Published:Updated:

ஒரே ஓவரில் 28 ரன்கள் குவித்த பட்லர்... இறுதியில் போராடிய பௌலர்கள்... சொந்த ஊரில் மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்! #MIvsRR

ஒரே ஓவரில் 28 ரன்கள் குவித்த பட்லர்... இறுதியில் போராடிய பௌலர்கள்... சொந்த ஊரில் மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்! #MIvsRR
ஒரே ஓவரில் 28 ரன்கள் குவித்த பட்லர்... இறுதியில் போராடிய பௌலர்கள்... சொந்த ஊரில் மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்! #MIvsRR

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது ராஜஸ்தான் அணி.

Photo Credits: iplt20.com

மும்பை இந்தியன்ஸ் அணி வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. மைதானமே நீள நிறத்தில் காட்சியளித்தது. கடந்தப் போட்டியில் பலம் வாய்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய தெம்பில் களமிறங்கியது மும்பை. சென்னை அணியிடம் அடைந்த தோல்வியால் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்ட ராஜஸ்தான் அணி கட்டாயம் வெற்றி
பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் விளையாடியது. கடந்தப் போட்டியில் ஆடாத மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாடினார். ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை. ஸ்டோக்ஸுக்கு பதிலாக லிவ்விங் ஸ்டோன், ரியான் பிராய் பதிலாக கெளதம் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.

Photo Credits: iplt20.com

கே.கே.ஆர் அணிக்கு எதிராக பொல்லார்ட் விளாசியது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக கடந்தப்போட்டியில் சென்னை அணி கடைசி ஒவரில் வெளுத்தனர்.  இதன் காரணமோ என்னவோ டாஸ் வென்றவுடன் பந்துவீச்சை தேர்வு செய்தார் ரஹானே. அப்போது பேசியவர் இந்தப்பிட்ச் எப்படி இருக்கும் என உறுதியாக தெரியாது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடிவுள்ளோம் கடுமையான சூழ்நிலைகளில் நன்றாக விளையாட வேண்டும் எனப் பேசினார்.

Photo Credits: iplt20.com


மும்பை அணிக்கு ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக் இருவரும் அற்புதமான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். மும்பை அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் விளையாடினர். இவர்கள் இருவரும் ரன் ரேட்டையும் சிறப்பாக மெயிண்டன் செய்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியை ஆர்ச்சர் பிரித்தார்.  47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் ஷர்மா அவுட்டானார். இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறிதுநேரத்தில் வெளியேறினார். கே.கே.ஆர் அணிக்கு எதிராக மிரட்டிய பொல்லார்டும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஆர்ச்சர் அவரையும் காலி செய்தார்.

Photo Credits: iplt20.com

இதற்கிடையில் டி-காக் தனது 8-வது ஐபிஎல் அரைசதத்தை அடித்தார். இறுதியில் ஹர்திக் - டி காக் இருவரும் மும்பையின் ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் அதிரடியில் களமிறங்கினார். டி காக் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆர்ச்சர் பந்துவீச்சில் அவுட்டானார்.இந்தப்போட்டியில் முக்கியமான விக்கெட்டுகளை ஆர்ச்சர் கைப்பற்றினார். முடிவில் மும்பை அணி  5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 81 ரன்களை எடுத்தார். 


பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானே - ஜோஸ் பட்லர் இருவரும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக்கொடுத்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்திருந்தனர்.  37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ருணால் பாண்ட்யா பந்துவீச்சில் அவுட்டானார். இதனையடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார். பட்லருக்கு, சஞ்சு சாம்சன் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். இந்த இணை ஆடிய விதத்தை பார்த்தபோது 15-வது ஒவரிலே மேட்ச் முடிந்துவிடும் என்பது போல் இருந்தது.

Photo Credits: iplt20.com

10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் பட்லர் அதிரடியில் களமிறங்கினார். சிக்ஸரும். பவுண்டரிகளுமாக விளாசினார். ஜோசப் வீசிய 13-வது ஓவரில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என 28 ரன்களை திரட்டினார் ஜாஸ் பட்லர். 13 ஒவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. ஆனால் அதற்கு அடுத்த ஓவரில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்ட பட்லர் கேட்ச் ஆகி வெளியேறினார். அவர் 43 பந்துகளில் 89 ரன்களை எடுத்திருந்தார். ரன்கள் குறைவாக இருந்ததால் அடுத்து களமிறங்கிய ஸ்மித் நிதானமாகவே விளையாடினார். 

Photo Credits: iplt20.com

சஞ்சு சாம்சன் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய த்ரிபாதி சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு க்ருணால் பாண்ட்யா ஓவரில் அவுட்டானார். அதே ஓவரில் லிவிங் ஸ்டோன் அவுட்டாக மேட்ச் விறுவிறுப்பை அடைந்தது.  18-வது ஓவரை விசிய பும்ராவின் முதல் பந்தில் ஸ்மித் அவுட்டாக ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி ஓவருக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். முதல் பந்தை ஸ்ரேயாஸ் கோபால் தூக்கி அடிக்க அதனை மும்பை வீரர்கள் கோட்டை விட்டனர். ஒரு வழியாக 3வது பந்தில் பவுண்டரி விளாசி ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தார் ஸ்ரேயாஸ் கோபால்.  ராஜஸ்தான் 19.3 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது ராஜஸ்தான் அணி.