Published:Updated:

98,500 ரூபாய்க்கு 200சிசி ஃபுல் ஃபேரிங் பைக் - அறிமுகம் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
98,500 ரூபாய்க்கு 200சிசி ஃபுல் ஃபேரிங் பைக் - அறிமுகம் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S!
98,500 ரூபாய்க்கு 200சிசி ஃபுல் ஃபேரிங் பைக் - அறிமுகம் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S!

சுஸூகி ஜிக்ஸர் SF ABS பைக்குக்கு போட்டியாக அறிமுகமாகியிருக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, அதைவிட 424 ரூபாய் மட்டுமே அதிகம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எக்ஸ்-பல்ஸ் சீரிஸில் இரு மாடல்களை (எக்ஸ்-பல்ஸ் 200 & எக்ஸ்-பல்ஸ் 200T) நேற்று அறிமுகப்படுத்திய ஹீரோ மோட்டோகார்ப், ஆனந்த அதிர்ச்சியாக எக்ஸ்ட்ரீம் சீரிஸில் புதிய மாடலைக் களமிறக்கியுள்ளது. எக்ஸ்ட்ரீம் 200S எனப் பெயரிடப்பட்டுள்ள இது, நேக்கட் பைக்கான எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் ஃபுல் ஃபேரிங் வெர்ஷனாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையான 98,500 ரூபாய்க்கு மூன்று கலர்களில் (சிவப்பு, கறுப்பு, பிரவுன்) கிடைக்கும் எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கைவிட 7,600 அதிக விலையைக்கொண்டுள்ளது. அதற்கு எந்த அளவுக்கு நியாயம் சேர்த்திருக்கிறது ஹீரோ? இந்த நிறுவனம் ஃபுல் ஃபேரிங்கொண்ட கரிஸ்மா ZMR பைக்கை ஏற்கெனவே விற்பனை செய்துவரும் நிலையில், அதற்கு மாற்றாக இந்த பைக் இருக்குமா? இந்தச் சூழ்நிலையில், சத்தமில்லாமல் எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் விலையை 1,000 ரூபாய் அதிகரித்திருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை: 90,900 ரூபாய்). 

டிசைன் மற்றும் வசதிகள்

98,500 ரூபாய்க்கு 200சிசி ஃபுல் ஃபேரிங் பைக் - அறிமுகம் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S!

ஃபுல் ஃபேரிங்குடன் பார்க்க ஸ்போர்ட்ஸ் பைக் போலவே காட்சியளித்தாலும், இது அடிப்படையில் நகர்ப்புறப் பயன்பாட்டுக்கான ஒரு ப்ரீமியம் கம்யூட்டர்தான் என்கிறது ஹீரோ. எதிர்க்காற்று முகத்தில் அறைவதைத் தடுக்கக்கூடிய ஃபுல் ஃபேரிங் இருப்பதால், நெடுஞ்சாலையில் எக்ஸ்ட்ரீம் 200R பைக்கைவிட எக்ஸ்ட்ரீம் 200S பைக்கை ஓட்டுவது சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. பெயரைப்போலவே இரு பைக்குகளுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கின்றன. Diamond சேஸி, ஹைட்ராலிக் சஸ்பென்ஷன், டியூப்லெஸ் டயர்கள், டிஸ்க் பிரேக்ஸ், ஸ்விட்ச்கள், ரியர் வியூ மிரர்கள், இண்டிகேட்டர்கள், LED டெயில் லைட், பெட்ரோல் டேங்க், பின்பக்க பாடி பேனல்கள், இன்ஜின் - கியர்பாக்ஸ் என இந்தப் பட்டியல் நீள்கிறது. ஆனாலும், 148 கிலோ எடையுள்ள எக்ஸ்ட்ரீம் 200R பைக்குடன் ஒப்பிடும்போது, ஃபுல் ஃபேரிங் தவிர LED ஹெட்லைட் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் - எக்ஸாஸ்ட் பைப் எனக் குறிப்பிடத்தக்க மாற்றங்கள், 149 கிலோ எடையுள்ள எக்ஸ்ட்ரீம் 200S பைக்கில் இருக்கவேசெய்கின்றன. இதில் காம்பேக்ட்டான எக்ஸாஸ்ட், கனெக்ட்டிவிட்டியுடனான டிஜிட்டல் மீட்டர், எக்ஸ்-பல்ஸ் பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளன. இவை பெரிய ப்ளஸ். 

போட்டியாளர்கள் மற்றும் விலை

98,500 ரூபாய்க்கு 200சிசி ஃபுல் ஃபேரிங் பைக் - அறிமுகம் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S!

டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையான 98,076 ரூபாய்க்குக் கிடைக்கும் சுஸூகி ஜிக்ஸர் SF ABS பைக்குக்குப் போட்டியாக அறிமுகமாகியிருக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, அதைவிட 424 ரூபாய் மட்டுமே அதிகம். இத்தனைக்கும் ஜிக்ஸர் SF பைக்கில் இருப்பது சிறிய 155சிசி இன்ஜின் மற்றும் வழக்கமான ஹாலோஜன் ஹெட்லைட்தான் என்பதை நினைவில்கொள்ளவும். 200சிசி செக்மென்ட்டில் இருக்கும் மற்றுமொரு ஃபுல் ஃபேரிங் பைக்கான பஜாஜ் பல்ஸர் RS200, ஹீரோவைவிட 41,135 ரூபாய் அதிகம்; குறைவான விலை மற்றும் எடையைத் தாண்டி, பின்பக்க ரேடியல் டயர், LED ஹெட்லைட்ஸ், மாடர்ன் டிஜிட்டல் மீட்டர் என சில ப்ளஸ் பாயின்ட்டுகளை எக்ஸ்ட்ரீம் 200S கொண்டிருக்கிறது. இருப்பினும், பவர்ஃபுல் லிக்விட் கூல்டு இன்ஜின் - டூயல் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் - பெரிய மீட்டர் ஃப்ரேம் - பெரிய டிஸ்க் பிரேக்ஸ் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - Nitrox மோனோஷாக் என பஜாஜ் ஆட்டோ தொழில்நுட்பத்தில் வேற லெவலில் உள்ளதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பைக்கில் என்னென்ன விஷயங்கள் பெட்டராக இருந்திருக்கலாம்?

98,500 ரூபாய்க்கு 200சிசி ஃபுல் ஃபேரிங் பைக் - அறிமுகம் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S!

சுஸூகி ஜிக்ஸர் SF போலவே, எக்ஸ்ட்ரீம் 200S பைக்கின் ரியர் வியூ மிரர்கள் ஃபுல் ஃபேரிங்கில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தவிர எக்ஸ்-பல்ஸ் 200 மாடலில் இருக்கும் பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ், ஸ்போர்ட்ஸ் பைக் லுக்கொண்ட பைக்கில் சேர்க்கப்படாதது ஏனோ? Clip On Handlebars மிஸ்ஸிங் என்பதும் ஒரு நெருடல். மேலும், எக்ஸ்-பல்ஸ் 200 பைக்கைப்போலவே, எக்ஸ்ட்ரீம் 200S பைக்கிலும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷனலாக வழங்கப்பட்டிருக்கலாம். டிஜிட்டல் மீட்டரில் Turn By Turn Navigation - ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி - Call Alert ஆகிய வசதிகள் இருந்தாலும், அதை பைக்கை வாங்கும் அனைவரும் பயன்படுத்துவார்களா என்பது கேள்விக்குறியே. எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் கிராஃபிக்ஸில் அடித்து விளையாடிய ஹீரோ மோட்டோகார்ப், எக்ஸ்ட்ரீம் 200S பைக்கில் மெளனம் காட்டியது ஏன் எனத் தெரியவில்லை. சிங்கிள் பீஸ் சீட் மற்றும் கிக் லீவர் உடனான இன்ஜின், பைக்கின் கம்யூட்டர் மனதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, பர்ஃபாமென்ஸில் பின்தங்கினாலும், குறைந்தது ஆயில் கூலர் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆகியவை இதில் வழங்கப்பட்டிருக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S அசத்துகிறது என்றே சொல்லலாம்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு