Published:Updated:

சீதா, பிரியா ராமன், அர்ச்சனா, ஶ்ரீதேவி, அஞ்சனா... அட்சய திருதியைக்கு என்ன வாங்குனாங்களாம்?!

சீதா, பிரியா ராமன், அர்ச்சனா, ஶ்ரீதேவி, அஞ்சனா... அட்சய திருதியைக்கு என்ன வாங்குனாங்களாம்?!
சீதா, பிரியா ராமன், அர்ச்சனா, ஶ்ரீதேவி, அஞ்சனா... அட்சய திருதியைக்கு என்ன வாங்குனாங்களாம்?!

ரு வழியாக அட்சயதிருதியை பரபரப்பு நார்மல் மோடுக்கு வந்துள்ளது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு தங்கம் அதிகம் விற்றிருப்பதாகப் புள்ளி விவரங்களுடன் நியூஸ் வந்தாயிற்று. நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அள்ளியதெல்லாம் நாம் பார்த்தோம். சரி... செலிபிரெட்டிகள் என்னவெல்லாம் அன்று வாங்கினார்கள். அவர்களிடமே கேட்டோம்.

வீஜே. அர்ச்சனா:

சீதா, பிரியா ராமன், அர்ச்சனா, ஶ்ரீதேவி, அஞ்சனா... அட்சய திருதியைக்கு என்ன வாங்குனாங்களாம்?!

``ஒவ்வோர் அட்சயதிருதியைக்கும் எதாவது ஒரு மங்களகரமான பொருள் வாங்குவது என்னுடைய வழக்கம். போன வருஷம் தங்கம் வாங்கினேன். இந்த வருஷமும் அந்த பிளான்தான் இருந்துச்சு. ஆனால் கடைசி நேரத்தில் பிளான் மாறிருச்சு. பூஜை அறையில் பயன்படுத்தக்கூடிய பஞ்சமுக தீபாராதனை தட்டினை வெள்ளியில் வாங்கியிருக்கேன். பஞ்சமுக தீபாராதனை தட்டு ரொம்ப விசேஷம்னு எல்லாரும் சொல்றாங்க. நல்லது நடந்தா சரி".

ரேகா ('திருமணம்' சீரியல்):

சீதா, பிரியா ராமன், அர்ச்சனா, ஶ்ரீதேவி, அஞ்சனா... அட்சய திருதியைக்கு என்ன வாங்குனாங்களாம்?!

``அட்சயதிருதியை அன்னைக்குதான் பொருள் வாங்கணுமா என்ன... நகைக்கடைக்காரர்கள் கிளப்பிவிட்ட வதந்தியை நம்பி நீயும் வரிசையில் நின்னு பொருள் வாங்குறனு... என்னை என் வீட்டில் உள்ளவங்களே கிண்டல் பண்ணுவாங்க. ஆனால் அதையெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். என்னோட நம்பிக்கை என்னனா... அட்சயதிருதியை அன்னிக்கு தங்கம் வாங்கினா நல்லது நடக்கும்ங்கிறதுதான். அதனால... ஒவ்வோர் அட்சயதிருதியைக்கும் சம்திங் ஸ்பெஷலா எதாவது ஒரு பொருள் வாங்கிடுவேன். இந்த அட்சயதிருதியைக்குத்  தங்க மூக்குத்தி வாங்கியிருக்கேன். நிச்சயம் இந்த வருஷம் எனக்குச் செழிப்பா இருக்கும்''.

ஶ்ரீ தேவி ('ராஜா ராணி' சீரியல்'):

சீதா, பிரியா ராமன், அர்ச்சனா, ஶ்ரீதேவி, அஞ்சனா... அட்சய திருதியைக்கு என்ன வாங்குனாங்களாம்?!

``அட்சயதிருதியை கான்செப்ட்டை நான் நம்புறேன். அதனால கண்டிப்பா அன்னைக்கு ஒரு ஷாப்பிங் எல்லா வருஷமும் இருக்கும். ஃபேஷன் நகைகள் பயன்படுத்த ஆரம்பிச்ச பிறகு, தங்க நகைகள் நிறைய வாங்குறது இல்லை. ஆனாலும் எதிர்கால தேவைக்காக எப்போதும் தங்கத்தில் முதலீடு பண்ற பழக்கம் இருக்குது. ஸோ... 10 கிராமில் ஒரு தங்க நாணயம் வாங்கியிருக்கேன். நகையா வாங்கி வைச்சா... அதை விக்கிறப்ப அல்லது புது டிசைனா மாத்துறப்ப செய்கூலி, சேதாரம்னு நிறைய கழிப்பாங்க. அதனால தங்க நாணயம் எப்பவும் பெஸ்ட். சேமிப்பைத் தாண்டி எப்பவும் கைகொடுக்கும்.''

சீதா:

சீதா, பிரியா ராமன், அர்ச்சனா, ஶ்ரீதேவி, அஞ்சனா... அட்சய திருதியைக்கு என்ன வாங்குனாங்களாம்?!

``இதுவரைக்கும் ஒவ்வொரு அட்சயதிருதியை அன்னைக்கும் வீட்டுக்கு உபயோகம் ஆகும் எதாவது ஒரு சின்ன பொருளாவது வாங்கிடுவேன். அட்சயதிருதியைக்குப் பொருள் வாங்குனா வீடு செழிக்கும்ங்கிறது என்னோட நம்பிக்கை. அந்த நம்பிக்கை இதுவரை வீண் போகலை. கடவுள் எல்லா வளத்தையும் கொடுத்திருக்காரு. பொண்ணோட திருமணம் இப்போதான் நடந்து முடிந்ததால் நகை எதுவும் தேவைப்படலை. ஆனாலும், சேமிப்பா இருக்கட்டுமேனு எட்டு கிராம்ல ஒரு தங்க நாணயம் வாங்கியிருக்கேன்."

பிரியா ராமன் ('செம்பருத்தி' சீரியல்):

சீதா, பிரியா ராமன், அர்ச்சனா, ஶ்ரீதேவி, அஞ்சனா... அட்சய திருதியைக்கு என்ன வாங்குனாங்களாம்?!

``அட்சயதிருதியை அன்னைக்கு தங்கம்தான் வாங்கணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை. நம்முடைய வாழ்க்கைக்கு என்ன தேவையோ, என்ன பெருகணுமோ அந்தப் பொருளை வாங்கி பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்டா போதும். இந்தக் கோடைக்காலத்தில் மக்கள் எல்லா இடங்களேயும் தண்ணீருக்குத்தான் கஷ்டப்படுறாங்க. அதனால் நேற்று ஷூட்டிங் கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு செம்பு தண்ணீரை பூஜையில் அறையில் வைச்சு சாமி கும்பிட்டேன். நோட் பண்ணீங்களா... சென்னையில் நேற்று தூரல் போட்டுச்சு. என்னோட பிரார்த்தனையை கடவுள் ஏத்துக்கிட்டாங்னு மகிழ்ச்சியா இருக்கேன்.''

வீஜே. அஞ்சனா:

சீதா, பிரியா ராமன், அர்ச்சனா, ஶ்ரீதேவி, அஞ்சனா... அட்சய திருதியைக்கு என்ன வாங்குனாங்களாம்?!

``அட்சயதிருதியை அன்னைக்கு என்ன பொருள் வாங்கினாலும் வீடு செழிக்கும்னு நம்புறவ நான். அதுக்காகத் தங்கம்தான் வாங்கணும்ங்கிறதுல எனக்கு உடன்பாடில்லை. வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய எதாவது ஒரு பொருள் வாங்கணும்ங்கிறதுதான் சம்பிரதாயம். அதனால நேத்து உப்பு, பால், சர்க்கரை வாங்கி பூஜை அறையில் வெச்சு வழிபட்டாச்சு.''

Vikatan