Published:Updated:

``குழந்தை பொறந்தா உடம்புல சத்து இருக்காதேனு தவிர்த்தாங்க!'' - ஏஷியன் பவர் லிஃப்டிங்கில் தங்கம் வென்ற டாக்டர்

``குழந்தை பொறந்தா உடம்புல சத்து இருக்காதேனு தவிர்த்தாங்க!'' - ஏஷியன் பவர் லிஃப்டிங்கில் தங்கம் வென்ற டாக்டர்
``குழந்தை பொறந்தா உடம்புல சத்து இருக்காதேனு தவிர்த்தாங்க!'' - ஏஷியன் பவர் லிஃப்டிங்கில் தங்கம் வென்ற டாக்டர்

"உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் தெரியுமா? இன்னமும் தனியா எனக்கு ரோடு கிராஸ் பண்ண தெரியாது. நான் பவர் லிஃப்டிங்கில் இவ்வளவு தூரம் ஜெயிச்சதுக்குக் காரணம், 'பொம்பளைங்களால இதைப் பண்ண முடியாது'ன்னு மத்தவங்க சொன்ன வார்த்தைகள்தான்!''

குடும்பத்தில் எல்லோருமே மருத்துவர்கள்; அண்ணாநகரில் கிளினிக்; கண்ணுக்கு நிறைவான இரண்டு குழந்தைகள்; இத்துடன் தானும் டென்டல் சர்ஜனாக பிராக்டிஸ் செய்துகொண்டிருக்கும் ஒரு பெண். தானுண்டு, தன் வேலையுண்டு, தன் குடும்பமுண்டு; ஓய்வு நேரங்களில் கேளிக்கைகள் என்று இருந்திருக்கலாம். ஆனால் டாக்டர் ஆர்த்தி அருண், ஜிம், வொர்க் அவுட் என்று உடலை இரும்பாக்கி ஆசிய அளவில் இந்தியா சார்பில் பவர் லிஃப்டிங் செய்து தங்க மெடல் வாங்கி வந்திருக்கிறார். டாக்டர் டு பவர் லிஃப்டர்... இந்த கனமான மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று ஆர்த்தியிடமே கேட்டோம். 

``குழந்தை பொறந்தா உடம்புல சத்து இருக்காதேனு தவிர்த்தாங்க!'' - ஏஷியன் பவர் லிஃப்டிங்கில் தங்கம் வென்ற டாக்டர்

``எல்லாப் பெண்களையும் மாதிரி நானும் குழந்தைகள் பிறக்கிறதுக்கு முன்னாடி ரொம்ப ஸ்லிம்மா இருந்தேன். ரெண்டாவது பொண்ணு பிறந்ததும் ரொம்ப வெயிட் போட்டுட்டேன். அந்த வெயிட்டைக் குறைக்கிறதுக்காக ஜிம்முக்குப் போக ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல ஃபீஸ் கட்டிட்டோமேங்கிற எண்ணத்துலதான் வாரத்துல ரெண்டு நாள் மட்டும் போயிக்கிட்டிருந்தேன். ஆனா, அதுக்கே உடம்பு எடை குறைய ஆரம்பிச்சதும், இம்ப்பரஸாகி வாரத்துக்கு நாலு நாள் ஜிம் போக ஆரம்பிச்சேன். 15 கிலோ வெயிட் குறைஞ்சு உடம்பு நல்லா ஷேப்பா, ஸ்ட்ராங்கா ஆச்சு. அப்போதான், நான் அங்கே நிறைய பேர் வெயிட் தூக்கிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு `இது என்ன கேம்; இதை நானும் பண்ணட்டுமா'ன்னு கேட்டேன். அப்போ எனக்கு அது பவர் லிஃப்ட்டிங்னுகூடத் தெரியாது. அதுக்கு அவங்க, `இது ஆம்பளைங்க கேம்; இதை லேடீஸ் செய்ய முடியாது'ன்னு சொன்னாங்க. 

``குழந்தை பொறந்தா உடம்புல சத்து இருக்காதேனு தவிர்த்தாங்க!'' - ஏஷியன் பவர் லிஃப்டிங்கில் தங்கம் வென்ற டாக்டர்

உடனே நான், அந்த விளையாட்டைப் பத்தி தெரிஞ்சுக்க கூகுள் பண்ணிப் பார்த்துட்டு, மறுபடியும், `நானும் பவர் லிஃப்டிங் செய்யணும்'னு கேட்டேன். `உனக்குக் குழந்தையெல்லாம் பொறந்தாச்சு. உடம்புல சத்து இருக்காது. உன்னால வெயிட் தூக்க முடியாது'ன்னு டிஸ்கரேஜ் பண்ண ஆரம்பிச்சாங்க. பவர் லிஃப்டிங்கில் இருக்கிற இரும்பு, ராடு, வெயிட்டுக்கெல்லாம் ஆம்பளை, பொம்பளை வித்தியாசம் தெரியுமா என்ன, அதனால, `ஐ வான்ட் டு டூ' ன்னு என் முடிவுல ஸ்ட்ராங்காக இருந்தேன். மெள்ள மெள்ள வெயிட் தூக்க ஆரம்பிச்சேன். கோச் சண்முகம், பாபுன்னு ரெண்டு பேரும் என்னை கைடு பண்ணாங்க'' என்றவர், தான் பெற்ற வெற்றிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். 

