Published:Updated:

அந்தப் பழைய ஜீன்ஸ், புடவைக் காதலி, ஹீல்ஸ் ஃபேவரைட்! - ’திருமணம்’ ப்ரீத்தி ஷர்மாவின் ஃபேஷன்ஸ்

அந்தப் பழைய ஜீன்ஸ், புடவைக் காதலி, ஹீல்ஸ் ஃபேவரைட்! -  ’திருமணம்’ ப்ரீத்தி ஷர்மாவின் ஃபேஷன்ஸ்
அந்தப் பழைய ஜீன்ஸ், புடவைக் காதலி, ஹீல்ஸ் ஃபேவரைட்! - ’திருமணம்’ ப்ரீத்தி ஷர்மாவின் ஃபேஷன்ஸ்

"ஏழாம் வகுப்புப் படிக்கும்போதுதான் அப்பா என் பிறந்தநாளுக்கு ஒரு ஜீன்ஸ் வாங்கிக் கொடுத்தாங்க. அந்த பேன்ட் எப்போதும் எனக்கு ஸ்பெஷல். எத்தனை புது டிரெஸ் வந்தாலும் என் வார்ட்ரோப்பில் அந்த பழைய ஜீன்ஸ் இன்னும் இருக்கு."

மாடலிங் மற்றும் டெலி ஃபிலிம் மூலமாக தன் மீடியா பயணத்தை தொடங்கியவர் ப்ரீத்தி ஷர்மா. தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் 'திருமணம்' சீரியல் மூலமாக சின்னத்திரையில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார். கண்கள் மூலம் இவர் கொடுக்கும் க்யூட்டான ரியாக்‌ஷன்களுக்கு ரசிகர்கள் அதிகம். சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோயர்கள் கொண்ட ப்ரீத்தி தன் ஆடைத்தேர்வு மற்றும் மேக்கப் பற்றி நம்மிடம் பகிர்கிறார்.

ஆடைத்தேர்வு

''என்னை எப்போதும் சிம்பிள் அண்டு நீட் லுக்கில் காட்டிக்கொள்ளத்தான் எனக்குப் பிடிக்கும். டிரெஸ் விஷயத்தில் நிறைய மெனக்கெடுவேன். டிரெண்டையும் அப்டேட் பண்ணிப்பேன். என்னதான் புதுசு புதுசா டிரெண்ட் வந்தாலும் எனக்கு என்ன சூட் ஆகுமோ அது மட்டும்தான் எப்போதும் என் சாய்ஸா இருக்கும். எனக்குப் புடவை ரொம்பப் பிடிக்கும். பெரிய கலெக்‌ஷன் வெச்சிருக்கேன். பிளவுஸை பொறுத்தவரை பேக் ஓப்பன், க்ளோஸ் நெக் என விதவிதமான பேட்டர்ன்களில் புடவையின் மெட்டீரியலுக்கு தகுந்தாற்போல் வடிவமைத்துக்கொள்வேன். சீரியலில் மிடில் கிளாஸ் காலேஜ் பொண்ணு கேரக்டர் என்பதால் சிம்பிளான சல்வார்தான் என் கேரக்டருக்கு பொருத்தமான ஆடையாக இருக்கும். ஆனாலும் ஒரே மாதிரியான சல்வார்களாக இல்லாமல் பாந்தினி, லினன், காட்டன், சிந்தடிக் என மெட்டீரியலிலும், பேட்டர்னிலும் வித்தியாசம் காட்டுறேன். என் ஆடைத்தேர்வுக்கு காலேஜ் பொண்ணுங்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.

அக்ஸசரீஸ்

ஷூ மற்றும் செப்பல் மீது  எனக்கு பயங்கர கிரேஸ். எப்போ ஷாப்பிங் போனாலும் வித்தியாசமான ஹீல்ஸ் ஒண்ணு வாங்கிட்டு வந்துடுவேன். எல்லா கலர்ஸ்லேயும் ஷூ இருக்கு என்கிட்ட. சீரியலைப் பொறுத்தவரை ஹோம்லி லுக்கிற்காக விதவிதமான ஜிமிக்கி கம்மல்களைத் தேர்வு செய்து அணியுறேன். ஆக்ஸிடைஸ்டு கம்மல் வகைகள் என்கிட்ட நிறைய இருக்கு. கிராண்டான டிரெஸ் அணியும்போது வித்தியாசமான நெக் பீஸ்கள் அணிந்துகொள்ளப் பிடிக்கும்.

