Published:Updated:

``அம்மாவை ஏமாத்திதான் ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப் போனேன்'' - `பாரதி கண்ணம்மா' ஸ்வீட்டி

``அம்மாவை ஏமாத்திதான் ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப் போனேன்'' - `பாரதி கண்ணம்மா' ஸ்வீட்டி
``அம்மாவை ஏமாத்திதான் ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப் போனேன்'' - `பாரதி கண்ணம்மா' ஸ்வீட்டி

"சீரியலில் வர மாதிரி நான் ஆட்டிடியூட் காட்டுற பொண்ணு இல்ல, ரியல் லைஃபில் ரொம்ப ஜாலி டைப் எப்போதும் எதாவது காமெடி பண்ணி சுத்தி இருக்கவங்கள சிரிக்க வெச்சுட்டே இருப்பேன்."

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் ஆட்டிடியூட் காட்டும் பெண்ணாக நெகட்டிவ் ரோலில் நடிப்பவர் 'ஸ்வீட்டி' இவருடைய க்யூட்டான வில்லிதனத்துக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்த ஸ்வீட்டியுடன் ஒரு பர்சனல் சாட்!

"சீரியலில் மாதிரி நான் ஆட்டிடியூட் காட்டுற பொண்ணு இல்ல. ரியல் லைஃபில் ரொம்ப ஜாலி டைப். எப்போதும் ஏதாவது காமெடி பண்ணி சுத்தி இருக்கவங்கள சிரிக்க வச்சுட்டே இருப்பேன். சொந்த ஊர் திருச்சி. சின்ன வயசிலேயே சென்னையில் செட்டிலாகிட்டோம். எனக்கு ஒரு அண்ணா இருக்காங்க. பேங்க்கிங் மேனேஜ்மென்ட் முடிச்சிருக்கேன். வீட்டில் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். ஆனாலும், இப்போ என் கரியரை நானே தேர்வு செய்ய வீட்ல க்ரீன் சிக்னல் கிடைச்சிருக்கு" என்றவரிடம் மீடியா என்ட்ரி பற்றிக் கேட்டோம்.

"எனக்கு சின்ன வயசிலிருந்து டான்ஸ் ரொம்ப பிடிக்கும். வெஸ்டர்ன் டான்ஸ் முறைப்படி கத்துக்கிட்டேன். ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது நிறைய பரிசுகளும் வாங்கியிருக்கேன். ஃபேஷனிலும் அதிக ஆர்வம் உண்டு. சின்ன வயசுல அடிக்கடி அம்மா புடவையை எடுத்து கட்டிப்பேனாம். அம்மா சொல்லுவாங்க. ஸ்கூலுக்குப் போகும்போது லிப்ஸ்டிக் போட்டுட்டு போயி மிஸ்கிட்ட நல்லா திட்டு வாங்கியிருக்கேன். சின்ன வயசுலேயே என்னோட உடைகளை நானே டெக்கரேட் பண்ணியிருக்கேன். அந்தளவுக்கு ஃபேஷன் பைத்தியம் நான். என்னுடைய கரியர் ஒண்ணு ஃபேஷன் பக்கம் போகணும் இல்லாட்டி டான்ஸ் பக்கம் போகணும்ங்கிறதுதான் என்னோட எண்ணமா இருந்தது. ஆனால், அப்பாவோட அட்வைஸ் பி.காம் படிங்குறதுதான். அப்பாவுக்காக பி.காம் படிச்சேன். ஆர்ட்ஸ் மேல இயற்கையாவே ஆர்வம் இருந்ததால ஸ்கூல், காலேஜ்ல சுமாரா படிக்கிற பொண்ணுங்க லிஸ்ட்ல என் பெயர் இருக்கும். அதனாலேயே படிப்பு டார்ச்சர் இல்லாத ஒரு துறையா பார்த்து செட்டில் ஆகணும்னு நினைச்சேன். அந்தச் சமயத்தில்தான் 'கண்ணம்மா' சீரியல் ஆடிஷன் பற்றிக் கேள்விப்பட்டேன். அப்பாகிட்ட சொன்னா 'நோ' சொல்லுவாங்கன்னு தெரியும். அம்மாகிட்ட ஃப்ரெண்டு வீட்டுக்குப் போகலாம்னு பொய் சொல்லி சீரியல் ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப் போயிட்டேன். விஷயம் தெரிஞ்சதும் அம்மா ஷாக் ஆகிட்டாங்க. பிறகு, என்னோட அதிதீவிர இன்ட்ரஸ்டைப் பார்த்துட்டு ஓகே சொன்னாங்க.

நடிப்பில் எந்த அனுபவமும் கிடையாது. ஆடிஷனுக்குள் போனதும் மனசு படபடப்பு ஆயிருச்சு. முதல் டயலாக்கே... 'கண்ணம்மா'வை திட்டுற மாதிரி கொடுத்துப் பேசச் சொன்னாங்க. எப்படியோ பேசி முடிச்சுட்டேன். இந்த சீரியல் தெலுங்கு ரீமேக்ங்கிறதுனால நெகட்டிவ் ரோலுக்குப் பொருந்துற மாதிரியான முகவாகு கொண்ட பொண்ணை டைரக்டர் தேடிட்டு இருந்தாராம். என் முகம் பொருந்திப் போக என்னை செலக்ட் பண்ணினதா சொன்னாங்க. சீரியல் உள்ள வந்ததும் இன்னும் நிறைய மாற்றத்தை முகத்துல காண்பிக்கணும்னு சொன்னார். சரினு சொல்லிட்டு விஷயத்தை அப்பாகிட்ட எப்படி சொல்லப்போறொம்னு தயங்கினேன். ஆரம்பத்துல அப்பாவும் அண்ணாவும் செமையா கோபப்பட்டாங்க. அம்மாதான் எனக்காக அப்பாகிட்ட நிறைய திட்டு வாங்கி கிரீன் சிக்னலை வாங்கிக் கொடுத்தாங்க. என்னோட ஃப்ரெண்ட்ஸ்கூட 'உனக்கு ஸ்மைலிங்க் பேஸ்... வில்லி ரோல் எல்லாம் செட் ஆகாதுனு சொன்னாங்க'' நான்தான் அதையும் கத்துக்கிறேன்னு சொல்லி களத்தில் இறங்கிட்டேன்.

எங்களோட சீரியல் செட்டில் என்னைத் தவிர எல்லாருக்கும் மீடியாவில் ஏதோ முன் அனுபவம் இருந்துச்சு. ஆக்‌ஷன்னு சொன்னதும் எல்லாரும் அந்த கேரக்டராகவே வாழ ஆரம்பிச்சுருவாங்க. நான் மட்டும் பேந்த பேந்த முழிச்சுட்டு டயலாக் பேசவே ரொம்ப சிரமப்படுவேன். நெகட்டிவ் ரோல் என்பதால் முக எக்ஸ்பிரஷன் அதிகம் தேவைப்பட்டுச்சு. அதுக்காக வீட்டிலேயே கண்ணாடி முன்னாடி நின்னு டயலாக்குகளை சொல்லிப் பார்க்க ஆரம்பிச்சேன். என் கேரக்டர் எப்படிப் பேசணும், எப்படி நடக்கணும்னு எல்லாத்தையும் டைரக்டர் பொறுமையா சொல்லிக்கொடுத்தாங்க. செட்டில் என் கூட நடிக்கிற மத்த ஆர்டிஸ்ட் சொல்ற கமென்ட்ஸ்களையும் கேட்டு என்னை அப்டேட் பண்ணிட்டிருக்கேன். இப்போ நல்லா நடிக்கிறதா அப்பாவே என்னைக் கூப்பிட்டு பாராட்டுனாங்க. எனக்காக எல்லா எபிசோடுகளையும் பார்த்துட்டு கரெக்‌ஷன்கள் சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

போன மாசம் ஒரு மாலுக்கு போயிருந்தேன். அங்கே ஒருத்தங்க என்னைப்பார்த்துட்டு நீங்க 'கண்ணம்மா' அஞ்சலிதானேனு கேட்டாங்க. நானும் ஆமான்னு சொல்ல, 'ஏம்மா எப்போ பார்த்தாலும் கண்ணாம்மாவைத் திட்டிட்டிடே இருக்க அந்தப் பொண்ணு பாவம்'னு சொன்னாங்க... மத்தவங்க திட்டும்போது இப்போ எனக்கு ஹேப்பியா இருக்கு. உண்மையில் இதுதான் என் கேரக்டருக்குக் கிடைச்ச வெற்றி. இப்போ மாடலிங் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். அடுத்தடுத்து நிறைய தளங்களில் ஸ்வீட்டியைப் பார்ப்பீங்க" எனப் புன்னகைக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு