Published:Updated:

``இலங்கையில் 130 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்!"- அதிபர் அதிர்ச்சி தகவல்

``இலங்கையில் 130 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்!"- அதிபர் அதிர்ச்சி தகவல்
``இலங்கையில் 130 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்!"- அதிபர் அதிர்ச்சி தகவல்

``இலங்கையில் 130 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்!"- அதிபர் அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இலங்கையில் 160 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அதிபர் மைத்ரி பால சிறிசேன அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட சில பகுதிகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதனிடையே நேற்று நீதிமன்றத்துக்கு அருகே ஒரு வெடித்துள்ளது. இதில் உயிர்ச் சேதம் எதுவுமில்லை. இதன் காரணமாக அங்கு மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து அங்குப் பதற்றம் நீடித்து வருகிறது. பாதுகாப்புத்துறை வாகனத் தணிக்கை செய்யப்பட்டுத் தொடர்ந்து கண்காணிப்பு செய்துவருகிறது.  

இந்த நிலையில் அங்குள்ள நிலைமை குறித்து பத்திரிகையாளர் நேசனிடம் பேசினேன். ``அதிபர் மைத்ரி பால சிறிசேன இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ``நாட்டில் 130 ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதோடு அவர்களை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்புத்துறை எடுத்து வருவதாகவும் இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே நேற்று நடந்த மத தலைவர்களுடனான கூட்டத்திற்குப் பிறகு அது குறித்தும் இன்று வெளியிட்ட அந்த அறிக்கையில் சில தகவல்களை சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது, நாட்டில் உள்ள இஸ்லாமியர்களைத் தவறாகக் கருதக் கூடாது. அவர்களிடத்தில் நல்ல சகோதரத்துவத்தையும், நட்பையும் பகிரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்" என்றார் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு