Election bannerElection banner
Published:Updated:

``பாலியல் தொல்லைகள் மாடலிங்லயும் இருக்கு!'' - `மிஸ் சூப்பர் குளோப் இந்தியா' அக்‌ஷரா

``பாலியல் தொல்லைகள் மாடலிங்லயும் இருக்கு!'' - `மிஸ் சூப்பர் குளோப் இந்தியா' அக்‌ஷரா
``பாலியல் தொல்லைகள் மாடலிங்லயும் இருக்கு!'' - `மிஸ் சூப்பர் குளோப் இந்தியா' அக்‌ஷரா

"நான் பட்டம் வென்ற பின் தமிழ் ரசிகர் கொடுத்திருக்கும் அன்பு உண்மையில் அளப்பரியது. அதனால் பொறுப்புணர்வும் அதிகமாயிருக்கு!"

``மிஸ் சூப்பர் குளோப் இந்தியா - 2019" என்ற அழகிப் பட்டத்தை வென்று உலக அளவில் நடக்க உள்ள அழகிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளவர் அக்‌ஷரா ரெட்டி. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட அக்‌ஷராவுடன் ஒரு கலகல சாட்!

உங்களைப் பற்றி?

``பாலியல் தொல்லைகள் மாடலிங்லயும் இருக்கு!'' - `மிஸ் சூப்பர் குளோப் இந்தியா' அக்‌ஷரா

``எனக்குச் சொந்த ஊர் சென்னை. ஸ்கூலிங் சென்னையில் முடிச்சேன். அமெரிக்காவில் பி.ஏ.சைக்காலஜி முடிச்சுருக்கேன். அம்மா சிங்கிள் மதர். பிசினஸ் பண்ணிட்டு இருக்காங்க. அம்மா, அண்ணா, நான் எங்களோட அன்பு கூடு ரொம்பச் சின்னது. எனக்குச் சின்ன வயசிலிருந்தே ஃபேஷன் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகம். காலேஜ் முடிச்சுட்டு என்னுடைய ஆர்வம் காரணமா மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். மாடலிங்னதும் ஆரம்பத்தில் தயங்கினாங்க அம்மா... ஆனா, அண்ணா எனக்கு சப்போர்ட் பண்ண மாடலிங் கனவு சாத்தியமாச்சு. கடந்த ஏழு வருஷமாக மாடலிங் பண்ணிட்டு இருக்கேன். தமிழ்நாட்டில் பிரபலமான எல்லா நிறுவன விளம்பரங்களிலும் நடிச்சுருக்கேன். விஜய் டிவியில் ஒளிபரப்பான `வில்லா டூ வில்லேஜ்' நிகழ்ச்சிதான் என்னுடைய முதல் மீடியா என்ட்ரி. அப்புறம் சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. லைஃப் இப்படியே போய்ட்டு இருந்தது. அப்பதான் ஆன்லைன்ல `மிஸ் சூப்பர் குளோப்' அழகிப்போட்டிக்கான அறிவிப்பைப் பார்த்தேன். உடனே அப்ளை பண்ணினேன். பல கட்ட தேர்வுகளுக்குப்பின் 'மிஸ் சூப்பர் குளோப் இந்தியா - 2019' வாகை சூடியது மகிழ்ச்சியாக இருக்கு. ஃபேஷன் தாண்டி நான் நேசிக்கும் விஷயம் விலங்குகள். என் பெட்ஸ்தான் என்னோட குளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.

மாடலிங், அழகிப்போட்டிகள் என்றாலே நிறம் முக்கியமா?

``பாலியல் தொல்லைகள் மாடலிங்லயும் இருக்கு!'' - `மிஸ் சூப்பர் குளோப் இந்தியா' அக்‌ஷரா

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அழகு என்பது நிறத்தை அடிப்படையாக வைத்து அளவீடு செய்யப்பட்டது உண்மைதான். ஆனால் தீபிகா படுகோன், அனுக்கீர்த்தி வாஸ், சுஷ்மிதா சென் போன்ற டஸ்கி ஸ்கின் டோன் அழகிகள் நிறம் சார்ந்த இந்த அழகுக்கோட்டையை உடைத்தவர்கள். அழகு மட்டுமே இந்தப் போட்டிகளின் பிரதானம் கிடையாது. கலந்து கொள்பவரின் நடை, உடை, மற்றவர்களிடம் பழகும் விதம், பேசும் விதம், தனித்திறமை, ஆப்டிடியூட் எனப் பலகட்ட தனித்திறன்களை அடிப்படையாகக் கொண்டது. மாடலிங்கிலும்கூட தற்போது டஸ்கி ஸ்கின் டோன் பெண்களுக்குத்தான் பெரும்பாலான நிறுவனங்கள் வாய்ப்புகள் தருகின்றன.

மாடலிங் துறையில் பாலியல் தொல்லைகள் நடக்குதுனு சொல்றாங்களே?

மாடலிங் துறையில் மட்டும் இல்ல. எல்லா துறையிலுமே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது. பெண்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் அவர்களுக்கான பாதுகாப்பு அடங்கியிருக்கிறது. நான் என் அம்மாவை எப்போதும் உடன் அழைத்துச் செல்வேன். அதனால் எனக்கு அப்படி எதுவும் நிகழவில்லை. ஒருவேளை அப்படி நடந்தால்கூட என் குரல் பலமாகத்தான் ஒலிக்கும்.

மிஸ் சூப்பர் குளோப் இந்தியாவில் கலந்துகொண்ட அனுபவம்?

``பாலியல் தொல்லைகள் மாடலிங்லயும் இருக்கு!'' - `மிஸ் சூப்பர் குளோப் இந்தியா' அக்‌ஷரா

'வில்லா டூ வில்லேஜ்' முடிந்த சமயத்தில் என்னோட ஸ்கின் டோன் ரொம்பவே டேமேஜ் ஆகியிருந்தது. அப்பதான் `மிஸ் சூப்பர் குளோப் இந்தியா' போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. ரொம்பத் தயங்கினேன். ரெண்டு மாசம் தொடர்ந்து ஸ்கின் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்ட பின்னாடிதான் போட்டிக்கு அப்ளை பண்ணேன். இந்தியா அளவில் 248 பேர் கலந்துக்கிட்டாங்க. ஒரு வாரம் தொடர்ந்து பயிற்சிகள், போட்டிகள் இருந்துச்சு. கடைசி சுற்றில் தேர்வு செய்யப்பட்ட ஆறு பேரில் நானும் ஒருத்தி. அப்பதான் என்னோட தன்னம்பிகை லெவல் அதிகரிச்சது. கேள்வி பதில் சுற்றில் மீ டூ மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணம் தொடர்பான கேள்விகளை கேட்டாங்க. அதுக்கெல்லாம் என்னோட தரப்பை நான் சொன்னேன். ஒரு தமிழ்ப் பொண்ணா நான் ஜெயிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

உலக அளவிலான போட்டிக்கு என்னென்ன பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறீர்கள்?

``பாலியல் தொல்லைகள் மாடலிங்லயும் இருக்கு!'' - `மிஸ் சூப்பர் குளோப் இந்தியா' அக்‌ஷரா

தினமும் கரெக்டான டயட், உடல் பயிற்சிகள், ஸ்கின் மெயின்டனஸ், கேள்வி பதில் சுற்றுக்கான பயிற்சிகள்னு தயாராகிட்டு இருக்கேன். இந்தியா அளவிலான டேலன்ட் சுற்றில் பாட்டு பாடினேன். உலக அளவில் எதாவது வித்தியாசமாகப் பண்ண பிளான் செய்துட்டு இருக்கேன். நிச்சயமாக டான்ஸ் ஆடமாட்டேன். இந்தப் போட்டிக்காக பயிற்சி பூனால நடக்கபோகுது. அதுல கலந்துக்கப் போறேன்.

எதிர்காலத்திட்டம்?

``பாலியல் தொல்லைகள் மாடலிங்லயும் இருக்கு!'' - `மிஸ் சூப்பர் குளோப் இந்தியா' அக்‌ஷரா

இப்போதைக்கு உலக அழகிப்பட்டம் ஜெயிக்கிற எண்ணம்தான் மனசுல ஓடிட்டு இருக்கு. சினிமா வாய்ப்புகள் வந்திருக்கு. அக்டோபருக்கு அப்புறம் திரைப்படங்களில் நடிப்பேன். 

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு