Published:Updated:

டேட்டிங், மேட்ரிமோனி, வீடியோ... கூகுள் தேடலில் இந்தியர்களின் விருப்பம் எதில் அதிகம்?!

டேட்டிங், மேட்ரிமோனி, வீடியோ... கூகுள் தேடலில் இந்தியர்களின் விருப்பம் எதில் அதிகம்?!
டேட்டிங், மேட்ரிமோனி, வீடியோ... கூகுள் தேடலில் இந்தியர்களின் விருப்பம் எதில் அதிகம்?!

கூகுள் மூலமான ஆன்லைன் வீடியோ தேடுதல்களும் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும், இது 2020-ல் 50 கோடியைத் தொடும் என்றும், விஞ்ஞானம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் பொழுபோக்குத் தொடர்பான வீடியோக்களின் தேடுதல்கள் 2018-ம் ஆண்டில் மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியர்களின் மொத்த வீடியோ தேடல்களில் மூன்றில் ஒரு பங்கு (33%) பொழுதுபோக்குத் தொடர்பானவையாக உள்ளன.

ணையதளத்துக்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை விகிதம், முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகவும், அதே சமயம் இதில் பெரும்பாலானோர் பிராந்திய மொழி பயன்பாட்டாளர்கள்தான் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், இந்தியர்கள் மிக அதிகமாக எதைத் தேடுகிறார்கள் என்பது குறித்தத் தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது. 

டேட்டிங், மேட்ரிமோனி, வீடியோ... கூகுள் தேடலில் இந்தியர்களின் விருப்பம் எதில் அதிகம்?!

இணையத் தேடு பொறியான கூகுள் தளம் மூலம் இந்தியர்கள் கோடிக்கணக்கான தேடுதல்களை மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலின்படி, இந்தியாவில் மெட்ரோ நகரங்களில் உள்ளவர்களைக் காட்டிலும், மெட்ரோ அல்லாத இடங்களில் உள்ளவர்கள்தான் அதிக எண்ணிக்கையிலான இணையத் தேடல்களை மேற்கொள்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. 

'Year in Search - India: Insights for Brands' என்ற தலைப்பில் கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் புதிதாக இணையதளம் பயன்படுத்துபவர்களிலும் 10-ல் 9 பேர் பிராந்திய மொழி பயன்பாட்டாளர்கள்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தி, குஜராத், பெங்காலி, மராத்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் பிராந்திய மொழி சேவைகளை கூகுள் வழங்குகிறது. இந்த நிலையில், பிராந்திய மொழி பயன்பாட்டாளர்களின் தேடுதல்களில் வீடியோ, மியூசிக் மற்றும் செய்திகள் ஆகியவை முதன்மையாக இடம் பிடித்துள்ளன. 

வங்கி, நிதிச் சேவைகள், இன்ஷூரன்ஸ் தேடல்களில் ஆர்வம் 

இந்த நிலையில், இணையதளத்தில் இந்தியர்கள் எதை மிக அதிகமாகத் தேடுகிறார்கள், அதில் அவர்களது நடத்தை எவ்வாறு உள்ளது என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக, வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் இன்ஷூரன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய BFSI (banking, financial services and insurance) குறித்த தகவல்களைத் தேடுபவர்களில் 61% பேர் மெட்ரோ அல்லாத நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அதேபோன்று வாகனம் தொடர்பான தேடுதல்களிலும் 51% பேர் மெட்ரோ அல்லாத நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்தத் தேடுதல் தளம் தெரிவித்துள்ளது. 

டேட்டிங், மேட்ரிமோனி, வீடியோ... கூகுள் தேடலில் இந்தியர்களின் விருப்பம் எதில் அதிகம்?!

