Published:Updated:

உப்புக் கோலத்தில் உலக வெப்பம்!

உப்புக் கோலத்தில் உலக வெப்பம்!

உப்புக் கோலத்தில் உலக வெப்பம்!

உப்புக் கோலத்தில் உலக வெப்பம்!

Published:Updated:

புவி வெப்பமயமாதலை அடிப்படையாகக் கொண்டு ஓவியம் வரைந்து புதிய உலக சாதனையைப் படைத்து இருக்கிறார் வேலூரைச் சேர்ந்த சரிதா.

உப்புக் கோலத்தில் உலக வெப்பம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை எனப் பல நாடுகளில் பதினைந்து ஆயிரத்துக்கும் மேற் பட்ட சாதனையாளர்களை உருவாக்கிய நிறு வனம் 'எலைட்’. இந்த நிறுவனம் காட்பாடி 'ரங்காலாயா' திருமண மண்டபத்தில் நடத்திய சாதனை நிகழ்வில் 12ஜ்7 பரப்பளவில் 8 மணி நேரத்தில் உப்புக் கோலத்தை வரைந்து சாதனை படைத்தார் சரிதா. வேலூரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தபோது சாதனை செய்த சந்தோ ஷத்துடன் பேச ஆரம்பித்தார் சரிதா.

'’என் சொந்த மாநிலம் ஆந்திரா. திருமணமாகி தமிழ்நாட்டுக்கு வந்து 15 வருஷமாகுது. ஸ்கூல்ல படிக்கும்போதே ஓவியம் வரையவும் கைவினைப்பொருட்கள் செய்யவும் கத்துக்கிட்டேன். அதே சமயம் இதைப் பயன்படுத்தி ஏதாவது சாதனை செய்யணும்னு நினைச்சேன். எனது கணவரும் எனது நண்பர்களும் 'எலைட்’ உலக சாதனை நிறுவனத்தைப் பற்றி சொன்னாங்க.

உப்புக் கோலத்தில் உலக வெப்பம்!

கின்னஸ் சாதனை மாதிரி எலைட் சாதனையும் உலக அளவில் புகழ்பெற்றதுனு தெரிய வந்தது. அவங்க இணையதளம் மூலம் அவங்களை தொடர்புகொண்டு உப்புக் கோலத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் வரைவது குறித்து அவங்களுக்கு விளக்கினேன். எனது கோரிக்கையை ஏற்ற 'எலைட்’ நிறுவனம், 'வேறு போட்டியாளர்களும் இதில் கலந்துக்கலாம்’னு நெட் மூலமா விளம்பரம் செய்தாங்க. அதில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் நான் குறிப்பிட்டு இருந்த நேரத்துக்கு முன்னதாகவே அந்தக் கோலத்தை வரைஞ்சு முடிக்க முடியும்னு சொல்லியிருந்தாங்க. இதனை 'எலைட்’ நிறுவனம் எனக்கு தெரியப் படுத்தியது.

நானும் மனம் தளராமல் '12 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்ட உப்புக் கோலத்தை 9 மணி நேரத்துக்குள் முடித்துவிடுவேன்’னு மீண் டும் எலைட் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு தெரிவிச்சேன். ஆனால், 'இந்த நேரத்துக்குள் தங்களால் கோலம் போட்டு முடிக்க முடியாது’னு அந்த ரெண்டு பெண்களும் போட்டியில் இருந்து விலகிட்டாங்க. அதுதான் எனக்கு முதல் வெற்றி.பிறகு கோயம்புத்தூரில் உள்ள அலுவலகம் மூலமா தொடர்பு கொண்ட 'எலைட்’ நிறுவனம்  போட்டியை நடத்த முன்வந்தாங்க.  அவங்க கொடுத்த நிபந்தனைகள் அதிகம். கையில கிளவுஸ் போடக் கூடாது, மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறைதான் ஓய்வு எடுத்துக்கலாம், உப்புக் கோலத்தின் உயரம் 1 செ.மீ இருக்கணும், குறைந்தது ஐந்து கலர் பயன்படுத்தலாம்கிறது அந்த நிபந்தனைகள். சரியா காலை 7 மணிக்கு முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரின் மனைவி லாவண்யாவும் டாக்டர் மல்லிகா பத்ரிநாத்தும் நிகழ்ச்சியைத் தொடங்கிவெச்சாங்க.

காலை 7:30 மணிக்கு உப்புக் கோலம் போட ஆரம்பிச்சேன். ஏழு கலர்களைச் சேர்த்தேன். என் அருகில் இருந்த எல்லாரும் உற்சாகப்படுத்தியதால் எனக்குச் சோர்வு தெரியலை. கைகளில் நேரடியா உப்பு இருந்துகொண்டே இருந்ததால் 3 மணி அளவில் ரத்தஓட்டம் சற்று குறைஞ்ச மாதிரி இருந்தது. இருந்தாலும் சாதனையை மனசில் வெச்சு 3.45 மணிக்கு முடிச்சேன். அதாவது சொன்ன நேரத்துக்கு முன்னாலேயே, 8 மணி 15 நிமிடத்தில் முடிச்சிட்டேன்.

உப்புக் கோலத்தில் உலக வெப்பம்!

வெறுமனே சாதனையா மட்டும் இது இருக்கக் கூடாதுங்கிறதுக்காக 'புவி வெப்ப மயமாதல்’ங்கிற கான்செப்டை எடுத்துக்கிட்டேன். வாகனப் புகை, சுற்றுச்சூழல் சீர்கேடுனு குளோ பல் வார்மிங்குக்குப் பல காரணங்கள். நம்மைத் தாங்கற இந்த பூமியை நாம காப்பாத்தத் தவறி டுறோம். நாம இந்த பூமியைக் காப்பாத்தலைனா அது நம்மைக் காப்பாத்தாது.

அதனாலதான் எரியற அக்கினிக் குண்டம் மாதிரி பூமியை உப்புக் கோலத்தால வரைஞ்சேன். 'இயற்கையைக் காப்பாற்றினால்தான் எதிர்காலம் இருக்கும்’கிறதை மையமாவெச்சு 'நேச்சர் ஃபார் ஃப்யூச்சர்’னு தலைப்புவெச்சேன். இந்த சந்தோஷம் அடுத்தடுத்து பல சாதனை களுக்கு உதவும்னு நம்பறேன்'' என்கிறார் சரிதா. நிச்சயமா!

உப்புக் கோலத்தில் உலக வெப்பம்!
உப்புக் கோலத்தில் உலக வெப்பம்!

- கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism