Published:Updated:
உங்கள் பிள்ளையின் மதிப்பெண்ணுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவீர்கள்? #VikatanSurvey


மதிப்பெண்... இந்த ஒற்றை வார்த்தைதான் மாணவர்களின் கனவிலும் அச்சமூட்டும் சொல். மாணவர்களுக்கு மட்டுமா, அவர்களின் பெற்றோர்களுக்கும்தான். ஒரு வீட்டில் பொதுத்தேர்வு எழுதும் பிள்ளை இருந்தால், கேபிள் கனெக்ஷன் கட் செய்யப்படும், உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு பெரியவர்கள்கூட செல்ல மாட்டார்கள்... செய்தித்தாளைக்கூட நிறுத்திவிடும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். பிள்ளைகளின் மதிப்பெண் பெறுவதிலிருந்து கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம், பிள்ளைகளின் மதிப்பெண்ணைப் பற்றி அழுத்தம் தராமல், அவர்களின் இயல்பில் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தும் பெற்றோரும் உண்டு. நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை அறிந்துகொள்ளும் சர்வே இது.