Published:Updated:

"மனசுக்குப் பிடிச்ச மனைவி, பிள்ளைகள்னு பழநிமலை முருகன் எல்லாம் அருளியிருக்கான்!" - நடிகர் பரணி #WhatSpiritualityMeansToMe

"மனசுக்குப் பிடிச்ச மனைவி, பிள்ளைகள்னு பழநிமலை முருகன் எல்லாம் அருளியிருக்கான்!" - நடிகர் பரணி #WhatSpiritualityMeansToMe

"முதல் படமே ஷங்கர் சார் தயாரிச்ச 'கல்லூரி' படத்துல நடிக்கற வாய்ப்பு கிடைச்சுது. தொடர்ந்து 'நாடோடிகள்', விஜய் டி.வி-யின் 'அச்சம் தவிர்', 'பிக்பாஸ்' நிகழ்ச்சின்னு நானும் நாலுபேருக்குத் தெரியற மாதிரி வளர்ந்திருக்கேன்னா, அதுக்குக் காரணம் முருகனோட அருள்தான்."

"மனசுக்குப் பிடிச்ச மனைவி, பிள்ளைகள்னு பழநிமலை முருகன் எல்லாம் அருளியிருக்கான்!" - நடிகர் பரணி #WhatSpiritualityMeansToMe

"முதல் படமே ஷங்கர் சார் தயாரிச்ச 'கல்லூரி' படத்துல நடிக்கற வாய்ப்பு கிடைச்சுது. தொடர்ந்து 'நாடோடிகள்', விஜய் டி.வி-யின் 'அச்சம் தவிர்', 'பிக்பாஸ்' நிகழ்ச்சின்னு நானும் நாலுபேருக்குத் தெரியற மாதிரி வளர்ந்திருக்கேன்னா, அதுக்குக் காரணம் முருகனோட அருள்தான்."

Published:Updated:
"மனசுக்குப் பிடிச்ச மனைவி, பிள்ளைகள்னு பழநிமலை முருகன் எல்லாம் அருளியிருக்கான்!" - நடிகர் பரணி #WhatSpiritualityMeansToMe

'ல்லூரி' என்ற திரைப்படத்தில் அறிமுகமான பரணிக்கு,  'நாடோடிகள்' திரைப்படமும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியும் வெளிச்சம் தந்தன. நிறைய கனவுகளோடு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஆர்வமிக்க இளைஞர். 'நாடோடிகள்' பாகம் இரண்டில் நடித்து முடித்து, தற்போது அதன் வெளியீட்டுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். 

பரணியின் ஆன்மிகத் தேடல் விசாலமானது. குறிப்பாக, தீவிர முருக பக்தர். முருகனைப் பற்றி நேரம்போவது தெரியாமல் பேசுகிறார். 

''பழநி மலைக்குப் படியேறிப்போய் ராஜ அலங்காரத்துல முருகனைப் பார்க்கறப்போ எனக்கு ஏற்படற பரவசத்தை வார்த்தைகள்ல விவரிக்க முடியாது. அப்படியான சந்தோஷ அனுபவம் அது...'' என்கிற பரணி, தான் முருக பக்தரான விதம் பற்றி நெகிழ்ச்சியும் சிலிர்ப்புமாகப் பேசுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்க அம்மாச்சி (அம்மாவின் அம்மா) பேரு நாதாயி அம்மாள். முருகனிடம் அவங்களுக்கு ரொம்பவே பக்தி. பேச ஆரம்பிச்சாலே 'முருகா, முருகா'ன்னு சொல்லிட்டுத்தான் பேச ஆரம்பிப்பாங்க. ஒரு இடத்தை விலைக்கு வாங்கணும்னாலும், யாருக்காவது கல்யாணம் செஞ்சு வைக்கணும்னாலும் முருகனை வேண்டிக்கிட்டுத்தான் செய்வாங்க. 

காய்ச்சல், தலைவலி வந்தாக்கூட கை நிறைய விபூதியை அள்ளி பூசிக்குவாங்க. மத்தவங்களுக்கும் இதைத்தான் செய்வாங்க. அவங்களோட கைராசி, விடிஞ்சு பார்த்தா, காய்ச்சலும் தலைவலியும் போன இடம் தெரியாது. அக்கம்பக்கத்துல இருக்கறவங்களுக்குகூட உடம்புக்கு முடியலைன்னா, விபூதி பூசி விடுவாங்க. அதனால எங்க ஏரியாவுல அவங்களைத் தெரியாதவங்களே இல்லை. அவங்கதான் என்னோட முருக பக்திக்குக் காரணம். 

மதுரை, தெப்பக்குளம் பக்கத்துல இருக்கற சௌராஷ்டிரா ஸ்கூல்லதான் நான் படிச்சேன். நல்லால்லாம் படிக்க மாட்டேன். அடிக்கடி ஸ்கூலுக்கு மட்டம் போட்டுடுவேன். 'பேரன் இப்படி இருக்கானே'ன்னு எங்க அம்மாச்சி கவலைப்பட்டுக்கிட்டு, ஒரு ஜோசியர்கிட்ட என்னோட ஜாதகத்தைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னாங்க. ஜாதகத்தைப் பார்த்த ஜோசியர், 'காலையில் எழுந்திரிச்சதும் மூணு குடம் தண்ணி எடுத்துக்கிட்டு வந்து பிள்ளையாருக்கு ஊத்தி கும்பிடச் சொல்லுங்க. 48 நாள் தொடர்ந்து செஞ்சாதான் உங்க பேரனுக்கு நல்ல புத்தி வரும்'னு சொல்லிட்டாரு. அம்மாச்சி சொன்னதைக் கேட்டு நானும் தட்டமுடியாம அப்படியே செஞ்சேன். அப்படி வந்ததுதான் கடவுள் நம்பிக்கை.

எங்க அம்மாச்சி வருஷத்துக்கு  ஒருதடவை மாலை போட்டு விரதமிருந்து, பழநிக்குப் பாதயாத்திரையா போவாங்க. நான் எட்டாவது படிக்கும்போதே அவங்கக்கூட பாதயாத்திரையா பழநிக்குப் போக ஆரம்பிச்சேன். பத்தாவது படிக்கறப்போ நானே தனியா போக ஆரம்பிச்சுட்டேன். நான் போறேன்னு தெரிஞ்சாலே உறவுக்காரங்க, நண்பர்கள்னு சேர்ந்துக்குவாங்க. மதுரையிலேர்ந்து பழநிக்கு 117 கி.மீ. தொலைவு. மூணு நாள்ல போய் சேர்ற மாதிரி திட்டம் போடுவோம். ஆனா, சாமியோட அருளால ரெண்டு நாள்லயே போயிடுவோம். அதுவும் பக்திப் பரவசமா அருள் வந்து போகும்போது முதல் நாளே 65 கி.மீ நடந்திருப்போம். போற வழியில் இருக்கற ஆறுகள். விவசாய பம்ப்செட்டுகள்ல குளிச்சிக்கிட்டே போவோம். வழியில அங்கங்கே என்ன கெடைக்குதோ அதைச் சாப்பிடுவோம்.  

பழநிமலையில படியேறிப் போய் ராஜ அலங்காரத்துல முருகனைப் பார்க்கிறப்போ மனசுல ஒரு பரவசம் வரும் பாருங்க, அதை வார்த்தைகள்ல விவரிச்சு சொல்ல முடியாது. அப்படி ஒரு சந்தோஷத்துல மனசு துள்ளும். ராத்திரி வரைக்கும் மலையில் இருந்துட்டு, தங்கத் தேர் பார்த்துட்டுத்தான் ஊருக்கு வருவோம். முருகனை நெனைச்சுக்கிட்டு என்ன வேண்டிக்கிட்டாலும், அது நிச்சயம் நடந்துடும். கஷ்டம்னு வந்துட்டா நான் முதல்ல நினைக்கறது முருகனைத்தான். 

என்னைவிட நல்ல திறமைசாலிங்க எவ்வளவோ பேர் இருக்காங்க. என்னைவிட வசதியானவங்க எத்தனையோ பேர் சினிமா வாய்ப்புக்காகக் காத்துக் கிடக்கிறாங்க. அப்படியிருந்தும் முதல் படமே ஷங்கர் சார் தயாரிச்ச 'கல்லூரி' படத்துல நடிக்கற வாய்ப்பு கிடைச்சுது. தொடர்ந்து 'நாடோடிகள்', விஜய் டி.வி-யின் 'அச்சம் தவிர்', 'பிக்பாஸ்' நிகழ்ச்சின்னு நானும் நாலுபேருக்குத் தெரியற மாதிரி வளர்ந்திருக்கேன்னா, அதுக்குக் காரணம் முருகனோட அருள்தான். அதனால மனசுல தோணறப்பல்லாம் மஞ்ச வேஷ்டியைக் கட்டிக்கிட்டு மாலையைப் போட்டுக்கிட்டு முருகனைப் பார்க்கக் கிளம்பிடுவேன்.

வருஷா வருஷம் ஜனவரி முதல் நாள்ல நான் பழநியிலதான் இருப்பேன். வருஷத்துக்கொரு முறை ஆறுபடை வீடுகளுக்கும் கார்ல ஒரே பயணமா போயிட்டு வருவேன். இன்னிக்கு மனசுக்குப் பிடிச்ச மனைவி, குழந்தைங்களோட பேரும் புகழுமா மகிழ்ச்சியா இருக்கறதுக்கு நான் முருகனுக்குத்தான் நன்றி சொல்லணும்'' என்று முருகனுக்கும் தனக்குமான பக்திபூர்வமான தொடர்பை நெகிழ்ச்சியும் சிலிர்ப்புமாகப் பகிர்ந்துகொண்டார்.