ஷாப்பிங்

ஷாப்பிங் என் மனசுக்கு நெருக்கமான ஒரு விஷயம். எந்த ஒரு பொருளையும்  வாங்குவதற்கு அதிக  நேரம் எடுத்துக்க மாட்டேன். பிடிச்சிருந்தா பூவா தலையா பார்க்காம உடனே வாங்கிருவேன். அதுவே ஆடைகளைப் பொறுத்தவரை போட்டுப் பார்த்து கண்ணாடி என்ன சொல்லுதோ அதைத்தான் கேட்பேன். என் தோற்றத்தை பார்த்து நான் இம்ப்ரஸ் ஆனால்தான் அந்த டிரெஸ்ஸை வாங்குவேன். சீரியலில் இப்போ பிஸியா இருப்பதால் என்னுடைய டிசைனர்கிட்ட கதைகளின் நகர்வுகளைச் சொல்லிருவேன். எபிசோடுகளுக்கு ஏற்ப நிறம் மற்றும் டிசைன்களை அவங்களே தேர்வு செய்து ரெடி பண்ணி கொடுத்துடுவாங்க.

நிறத்தேர்வு

டார்க் புளூ நிறமென்றால் கொள்ளை இஷ்டம். ஸ்கூல், காலேஜ் போகும்போது புளூ டாமினேட்டிங்கா இருக்கும் மிக்ஸ் மேட்ச் ஆடைகள்தான் எப்போதும் என் தேர்வாக இருக்கும். சீரியலில் மக்களுக்கு போர் அடிச்சிடும் என்பதால் எல்லா கலர்  ஆடைகளையும் தேர்வு செய்து அணியுறேன். வார்ம் கலர்ஸ் மற்றும் பேஸ்டல் கலர்ஸ் என் ஸ்கின் டோனுக்கு பொருந்திப்போகும் என்பதால் சீரியலில் அந்த கலர்ஸ் ஆடைகளை அதிகம் பயன்படுத்துறேன்.

ஆன்லைன் ஷாப்பிங்

பார்க்கிறது எல்லாம் பிடிச்சுப்போகும் பள்ளிப் பருவத்தில் ஆன்லைன் ஷாப்பிங் நிறையப் பண்ணுவேன். ஆனா அதில் மெட்டீரியல்கள் தரமானதா இல்லைனு எங்கம்மா அடிக்கடி சொல்லிட்டேயிருப்பாங்க. அதனால் ஆன்லைன் ஷாப்பிங் இப்போ பண்றதில்லை. ஃபேஷன் அப்டேட்கள் மட்டும் ஆன்லைன்ல பார்த்து தெரிஞ்சுக்குவேன்.

மறக்கமுடியாத டிரெஸ்

சின்ன வயசில் ஜீன்ஸ் போட ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா வீட்டுல எப்போதும் கவுன்தான் வாங்கிக் கொடுப்பாங்க. ஒவ்வொரு முறை டிரெஸ் வாங்கும்போதும் நான் ஜீன்ஸ் கேட்டு அடம்பிடிச்சாலும் அது கிடைக்காது. ஏழாம் வகுப்புப் படிக்கும்போதுதான் அப்பா என் பிறந்தநாளுக்கு ஒரு ஜீன்ஸ் வாங்கிக் கொடுத்தாங்க. அந்த பேன்ட் எப்போதும் எனக்கு ஸ்பெஷல். எத்தனை புது டிரெஸ் வந்தாலும் என் வார்ட்ரோப்பில் அந்த பழைய ஜீன்ஸ் இன்னும் இருக்கு.

மேக்கப்

கண்கள்தான் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் என்பதால் எப்போதும் மஸ்காரா போட்டுக்க பிடிக்கும். கண்கள் சார்ந்த மேக்கப்பிற்கு அதிக கவனம் செலுத்துவேன். எனக்கான பேஸிக் மேக்கப்பை நானே போட்டுக்குவேன். ஷூட்டிங் இல்லாத நாள்களில் வெளியே போனால் மஸ்காரா, லிப்ஸ்டிக் தவிர்த்து வேறு எந்த மேக்கப்பும் போட்டுக்க மாட்டேன்.''

ஸ்டே பியூட்டிஃபுல்!

அடுத்த கட்டுரைக்கு