Published:Updated:

`விளம்பரத்துக்கான காசு வரல; வீடும் கிடைக்கல' - தோனிக்கு டிமிக்கி கொடுத்த நிறுவனம்!

ராம் பிரசாத்
`விளம்பரத்துக்கான காசு வரல; வீடும் கிடைக்கல' - தோனிக்கு டிமிக்கி கொடுத்த நிறுவனம்!
`விளம்பரத்துக்கான காசு வரல; வீடும் கிடைக்கல' - தோனிக்கு டிமிக்கி கொடுத்த நிறுவனம்!

ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு எதிராக மகேந்திர சிங் தோனி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அம்பரப்பள்ளி ரியல் எஸ்டேட்  நிறுவனம் தோனியை தங்களது விளம்பரத்தூதராக நியமித்தது. 2009 -2016 வரை இந்த நிறுவனத்தின் பல்வேறு விளம்பரங்களில் தோனி நடித்துள்ளார். மேலும், அந்த நிறுவனத்தில் ஒரு வீடும் முன்பதிவு செய்துள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தால் குறித்த நேரத்தில் தங்களது நிறுவனத்தில் பதிவு செய்தவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க  முடியவில்லை. இதுதொடர்பாக 46,000 பேர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த நிலையில்தான் தோனி அந்த நிறுவனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடினார்.

தோனி தரப்பில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ``அமரப்பள்ளி நிறுவனத்தில் விளம்பரத்தூதராக இருந்தேன். இந்த நிறுவனத்தில் ஒரு வீடும் முன்பதிவு செய்திருந்தேன். எனக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை 40 கோடியைப் பெற்றுத் தரவேண்டும்” என நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அந்த நிறுவனத்தின் சொத்துகளை முடக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், தோனி தரப்பில் நேற்று ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அம்பரப்பள்ளி நிறுவனத்தில் தான் முன்பதிவு செய்த வீட்டைக் கையகப்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.