Published:Updated:

சோஷியல் மீடியா அடிக்சனிலிருந்து மீள... இப்படியும் கொஞ்சம் யோசிங்க பாஸ்!

சோஷியல் மீடியா அடிக்சனிலிருந்து மீள... இப்படியும் கொஞ்சம் யோசிங்க பாஸ்!
சோஷியல் மீடியா அடிக்சனிலிருந்து மீள... இப்படியும் கொஞ்சம் யோசிங்க பாஸ்!

ன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருந்து, ``ஏண்டா, உன்னால கொஞ்சம் நேரம்கூட ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பார்க்காம இருக்க முடியாதா?” என்ற சத்தம் அடிக்கடி கேட்கும். அந்த வீட்டுப் பையனின் அம்மாதான், தன் மகனை இப்படி எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். ஆனாலும், அவன் அந்த அம்மாவின் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்டதேயில்லை. தெருவில் நடக்கும்போதுகூட, போனும் கையுமாகவேதான் அலைவான். இப்போது அவனால் ஸ்மார்ட்போன் இல்லாமல், ஃபேஸ்புக் பார்க்காமல் ஒருநாளைக்கூட கடத்த முடிவதில்லை. இந்த நிலை அவனுக்கு மட்டுமல்ல, நம்மில் பெரும்பாலானோருக்கும்தான். தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்பார்கள். ஆனால், இப்போது எல்லோரும் தலை குனிந்து நடப்பதற்குக் காரணம், ஸ்மார்ட்போனும் சோஷியல் மீடியாக்களும்தான். நம் அனைவரின் ஒவ்வொரு நாளையும் வாட்ஸ்அப்பும் ஃபேஸ்புக்கும் ஆக்கிரமித்திருக்கின்றன. தூங்கி எழுந்ததும் ஃபேஸ்புக்கைத் திறந்து அதனுள் மணிக்கணக்கில் மூழ்குபவர்கள் இங்கு ஏராளம்.

சோஷியல் மீடியா அடிக்சனிலிருந்து மீள... இப்படியும் கொஞ்சம் யோசிங்க பாஸ்!

நீங்கள் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகளை அடிக்கடி படித்தும், அதற்கு என்னென்ன பதில்கள், விருப்பக்குறிகள் வந்துள்ளன என்பதை அடிக்கடி கவனித்துக்கொண்டும், `டிங்' என்ற ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன் மணி அடித்ததும் அதைப் பரபரப்பாகப் பார்த்துக்கொண்டும், வண்டி ஓட்டும்போது, அலுவலக  மீட்டிங்கில், பயணத்தில் என எப்போதும் சமூக வலைதளங்களில் மூழ்கியே இருக்கிறீர்கள் எனில், உங்களுக்கே தெரியாமல் சில பிரச்னைகளை நீங்கள் விரைவில் சந்திக்கக்கூடும் என எச்சரிக்கிறது, அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று. அதில், சமூக வலைதளங்களின் அளவுக்கு அதிகமான பயன்பாட்டால், மனித மூளையின் இடையே உள்ள செயல்பாட்டுத்திறன் சமநிலையில் இருக்காது என்றும், சமூகத்தில் பழகும்தன்மை பாதிக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் சமூக வலைதளங்களுக்கு  அடிமைப்பட்டுக்கிடப்பவர்கள் அதிலிருந்து விரைவில் மீள்வது அவசியம். 

ஸ்மார்ட்போனை மறைத்து வையுங்கள்!

சோஷியல் மீடியா அடிக்சனிலிருந்து மீள... இப்படியும் கொஞ்சம் யோசிங்க பாஸ்!

நம்மில் பெரும்பாலானோர் நடக்கும்போதும் சாப்பிடும்போதும் ஸ்மார்ட்போனை கையிலிருந்து விலக்கி வைப்பதேயில்லை. அப்படியே வைத்தாலும் கண் பார்வைக்குத் தெரியும்படியோ அருகிலேயோதான் வைக்கிறோம். இது பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம், உண்மையில் இந்த விஷயம்தான் ஸ்மார்ட்போனை அடிக்கடி பார்க்கத் தூண்டுகிறது. முதலில் ஸ்மார்ட்போனை மறைத்து வைக்கப் பழகுங்கள். கண்களில் அடிக்கடி ஒரு பொருள் படாமல் இருந்தால், அது பற்றிய நினைவுகள் எப்படி வருவதில்லையோ, அதுபோலத்தான் ஸ்மார்ட்போனை மறைத்து வைப்பதும். இந்தச் செயல் காலப்போக்கில் செய்யும் செயல்களின் மீது மட்டுமே கவனத்தைச் செலுத்த ஏதுவாக இருக்கும். குறிப்பாக, பணியிடங்களில் உங்களின் மேசை மீது போனை வைக்காமல், நீங்கள் கொண்டுபோகும் பேக் அல்லது பேன்ட் பாக்கெட்களில் போட்டு வையுங்கள். 

நோட்டிஃபிகேஷன் ஆஃப்!

சோஷியல் மீடியா அடிக்சனிலிருந்து மீள... இப்படியும் கொஞ்சம் யோசிங்க பாஸ்!

வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் ஆஃப் செய்து வையுங்கள். குறிப்பாக, டோன் அமைப்பை ஆஃப் செய்வது நல்லது. நிமிடத்துக்கு ஒருமுறை மெசேஜ் வரும்போதெல்லாம் அதை அவ்வப்போதே பார்க்கும் பழக்கத்தால் செய்யும் வேலையில் கவனச்சிதறல் வர வாய்ப்புகள் அதிகம். அப்படி வருகிற மெசேஜை அவ்வப்போதே பார்க்க வேண்டிய அவசியமில்லை. நண்பர்களுக்கு லேட்டாக ரிப்ளே செய்வதாலும், வேகமாக ரிப்ளே செய்வதாலும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. அவசரமாகத் தொடர்புகொள்ள நினைப்பவர்கள் யாரும் மெசேஜ் வாயிலாகத் தகவல்களைச் சொல்ல மாட்டார்கள் என்பதால், பதற்றப்படத் தேவையில்லை.

அதிகாலை அடிக்‌ஷன்!

சோஷியல் மீடியா அடிக்சனிலிருந்து மீள... இப்படியும் கொஞ்சம் யோசிங்க பாஸ்!

காலையில் எழுந்ததும் ஸ்மார்ட்போனில் மூழ்கும் பழக்கம் மிகவும் ஆபத்தானது. அன்றைய தினத்தின் உற்சாகத்தையே அது பாழ்படுத்துவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு அதுதான். இதற்கு பெஸ்ட்டான ஒரு ஐடியா, இரவு படுக்கைக்குச் செல்லும் முன் படுக்கை அறையிலிருந்து ஸ்மார்ட்போனை அப்புறப்படுத்துங்கள். காலையில் எழுந்ததும் அது வைத்திருக்கும் இடத்துக்குத் தேடி போய்ப் பார்ப்பதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பழகுங்கள். ஆரம்பத்தில் அந்தப் பழக்கம் அப்படியே தொடர்ந்தாலும், காலப்போக்கில் சோஷியல் மீடியா அடிக்‌ஷன் குறையும். 

செய்யும் வேலைகளில் கவனம்!

சோஷியல் மீடியா அடிக்சனிலிருந்து மீள... இப்படியும் கொஞ்சம் யோசிங்க பாஸ்!

இன்று நமக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னையே கவனச்சிதறல்தான். ஒரு வேலையில் மனதை ஒருநிலை படுத்தாததால்தான் இடையிடையே ஸ்மார்ட்போனை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, வெறுமனே எதையாவது பார்த்துக்கொண்டிருக்கிறோம். இது அடிக்‌ஷன் ஆகி, ஆபத்தாகிறது. அதனால் செய்யும் வேலையில் மிகவும் கவனமாகச் செய்யுங்கள். அப்போது ஸ்மார்ட்போன் மணி ஒலித்தாலும், ஸ்மார்ட்போன் கையில் இருந்தாலும் அதன் மீது கவனம் திசை திரும்பாமல் இருக்கும்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என எப்போதும் சாட் செய்துகொண்டேயிருப்பது, மாடர்ன் லைஃப் ஸ்டைலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆரோக்கியமான லைஃப் ஸ்டைலுக்கு இது முற்றிலும் எதிரானது. இது இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் பாழ்படுத்துகிறது. இதிலிருந்து முற்றிலுமாக வெளிவர முடியாவிட்டாலும், சோஷியல் மீடியாக்களில் நேரத்தை அதிகம் செலவிடுவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. 

Vikatan