Published:Updated:

`குறளுக்கு நீதான் மேக்கப் செய்யணும்னு சிம்பு சொன்னாங்க!'- மேக்கப் ஆர்டிஸ்ட் நவீனா

சு.சூர்யா கோமதி
`குறளுக்கு நீதான் மேக்கப் செய்யணும்னு சிம்பு சொன்னாங்க!'- மேக்கப் ஆர்டிஸ்ட் நவீனா
`குறளுக்கு நீதான் மேக்கப் செய்யணும்னு சிம்பு சொன்னாங்க!'- மேக்கப் ஆர்டிஸ்ட் நவீனா

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இந்நிலையில் குறளரசனுக்கும் அவருடைய காதலி நபீலா அஹமத்துக்கும் எளிமையான முறையில் டி.ராஜேந்தர் வீட்டில் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் வரவேற்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்து முடிந்தது. இதில் குறளரசனுக்கு மேக் அப் செய்தவர் சென்னையைச் சேர்ந்த நவீனா.

``சிம்பு சாரின் பர்சனல் மேக்கப் ஆர்டிஸ்ட் நான். திரைப்படங்களில்கூட அவருக்கு நான்தான் மேக்கப் ஆர்டிஸ்டாகப் பணிபுரிகிறேன். குறளரசனுடைய திருமணம் உறுதியானதும் சிம்பு சார் போன் செய்து" குறள் மேரேஜ்க்கு நீதான் மேக்கப் செய்து விடணும்"னு உரிமையாகச் சொன்னார். சிம்பு சாரிடம் நெருங்கிப் பழகும் யாராலும் அவருடைய அன்புக்கட்டளையைத் தவிர்க்க முடியாது. அதனால் நானும் ஓ.கே சொல்லிட்டேன். திருமணம் சிம்பு சார் வீட்டில் வைத்து நடந்து முடிந்ததால் மேக் அப் பெரிய அளவில் தேவை ஏற்படவில்லை. நேற்று மாலை நடந்த வரவேற்புக்கு முதலில் மேக் அப் வேண்டாம் என்றார் குறளரசன். அதன் பிறகு, சிம்பிள் மேக் அப்புக்கு ஒத்துக்கொண்டார். அவர் அணிந்திருந்த கறுப்பு நிற ஆடையை ஹைலைட் செய்து காட்டும் விதமாகச் சிம்பிளான நேச்சுரல் மேக்கப்போட்டு விட்டோம். சிம்பு சார் அடுத்த படத்திற்காக தன்னுடைய எடையைக் குறைத்திருக்கிறார். 'நியூ லுக் கிடைச்சா நல்லா இருக்கும்' என்றார். அதனால் ஹெச்.டி மேக்கப் செய்துவிட்டேன். அவருடைய போட்டோ நல்லா வந்திருப்பதாகவும், குறளரசனுக்காக மேக் அப் நல்லா இருந்ததாகவும் சிம்பு சார் பாராட்டினதுதான் பெருமையா இருந்தது'' என்றார்.