Published:Updated:

டெஸ்ட்டிங்கில் புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் & தண்டர்பேர்டு... என்ன எதிர்பார்க்கலாம்?

டெஸ்ட்டிங்கில் புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் & தண்டர்பேர்டு... என்ன எதிர்பார்க்கலாம்?

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பைக்கின் டிசைன் தவிர மெக்கானிக்கல் அம்சங்களிலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.

டெஸ்ட்டிங்கில் புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் & தண்டர்பேர்டு... என்ன எதிர்பார்க்கலாம்?

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பைக்கின் டிசைன் தவிர மெக்கானிக்கல் அம்சங்களிலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.

Published:Updated:
டெஸ்ட்டிங்கில் புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் & தண்டர்பேர்டு... என்ன எதிர்பார்க்கலாம்?

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் சீரிஸ்... சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த நிறுவனத்தின் பைக் விற்பனையை, 2009-ம் ஆண்டு முதல் தூக்கி நிறுத்திச் சுமக்கும் பைக்; ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டாப்-15 டூ-வீலர்களில் தவிர்க்க முடியாத வாகனமாகத் திகழும் இதன் பேஸ்லிஃப்ட் மாடலைத் தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இடையே புதிய கலர் ஆப்ஷன்கள், ஸ்பெஷல் எடிஷன்கள், ரியர் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் எனச் சின்னச் சின்ன அப்டேட்கள் வந்தாலும், முழுமையான ஒரு மாற்றம் க்ளாசிக் சீரிஸுக்கு நிச்சயம் தேவைப்படவே செய்கிறது.

ஏனெனில், டூரிங்/க்ரூஸர் பைக் செக்மென்ட்டில் ஜாவா சீரிஸ், க்ளீவ்லேண்டு ஏஸ் டீலக்ஸ்/Misfit, மோஜோ XT/UT, டொமினார் D400, UM ரெனிகாடே, அப்பாச்சி RR310, CBR 250R எனப் போட்டி வலுத்துக்கொண்டே செல்வது இதற்கான முக்கியக் காரணம். இந்நிலையில் சென்னையில் புதிய க்ளாசிக் மற்றும் தண்டர்பேர்டு பைக்குகள் டெஸ்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது அதைப் படம்பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோ.வி வாசகர்களான அர்ஜுன் மற்றும் நாகா.

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பைக்கின் டிசைன் தவிர மெக்கானிக்கல் அம்சங்களிலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. இடதுபக்கத்தில் செயின் ஸ்ப்ராக்கெட் மற்றும் வலதுபக்கத்தில் Bybre டிஸ்க் பிரேக்ஸ் இருப்பதே அதற்கான முதல் உதாரணம். எக்ஸாஸ்ட் பைப் தற்போதைய டிசைனிலேயே இருந்தாலும், அதன் அளவு முன்பைவிட கொஞ்சம் சிறிதாகியிருக்கிறது. இதை வைத்துப்பார்க்கும்போது, BS-6 மாசு விதிகளுக்கு உட்பட்ட புதிய இன்ஜின், இந்த பைக்கில் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இதில் ஹிமாலயன் பைக்கைப்போலவே, Kick Lever வழங்கப்படாமல் இருப்பதற்கான சாத்தியம் அதிகம்! தற்போதைய மாடலில் ட்வின் கேஸ் ஷாக் அப்சார்பர் இருக்கும் நிலையில், புதிய மாடலில் ரெட்ரோ பைக்குகளில் இருப்பதுபோன்ற ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரே பொருத்தப்படும். முன்பக்க  ரைடர் சீட் அதேதான் என்றாலும், பில்லியன் சீட் கூடுதல் குஷனிங்குடன் இருக்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கு தண்டர்பேர்டு பைக்கில் இருப்பதுபோன்ற Alloy Backrest வழங்கப்பட்டிருப்பது பிளஸ். மற்றபடி நீளமான ஃபெண்டர்கள், க்ரோம் ஃபினிஷ் உடனான வட்டவடிவ ஹெட்லைட் - இண்டிகேட்டர்கள் - ரியர் வியூ மிரர்கள் - டெயில் லைட் - Flat ஹேண்டில்பார், அதே ஸ்விட்ச்கள் - முன்பக்க சஸ்பென்ஷன் - டயர்கள் - சேஸி தொடர்கின்றன. இருப்பினும் இவற்றில் சிறிய முன்னேற்றம் இருக்கலாம். அனலாக் ஸ்பீடோ மீட்டரில் புதிதாக டிஜிட்டல் ஸ்க்ரீனைப் பார்க்க முடிகிறது. ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜினில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - ஆயில் கூலிங் இருக்கலாம். முன்னர் சொன்ன விஷயங்கள் அனைத்துமே, புதிய தண்டர்பேர்டு பைக்கிலும் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக இதன் மாடர்ன் டிசைனுக்கு ஏற்ப Y-Spoke அலாய் வீல்கள், சிறிய ஃபெண்டர்கள், மாற்றியமைக்கப்பட்ட டெயில் பகுதி, 20 லிட்டர் பெட்ரோல் டேங்க்கின் நடுப்பகுதிக்கு வந்திருக்கும் மூடி, மெட்டல் கிராப் ரெயில், ஸ்ப்ளிட் சீட்கள் எனப் புதிய விஷயங்கள் இருந்தாலும், Alloy Backrest மிஸ்ஸிங் என்பது மைனஸ். இந்தப் புதிய மாடல்கள் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism