Published:Updated:

`சாதிக்க பிறந்தவர்கள்' அமைப்பு நடத்திய திருநங்கைகள் விருது விழா!

`சாதிக்க பிறந்தவர்கள்' அமைப்பு நடத்திய திருநங்கைகள் விருது விழா!
`சாதிக்க பிறந்தவர்கள்' அமைப்பு நடத்திய திருநங்கைகள் விருது விழா!

`சாதிக்க பிறந்தவர்கள்' அமைப்பு நடத்திய திருநங்கைகள் விருது விழா!

'சாதிக்க பிறந்தவர்கள்' சமூக அமைப்பு நடத்திய 7-ம் ஆண்டு `சிகரம் தொட்ட திருநங்கைகள் விருது 2019' நேற்று சென்னையிலுள்ள ராணி சீதை கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். மூத்த திருநங்கை மோகனாம்மா, வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி விருது வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்கள்.

`சாதிக்க பிறந்தவர்கள்' சமூக அமைப்பின் நிறுவனர் ஸ்வேதா பேசியபோது, ``சாதனை படைத்த திருநங்கைகளைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறோம். திருநங்கைகளிலும் சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறோம். திருநங்கை என்றாலே கடை ஏறுவாங்க, பாலியல் தொழில் பண்ணுவாங்க என்கிற காலமெல்லாம் போச்சுங்க. நாங்களும் சாதிக்க ஆரம்பிச்சிட்டோம். எங்களில் பலரும் டாக்டரா, இன்ஜினீயரா, வழக்கறிஞரா இருக்காங்க என்பதில் ரொம்பவே பெருமை கொள்கிறோம்'' என்றார்.

இந்த நிகழ்வில் ஆர்.கே.சுரேஷ், விஜே அர்ச்சனா, சோனியா போஸ், கஸ்தூரி, எஸ்.பி.முத்துராமன் உட்பட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சாதனை படைத்த திருநங்கைகளுக்கு விருது வழங்கிக் கெளரவித்தார்கள்.

சிறந்த திருநங்கை தொழில்முனைவோர், சிறந்த சமூகசேவகி, சிறந்த திருநங்கை மாணவி எனக் கிட்டத்தட்ட பதினைந்து பிரிவுகளுக்கும் மேல் சாதித்த திருநங்கைகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், மூத்த திருநங்கைகளை கவுரவிக்கும் விதமாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்கள். மேலும், மூத்த திருநங்கைகள் ஐந்து பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. 

நடிகர் செளந்தரராஜா பேசும்போது, ``நான் ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினரா போயிருந்தேன். அவங்க உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னு கேட்டாங்க.. எனக்குப் பணமெல்லாம் வேண்டாம். படிக்க வசதியில்லாதவங்க படிக்க இலவசமா ஒரு சீட் கொடுத்தா போதும்னு சொன்னேன். உண்மையாகவே இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசைப்படுற திருநங்கைக்கு அந்த சீட்டை வாங்கிக் கொடுத்தேன்'' என்றார்.

படங்கள்: க. விக்னேஷ்

அடுத்த கட்டுரைக்கு