``குழந்தை பொறந்தா உடம்புல சத்து இருக்காதேனு தவிர்த்தாங்க!'' - ஏஷியன் பவர் லிஃப்டிங்கில் தங்கம் வென்ற டாக்டர்

``ரெண்டு வருஷம் பவர் லிஃப்டிங் பிராக்டிஸ் பண்ணின பிறகு போட்டிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். முதல்ல, சென்னை மாவட்ட அளவுல நடந்த போட்டியில தங்கம் ஜெயிச்சேன். அடுத்து தமிழ்நாட்டுக்காக ஒரு தடவை விளையாடினேன். அங்கேயும் தங்கம் வாங்கினேன். அங்க இருந்து நேஷனலுக்கு அனுப்பினாங்க. அந்தப் போட்டி போன வருஷம் ஜூலை மாசம் கோழிக்கோட்டில் நடந்துச்சு. அங்கே வெள்ளிப் பதக்கம் கிடைச்சது. அங்கே இருந்துதான் ஆசிய அளவுல போட்டிகளில் கலந்துக்க செலக்ட் ஆனேன். 'ஏஷியன் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்' ஹாங்காங்கில் போன மாசம் இறுதியில நடந்துச்சு. ஆசிய நாடுகளைச் சேர்ந்த பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்கள் எல்லோரும் இதுல கலந்துக்கிட்டோம். இதுல மாஸ்டர் ஒன் விமன் கேட்டகிரி - 72 கிலோ எடை பிரிவில் நான் பவர் லிஃப்ட் பண்ணி தங்கம் வாங்கினதோடு, எம் 1 கேட்டகிரியில் `பெஸ்ட் லிஃப்டர் ரன்னர் அப் அவார்டு'ம் வாங்கினேன். தமிழ்நாட்டுல இருந்து இந்த கேட்டகிரியில தங்கம் வாங்கின, பெஸ்ட் லிஃப்டர் அவார்டு வாங்கின முதல் பெண் நான்தான். இப்போ, வரும் செப்டம்பரில் கனடாவில் நடக்கவிருக்கிற காமன்வெல்த் போட்டியில கலந்துக்கிறதுக்காக பிராக்டிஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்'' என்கிற டாக்டர் ஆர்த்தி, ``இதுவரை 350 கிலோ வரைக்கும் எடை தூக்கியிருக்கிறேன்'' என்கிறார்.

``குழந்தை பொறந்தா உடம்புல சத்து இருக்காதேனு தவிர்த்தாங்க!'' - ஏஷியன் பவர் லிஃப்டிங்கில் தங்கம் வென்ற டாக்டர்

`டாக்டர் டு பவர் லிஃப்டர்... உங்களுடைய குடும்பம் எப்படி ரியாக்ட் செய்தது?' என்றோம்.

``என் வீட்ல எல்லோரும் முதலில் நம்பலை. ஜோக் அடிக்கிறேன்னு நினைச்சுட்டாங்க. அப்புறம், ஒரு மாசம் பண்ணிட்டு விட்டுடுவான்னு நினைச்சாங்க. ஒரு கட்டத்துல என்னோட சீரியஸ்னெஸ் புரிஞ்சதும் பதற்றப்பட ஆரம்பிச்சிட்டாங்க. ஏன்னா, வெயிட் தூக்கினா முதுகெலும்பு உடைஞ்சுடுமோனு பயந்தாங்க. இதுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போட்டுக்கிட்டுத்தான் வெயிட் தூக்குவோம்னு நான் புரிய வைச்சதும் சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க, உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் தெரியுமா? இன்னமும் தனியா எனக்கு ரோடு கிராஸ் பண்ண தெரியாது. நான் பவர் லிஃப்டிங்கில் இவ்வளவு தூரம் ஜெயிச்சதுக்குக் காரணம், `பொம்பளைங்களால இதைப் பண்ண முடியாது'ன்னு மத்தவங்க சொன்ன வார்த்தைகள்தான்'' என்கிற டாக்டர் ஆர்த்தியின் மகன் கிக் பாக்ஸிங்கில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வாங்கியிருக்கிறான். டாக்டர் டு ஸ்போர்ட்ஸுக்கு அடுத்த வாரிசு வந்துவிட்டது!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு