Election bannerElection banner
Published:Updated:

`ஊசி போட்டிருக்கேன்; நாளைக்கு வாங்க!'‍- கருக்கலைப்பு செய்த போலி டாக்டரால் பறிபோன பெண்ணின் உயிர்

`ஊசி போட்டிருக்கேன்; நாளைக்கு வாங்க!'‍- கருக்கலைப்பு செய்த போலி டாக்டரால் பறிபோன பெண்ணின் உயிர்
`ஊசி போட்டிருக்கேன்; நாளைக்கு வாங்க!'‍- கருக்கலைப்பு செய்த போலி டாக்டரால் பறிபோன பெண்ணின் உயிர்

`ஊசி போட்டிருக்கேன்; நாளைக்கு வாங்க!'‍- கருக்கலைப்பு செய்த போலி டாக்டரால் பறிபோன பெண்ணின் உயிர்

கோவையில், கருக்கலைப்புக்குச் சென்ற கர்ப்பிணிப் பெண், போலி மருத்துவரின் தவற்றால் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அடுத்த மெட்டுவாவி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். கூலித்தொழிலாளியான இவரின் மனைவி வனிதாமணி (37). இவர்களுக்குத் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. 4 மகன்கள், 1 மகள் உட்பட 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வனிதாமணி மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். ஐந்து மாத கர்ப்பிணியான வனிதாமணி, திடீரென  நமக்கு ஏற்கெனவே 5 குழந்தைகள் உள்ளனர். மீண்டும், எதற்குக் குழந்தை என  நினைத்து, வடசித்தூரில் உள்ள ஓர் ஹோமியோபதி கிளினிக்கை அணுகியுள்ளார்.

அந்த கிளினிக்கின் மருத்துவர் என்று சொல்லி முத்துலட்சுமி என்பவர், வனிதாமணியிடம் போனில் பேசியுள்ளார். இதையடுத்து, முத்துலட்சுமி மற்றும் அவரின் மகன் கார்த்திக் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன்பு மெட்டுவாவியில் உள்ள வனிதாமணி வீட்டுக்குச் சென்று அவருக்கு ஊசி போட்டுள்ளனர். மேலும், ``நாளை எனது வீட்டுக்கு வா" என்று வனிதாமணியிடம் சொல்லிவிட்டு வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, வனிதாமணி அடுத்தநாள் (ஞாயிற்றுக் கிழமை) முத்துலட்சுமி வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு வனிதாமணிக்கு கருக்கலைப்பு  ஊசி போட்டுள்ளார். அப்போது திடீரென, வனிதாமணியின் உடல்நிலை மோசமானது. இதனால், வனிதாமணியை தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு முத்துலட்சுமியும், அவரின் மகனும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச்  அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே வனிதாமணி பரிதாபமாக இறந்து விடுகிறார். முத்துலட்சுமியும், அவரின் மகனும் தலைமறைவாகிவிட்டனர்.

இது குறித்து வனிதாமணியின் மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் நெகமம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வனிதாமணியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்குச் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே, தலைமறைவாகியுள்ள முத்துலட்சுமி, போலி மருத்துவர் என்றும், அவர் மீது ஏற்கெனவே பல்வேறு புகார்களில் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு