Published:Updated:

`கார்டன் இன் கிளாஸ்...' பசுமைக் காதலர்களே... இது உங்களுக்கான ஐடியா!

`கார்டன் இன் கிளாஸ்...' பசுமைக் காதலர்களே... இது உங்களுக்கான ஐடியா!
`கார்டன் இன் கிளாஸ்...' பசுமைக் காதலர்களே... இது உங்களுக்கான ஐடியா!

மீன்கள் வளர்க்கும் கண்ணாடி தொட்டியை மட்டுமே அலங்கரித்து வந்த இந்த கான்சப்ட், மக்களைத் தனியாக ஈர்த்திருப்பதற்குக் காரணம் அதிலிருக்கும் அழகியல்தான்.

சுமை படர்ந்த புல்வெளி, துள்ளிக் குதிக்கும் மான்குட்டி, அங்கும் இங்குமாக ஓடும் முயல் எனக் குட்டியாக ஒரு தோட்டம் கண்ணாடிக் குடுவைக்குள் இருந்தால்... நினைத்துப்பார்க்கவே அழகாய் இருக்கிறதல்லவா! `கார்டன் இன் கிளாஸ்’ என்ற கான்சப்ட்தான், இப்போது உள் அலங்காரச் செடி வளர்ப்பில் பிரபலம். பசுமை படர்ந்திருக்கும் சோலையை, பக்குவமாய்க் கண்ணாடிக்குள் கொண்டுவருவதை கான்சப்ட்டாக மாற்றியிருக்கின்றனர் பசுமைக் காதலர்கள். 

செயற்கைத் தாவரங்கள் இதில் பயன்படுத்தப்பட்டாலும், இயற்கை கொடுக்கும் உணர்வை செயற்கை தருவதில்லை என்பதால், அதை யாரும் பெரிதாய் விரும்புவதில்லை. மீன்கள் வளர்க்கும் கண்ணாடித் தொட்டியை மட்டுமே அலங்கரித்து வந்த இந்த கான்சப்ட், மக்களை தனியாக ஈர்க்கக் காரணம், அதிலிருக்கும் அழகியல். நமக்குப் பிடித்த பசுமையான உலகத்தில், நம்மால் வாழ முடியாமல்போகலாம். ஆனால், நமக்குப் பிடித்த மாதிரியான பசுமை உலகத்தை உருவாக்க முடியும் என்றால், அது இந்த கான்சப்ட்டில் சாத்தியம்.

பல்பு டெரரியம்

`கார்டன் இன் கிளாஸ்...' பசுமைக் காதலர்களே... இது உங்களுக்கான ஐடியா!

பல்பு மற்றும் முட்டை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் குடுவைக்குள் குட்டிக் குட்டியான தாவரங்கள், வண்ண வண்ணக் கற்களை வைத்துப்பார்க்கும்போது மிகவும் அழகாய் இருக்கிறது. இந்தக் கண்ணாடிக் குவளைகளை, அதற்கெனத் தயாரிக்கப்பட்டிருக்கும் ஸ்டேண்டுகளில் வைத்தோ அல்லது கயிற்றால் கட்டியும் தொங்கவிடலாம். 

தற்போது, கடல்வாழ் உயிரினங்களை எதிரொலிக்கும் டெரரியம்தான் பிரபலமாக இருக்கிறது. காட்டுவிலங்குகளை மையப்படுத்தி, பாலைவனத் தாவரங்களைக்கொண்டு எனப் பல்வேறு தீம்களில் கண்ணாடிக்குள் கார்டன்கள் உருவாக்கப்படுகின்றன. வீட்டின் வரவேற்பு அறைகள், படுக்கை அறைகள், ஷோகேஸ்கள் என வீட்டையே இந்த கான்சப்ட் மூலம் பரவசப்படுத்தலாம். உருளை, சாய் உருளை, நீள்வட்டம், பாட்டில்கள் என கார்டன் அமைப்பதற்காகவே கண்ணாடிக் குடுவைகள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. செடிகளுக்கு ஏற்ப மெல்லியவை, தடித்தவை என அதன் தரத்திலும் வித்தியாசம் இருக்கிறது. அதேபோல உயரமானவை, உயரம் குறைவானவை என அளவிலும் வித்தியாசப்படுகின்றன.

பராமரிப்பு முக்கியம்

கண்ணாடி கார்டன்களுக்காக தேர்வுசெய்யும் தாவரங்களுக்கு, குறைவான நீரே போதுமானதாக இருக்கும். ஆனால், இந்த வகை தாவரங்களை நேரடியாகச் சூரிய வெளிச்சம் படும் இடங்களில் வைக்கக் கூடாது. தாவரங்களுக்கு ஏற்ற கண்ணாடிக் குடுவைகளைத் தேர்வுசெய்வதில் கவனம் மிக முக்கியம். குடுவையில் வளரும் செடியிலிருந்து ஓர் இலை வாடினாலோ அல்லது அழுகல் ஏற்பட்டாலோ அதை உடனே கிள்ளி எறிவது நல்லது. இல்லையென்றால், அது மற்ற இலைகளையும் பாதிக்கும். மேலும், தாவரங்கள் கண்ணாடிக் குடுவைகளுக்கு மேல் வளர்ந்துவிடாமல் பராமரிப்பது மிகமிக முக்கியம்.

`கார்டன் இன் கிளாஸ்...' பசுமைக் காதலர்களே... இது உங்களுக்கான ஐடியா!

ஒரு குடுவைக்குள் ஒரே மாதிரியான தாவரங்களை வளர்ப்பதுதான் நல்லது. வெவ்வேறு வகையான தாவரங்களை ஒரே குடுவைக்குள் வளர்த்தால் முறையாகப் பராமரிக்க முடியாமல்போய்விடும். செடிகளை கண்ணாடிக் குடுவைக்குள் வைப்பதற்கு முன்பாக, சில அங்குல அளவில் சார்கோல் (கரி) லேயரை ஏற்படுத்துவது அவசியம். இந்த லேயர்தான் பாக்டீரியாக்களிலிருந்தும் பூஞ்சைகளிலிருந்தும் செடிகளைப் பாதுகாக்கும். 

கார்டன் அக்ஸசரீஸ்கள்

`கார்டன் இன் கிளாஸ்...' பசுமைக் காதலர்களே... இது உங்களுக்கான ஐடியா!

கண்ணாடி கார்டன்களுக்காகவே பிரத்யேகமாக அக்ஸசரீஸ்கள் இருக்கின்றன. வனவிலங்குகள், வீடு, செயற்கை நீர்வீழ்ச்சி, கலர்ஃபுல் காளான்கள், வித்தியாசமான கார்ட்டூன் பொம்மைகள், சங்கு என அவற்றின் பட்டியல்கள் நீளும். கண்ணாடி கார்டனுக்கு அழகு சேர்க்க  மஞ்சள், பச்சை, சிவப்பு, வெள்ளை என கிளிட்டர் கற்களும் வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. குடுவைக்குள் கற்கள் மற்றும் மணல் லேயர்களை அமைக்கும்போது, நிறமூட்டப்பட்ட மணலைக்கொண்டும் டிசைன் செய்யப்படுகிறது. இந்த மணலின் நிறத்தை வீட்டுச்சுவரின் வண்ணத்துக்கு ஏற்பவும் தேர்வுசெய்துகொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு