Published:Updated:

ரோஹித் - டி காக்கின் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப்; அதிரடி பாண்ட்யா... ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை!

ராஜஸ்தான் அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

ரோஹித் - டி காக்கின் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப்; அதிரடி பாண்ட்யா... ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை!

நடப்பு ஐபிஎல் தொடரின் 27-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. ராஜஸ்தான் அணியில் காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் இந்தப் போட்டியில் விளையாடவில்லை அவருக்குப் பதிலாக லிவ்விங் ஸ்டோன், ரியான் பிராய் பதிலாக கெளதம் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில் கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் ரோகித் ஷர்மா அணிக்குத் திரும்பினார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ரோஹித் ஷர்மா, டி காக் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களில் பொறுமையாக விளையாடிய இந்த ஜோடி அதன் பின்னர் அதிரடியாக விளையாடினர். முதல் 10 ஓவரில் விக்கெட் இழக்காமல் ஆடினர். இவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் ஷர்மா 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறிது நேரத்தில் வெளியேறினார். கொல்கத்தா அணிக்கு எதிராக மிரட்டிய பொல்லார்ட் இந்தப் போட்டியில் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஆர்ச்சர் பந்துவீச்சில் பொல்லார்ட் நடையைக் கட்டினார்.

ரோஹித் - டி காக்கின் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப்; அதிரடி பாண்ட்யா... ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை!

இதற்கிடையில் குயிண்டன் டி-காக் தனது 8-வது ஐபிஎல் அரைசதத்தை அடித்தார். டி காக் - ஹர்திக்பாண்ட்யா இணை அதிரடியில் களமிறங்கியது. ஆர்ச்சரின் வீசிய 19வது ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி விளாசியா டி-காக் அடுத்த பந்தில் அவுட்டானார். அந்த ஓவரில் ஒரு மினி ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தினார் ஹர்திக் பாண்ட்யா. 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 81 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், குல்கர்னி, உனட்கட் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.