Published:Updated:

சரியான வாழ்க்கைத் துணைவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா?

சரியான வாழ்க்கைத் துணைவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா?
சரியான வாழ்க்கைத் துணைவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா?

ந்த உறவுமே தொடக்கத்தில் தேன்போன்றுதான் இனிக்கும். அதிலும் காதல் வலைக்குள் சிக்குபவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஆனால், தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் தருணம் எவ்வளவு முக்கியமானது என்பதை, பலரும் யோசிப்பதில்லை. தோற்றத்தால் ஏற்படும் ஈர்ப்பும், மேலோட்டமாகப் பார்க்கும் ஒன்றிரண்டு விஷயங்களையும் வைத்தே பெரும்பாலானவர்கள் முடிவெடுக்கின்றனர். 

சரியான வாழ்க்கைத் துணைவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா?

எந்தத் தலைப்பைப் பற்றியும் தயக்கமின்றி உங்கள் துணையுடன் பேச முடிகிறதா?

வெளிப்டையாகப் பேசி நம் எண்ணங்களை எந்தவிதத் தயக்கமுமின்றிப் பகிர்வதே ஆரோக்கிய உறவுக்கு அடித்தளம். எந்தத் தகவலாக இருந்தாலும் அதைப் பகிர்வதில் தயக்கமிருந்தால், நிச்சயம் அந்த உறவில் சிக்கல்கள் அதிகம் இருக்கும் அல்லது பின்னாளில் அதிகமாகும். பெரும்பாலான உறவுகள் முறிவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, பகிர்தலும் புரிதலும் இல்லாததே. எந்தப் பிரச்னையையும் பேசித் தீர்த்துவிட முடியும். ஆனால், பகிராமல் இருப்பது பிரச்னைகளை மேலும் வளர்த்துக்கொண்டே போகுமே தவிர, தீர்வை நோக்கி ஒருபோதும் செல்லாது.

எதிர்காலத்தை உங்கள் பார்ட்னருடன் பார்க்க விரும்புகிறீர்களா?

ஆரம்பக்காலத்தில் இருவரும் இணைந்து வாழப்போகும் நாள்களை எண்ணி கனவு கண்டவர்கள், நாளடைவில் அவை கனவாகவே போய்விட வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டால், பிரச்னை நிச்சயம். குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஆனால், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது மட்டும், குறைகளற்ற துணையையே அனைவரும் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த எதிர்பார்ப்பு தோல்வியடையும் நிலையில், தேவையில்லாத சண்டைகள், மனஉளைச்சல்கள் ஏற்படுகின்றன. ஒருகட்டத்தில் இது இருவருக்குமிடையே சலிப்புத்தன்மையை ஏற்படுத்திவிடுகிறது. அன்பு அதிகமாக இருக்கும் இடத்தில் குறைகள் குறைந்தே காணப்படும்.

சரியான வாழ்க்கைத் துணைவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா?

நிபந்தனையின்றி நேசிக்கிறீர்களா?

தீவிரமான உறவில் நீங்கள் மட்டும் இருந்துகொண்டு, உங்கள் பார்ட்னரிடமிருந்து சிறிதளவு அன்புகூட பெறாமல் இருந்தால், நீங்கள் உணர்ச்சியின் பேரழிவில் இருக்கிறீர்கள். இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்கள், என்ன வகையான உணர்வுகளை உங்களின் பார்ட்னர் உங்கள் மேல் புகுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அதேசமயம் நிபந்தனையற்ற காதலைக் கொடுப்பதற்குத் தடையாக இருக்கும் காரணங்களைத் தெரிந்துகொள்வதும் அவசியம். உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருந்தாலே, இந்தப் பிரச்னைக்கான சரியான தீர்வைப் பெற முடியும்.

இருவரும் காதலிக்கப்படுகிறீர்களா?

ஓர் உறவு, நீண்ட அழகான காதல் பாதைகளைப் பதிப்பதற்கு இருவரின் காதலும் அவசியம். இருவரின் சமமான முயற்சியில் அமைவதுதான் செழிப்பான வாழ்க்கை. இது, ஒருதலைக் காதலால் நிச்சயம் சாத்தியமில்லை. அதிகப்படியான ஏமாற்றங்கள், கருத்துவேறுபாடுகள் என நீண்ட நாள்கள் ஓர் உறவில் நிலைத்திருந்தால், அது வலுவற்ற உறவே. அதிலிருந்து வெளியே வருவதே சிறந்தது. இல்லையென்றால், தேவையற்ற மனஉளைச்சலுக்குத் தள்ளப்படுவீர்கள். துன்பத்தை நோக்கி நகராமல், வாழ்க்கை என்றைக்கும் வாழ்வதற்கே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சரியான வாழ்க்கைத் துணைவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா?

உங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உங்கள் பார்ட்னரைப் பிடித்திருக்கிறதா?

`கடைசி வரை வாழப்போறது நான். எனக்குப் பிடிச்சா போதும்' என்ற மனநிலைதான் இப்போது உள்ள இளைஞர்களிடம் பரவலாகவுள்ளது. இது, சமுதாயத்தில் ஒருவகை முன்னேற்றப் பாதைக்கான அறிகுறி என்றாலும், கவனமாக இருப்பதும் அவசியம். எந்தக் காரணத்துக்காக உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உங்கள் விருப்பத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதை உள்வாங்குவது அவசியம். தீவிரமான உறவுக்குள் நுழைவதற்கு முன், உங்களைச் சுற்றி உள்ளவர்களின் வார்த்தைகளை ஒன்றுக்கு இரண்டு முறை ஆராய்வது அவசியம். இந்த நவீன காலத்தில் `காதலுக்குக் கண் இல்லை' என்பதைவிட மற்றவர்களின் ஆலோசனைகளை காதில் வாங்கிச் செயல்படுவதில் தவறேதுமில்லை.

உங்கள் பார்ட்னரோடு நேரம் செலவழிக்கப் பிடிக்கிறதா?

நீண்டநேரம் உங்கள் பார்ட்னரைச் சந்திக்கவில்லையென்றால் மனதளவில் பெரும்பாரமாக இருக்கிறதா, அன்றைய நாளில் நடந்தவற்றை உங்கள் பார்ட்னரிடம் பகிரவில்லையென்றால் அந்த நாள் முழுமையடையாதது போன்று உணர்கிறீர்களா, உங்கள் பார்ட்னரோடு நேரம் செலவழிக்கப் பிடிக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு உடனடி பதிலாக `ஆம்' சொல்ல முடியவில்லை என்றால், நிச்சயம் உங்கள் உறவு பெரும்சிக்கலில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதைச் சரிசெய்வதே நன்று.

Vikatan