Published:Updated:

இங்கு யாரும் வாட்டர் பாட்டில் வாங்க மாட்டார்களாம்! - மோர் வாசம் மணக்கும் ஊத்துக்குளி #MyVikatan

தி.ஜெயப்பிரகாஷ்
இங்கு யாரும் வாட்டர் பாட்டில் வாங்க மாட்டார்களாம்! - மோர் வாசம் மணக்கும் ஊத்துக்குளி #MyVikatan
இங்கு யாரும் வாட்டர் பாட்டில் வாங்க மாட்டார்களாம்! - மோர் வாசம் மணக்கும் ஊத்துக்குளி #MyVikatan

ஊத்துக்குளி என்றவுடன் நமக்கெல்லாம் உலகப்புகழ் பெற்ற வெண்ணெய்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், அதே ஊத்துக்குளியில் மோர் வியாபாரமும் கொடிகட்டிப் பறக்கிறது. 

இங்கு யாரும் வாட்டர் பாட்டில் வாங்க மாட்டார்களாம்! - மோர் வாசம் மணக்கும் ஊத்துக்குளி #MyVikatan


 

ஊத்துக்குளியில் வெண்ணெய் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களே அதன் உப தொழிலாக நெய், தயிர், மோர் உள்ளிட்டவற்றையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு சிலர் அவர்களிடமிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து சில்லறை வியாபாரத்தில் மோர் விற்பனை செய்து வருகிறார்கள். ஊத்துக்குளியில் உள்ள சுற்றுவட்டாரக் கடைகளில் எங்கு சென்றாலும், மிகவும் குறைந்த விலைக்கு மோர் பாட்டில்களை வாங்கலாம். எப்படியென்றால், இப்பகுதிகளில் விடுமுறை நாள்களில் விளையாடச் செல்லும் சிறுவர்கள் கையில் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு செல்வதைவிட, மோர் பாட்டிலைக் கொண்டு செல்வதே அதிகம். சுமார் 100 குடும்பங்கள் வரை ஊத்துக்குளியில் மோர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இங்கு யாரும் வாட்டர் பாட்டில் வாங்க மாட்டார்களாம்! - மோர் வாசம் மணக்கும் ஊத்துக்குளி #MyVikatan


திருமணம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் இங்கிருந்து மோர் சப்ளையாகிறது. அதற்கு மட்டும் ஒருநாள் முன்னதாகவே ஆர்டர்கள் கொடுக்க வேண்டும். விசேஷ நிகழ்ச்சிகளுக்காகப் பல வெளியூர்களில் இருந்தும் மோர் ஆர்டர்கள் குவிகின்றன. ஊத்துக்குளி ரயில்நிலையத்தைக் கடக்கும் ரயில் பயணிகளும், தவறாமல் பாட்டில்களில் மோர் வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஊத்துக்குளி ரயில்நிலையத்தில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் மோர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, இஞ்சி, மாங்காய்த் துண்டுகள் கலந்து கொடுக்கும் ஊத்துக்குளி மோரின் ருசி.. தனி ருசி.