இதில், இன்னும் சில நுணக்கமான தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. மெட்ரோ அல்லாத நகரங்களிலிருந்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் தொடர்பான தகவல்களைத் தேடியவர்கள்  59%  பேர் என்றும், இது ஓராண்டில் 78% வளர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று  தனிநபர் கடன்கள் தொடர்பான தகவல்களைத் தேடியவர்கள் 57% பேர்; ஓராண்டில் இதன் வளர்ச்சி 109%.  லைஃப் இன்ஷூரன்ஸ் தகவல்களைத் தேடியவர்கள் 61%  பேர்; ஓராண்டில் இதன் வளர்ச்சி 43%.  மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தகவல்களைத் தேடியவர்கள் 59% பேர்; ஓராண்டில் இதன் வளர்ச்சி 61% எனத் தெரிய வந்துள்ளது. 

எந்த வீடியோவை அதிகம் தேடுகின்றனர்? 

அதேபோன்று ஆன்லைன் வீடியோ தேடுதல்களும் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும், இது 2020-ல் 50 கோடியைத் தொடும் என்றும்,  விஞ்ஞானம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் பொழுபோக்குத் தொடர்பான வீடியோக்களின் தேடுதல்கள் 2018-ம் ஆண்டில் மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியர்களின் மொத்த வீடியோத் தேடல்களில் மூன்றில் ஒரு பங்கு ( 33%)  பொழுதுபோக்குத் தொடர்பானவையாக உள்ளன. மேலும் லைஃப் ஸ்டைல், கல்வி மற்றும் பிசினஸ் தொடர்பான தேடல்கள், கடந்த இரண்டாண்டுகளில் 1.5 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளன. அதேபோன்று கார் வாங்குபவர்களில் 80 சதவிகிதம் பேர், அதற்கு முன்னதாக அது தொடர்பான வீடியோவை வீடியோவைப் பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

இதே ஆண்டில், பிராந்திய மொழி பயன்பாட்டாளர்களிடையே, தகவல் அறியும் ஆப்களை டவுன்லோடு செய்வது 21% அதிகரித்துள்ளது. அதேபோன்று அவர்களின் சராசரி டேட்டா நுகர்வும் 1.9 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டேட்டிங், மேட்ரிமோனி, வீடியோ... கூகுள் தேடலில் இந்தியர்களின் விருப்பம் எதில் அதிகம்?!

டேட்டிங் Vs மேட்ரிமோனி

டேட்டிங் தொடர்பான தேடல்கள், மேட்ரிமோனி ( திருமணம்) தொடர்பான தேடல்களைக் காட்டிலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதாவது, 2018-ம் ஆண்டில் டேட்டிங் தேடல்கள் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆன்லைன் டேட்டிங்குக்கு பிராண்ட் அடிப்படையிலான தேடுதல்கள் 37% வளர்ச்சியையும், மேட்ரிமோனி தேடுதல்கள் 13% வளர்ச்சியையும் எட்டியுள்ளன.  

ஆன்லைன் மூலமான உணவு ஆர்டர்களில், இந்தியர்கள் பிட்சாவையே அதிகமாக ஆர்டர் செய்துள்ளனர். இடங்களைத் தேடுவது போன்ற வழக்கத்தில் அல்லாத தேடல்கள், மெட்ரோ நகரங்கள் அல்லாத பயன்பாட்டாளர்களால்தான் அதிகமாகத் தேடப்பட்டுள்ளன. இதேபோன்று அழகுக் குறிப்புகள் தொடர்பான வீடியோக்களும் 2018-ம் ஆண்டில் இருமடங்கு அதிகரித்துள்ளது.  

டேட்டிங், மேட்ரிமோனி, வீடியோ... கூகுள் தேடலில் இந்தியர்களின் விருப்பம் எதில் அதிகம்?!

இந்த நிலையில், இந்த அறிக்கை விவரங்களை வெளியிட்டுப் பேசிய கூகுள் இந்தியாவின் இயக்குநர் (Country Director) விகாஸ் அக்னிகோத்ரி, இந்தியாவில் ஆன்லைன் பயன்பாடு முன்னெப்போதையும் விட மிக அதிகமாக இருப்பதாகவும், உலகின் மிக வேகமான இணைய நுகர்வு கொண்ட நாடாக இந்தியா உருவாகி விட்டதாகவும், இந்தியர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் பாலமாக இணையதளம் மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு