குச் சொல் இது) விலை போடுவதில் மகா கெட்டிக் காரர். எனது சின்ன வயதில் அப்பாவுக்கு ரெண்டு வேளையும் சாப்பாடு எடுத்துக்கொண்டு மண்டித் தெருவுக்கு போவேன். மண்டித் தெரு என்றால் குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டுத் தெருக்கள் இருக்கும். எல்லாத் தெருக்களிலும் மாட்டு வண்டிகளும் மல்லாட்டை, நெல் மூட்டையும் நிரம்பி இருக்கும். மண்டிகளின் முன்பு அம்பாரம் அம்பாரமாக மல்லாட்டை குவித்து வைத்து இருப்பார்கள். தெருவெங்கும் பச்சை மல்லாட்டையின் வாசனை நிறைந்து இருக்கும். சாப்பாடு கேரியருடன் மல்லாட்டை மூட் டைகளைத் தாண்டித் தாண்டி... ஏறிக் குதித்துக் குதித்து... வேண்டும் மட்டும் பச்சை மல்லாட்டையைத் தின்று தீர்த்துக் கொண்டே இருப்பேன். அதைப் பார்த்து வெள்ளந்தியாகச் சிரிக்கும் அந்த மனிதர்கள் இப்போது இல்லை; அப்பாவும் இல்லை.

நான் படித்தது எல்லாம் டேனிஷ் மிஷன் பள்ளியில்தான். நான் படித்த காலத்தில் அதுதான் நகரின் முக்கியமான பள்ளி. இப்போது நிறைய பள்ளிகள் முளைத்து கல்வி வியாபாரம் செழிப்பாக நடந்துகொண்டு இருக்கிறது. எனது நாடக ஆர்வத்துக்கு முதல் விதை விதைத்தது அந்தப் பள்ளியும் அதில் நடந்த நாடகங்களும் தான். அது கிறிஸ்துவர்களால் நடத்தப்படும் பள்ளி. ஆண்டுக்கு ஒருமுறை டென்மார்க் நாட்டில் இருந்து வந்து வெள்ளைக்காரர்கள்  ஏசுவின் வாழ்க்கையை நாடகமாகப்போடு வார்கள். நாடகம் ஆங்கிலத்தில்தான் இருக்கும். எனக்குப் புரியாது. ஆனால், ஏசு வின் கதை எனக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால் நாடகத்தைப் புரிந்துகொள்ள முடியும். இப்போதும் கூட 'முற்றம்’ கலை இலக்கிய நிகழ்ச்சிகளை அந்தப் பள்ளியில் நடத்துகிறோம்.

பள்ளியில் நடக்கும் விழாக்களில் வீர பாண்டிய கட்டபொம்மன், சேரன் செங்குட்டுவன், 'பராசக்தி’ கோர்ட்டு ஸீன் என நாடகம் போட்டு அது தி.மு.க. பிரசா ரத்துக்காகக் கட்சி மேடைகளில் நாடகம் போடுவதில் கொண்டுவந்து நிறுத்தியது. நகரின் நடுவில் இருக்கும் காந்தி சிலை சந்திப்பும் அதன் அருகே உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியும்தான் எனது பயணத்தில் முக்கியமான இடங்கள். இந்தப் பள்ளியிலும் பின்னர் காந்தி சிலை சந்திப்பிலும் நான், எனது நண்பர்கள் பவா செல்லதுரை, காளிதாஸ், பல்லவன் போன்றவர்களுடன் சேர்ந்து நடத்திய 'கலை இலக்கிய இரவுகள்’தான் எங்களை யும் த.மு.எ.க.ச-வையும் இந்த மண்ணுக்கு அறிமுகப்படுத்தியவை.

மல்லாட்டை மனிதர்களும்... இங்கிலீஷ் ஏசுவும்!
மல்லாட்டை மனிதர்களும்... இங்கிலீஷ் ஏசுவும்!

விடிய விடிய ஆயிரக்கணக்கில் மக்களைக் கூட்டி, கலை இலக்கிய இரவை நடத்தி முடித்துவிட்டு, சூரியன் பளபளவென எழும்புகிற அந்த அதிகாலையில் காந்தி சிலை சந்திப்பில் இருந்து கிளம்பி வரும்போது எழுந்த பெருமிதங்களும், சந்தோஷங்களும் நிரம்பிய தருணங்கள் வாழ்வில் வேறு எப்போதும் எனக்கு வாய்த்தது இல்லை. இப்போதும்கூட காந்தி சிலை சந்திப்பைக் கடந்து போகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் நடத்திய கலை இரவின் மேளச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், என் கண் முன்னே உருக்குலைந்து நிற்கும் மீனாட்சி தியேட்டரின் நினைவுகள்தான் எனக்குள் உறுத்தலையும் நெருட லையும் ஏற்படுத்துகின்றன. ஒன்பதாம் வகுப்பில் தோல்வி அடைந்தது முதல் எனது சினிமா பார்க்கும் பழக்கம் தொடங்கிவிட்டது. எங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்த மீனாட்சி தியேட்டர்தான் அதற்கு முக்கிய காரணம். நிறைய படங்களை அந்த தியேட்டரில்தான் பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன். காலைக் காட்சி, பகல் காட்சி, இரண்டாவது ஆட்டம் எனத் தொடர்ச்சியாக நான் படம் பார்த்து மகிழ்ந்த தியேட்டர் அது. ஆனால், இப்போது அந்த தியேட்டர் இயங்கவில்லை. பல ஆண்டுகளாக மூடப்பட்டு பாழ் அடைந்துகிடக்கிறது. அந்த தியேட்டர் இருக்கும் தெருவில் இப்போது டாஸ்மாக் கடைதான் இருக் கிறது.

இப்போது எல்லாம் திருவண்ணாமலை நகரம், உலக வரைபடத்தில் ஒரு ஆன்மிக நகரமாக பதிவாகி இருந்தாலும், கலை இலக்கிய இரவுகள், முற்றம், மக்கள் சினிமா இயக்கம் போன்ற மாற்று பண்பாட்டு, கலை முயற்சிகளுக்கும் இந்த ஊரின் மக்களே மகத் தான துணையாக இருக்கிறார்கள் என்பதே இந்த மலை நகருக்குப் பெருமை அளிக்கிற விஷயமாகும்!''

மல்லாட்டை மனிதர்களும்... இங்கிலீஷ் ஏசுவும்!

- கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism