Election bannerElection banner
Published:Updated:

கழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது... கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி!

கழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது... கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி!
கழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது... கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி!

கழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது... கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி!

ந்தியாவின் நீர்வளம் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. இப்படியே போனால் என்ன ஆகும்? நம்முடைய நீர்நிலைகள் மட்டுமின்றி, நிலத்தடி நீரையும் முற்றிலுமாக இழந்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் (தொழிற்சாலைகளிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர்) வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்தத் தண்ணீர் கடல்நீரைப் போலத்தான். நமது அன்றாட வாழ்வுக்குப் பயன்படுத்துவது மிகவும் கடினம். நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்படிப்பட்ட கழிவுநீர் அல்லது கடல்நீரை சுத்திகரிக்க பல்வேறு முயற்சிகள் பலராலும் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், நீரில் உள்ள மாசு மற்றும் உப்புத்தன்மையை விரைவாகவும் எளிதாகவும் உறிஞ்சும் திறன்கொண்ட முறையைக் கண்டுபிடிப்பதுதான் உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் முன்னிருக்கும் சவால். 

கழிவுநீரை குடிநீராக்குவது இனி எளிது... கொலம்பிய விஞ்ஞானிகளின் புது முயற்சி!

இந்நிலையில் தற்போது, கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று, கழிவுநீரிலிருந்து உப்பைப் பிரித்தேடுக்க புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த முறை, வெப்பநிலை ஸ்விங் கரைப்பான் பிரித்தெடுத்தல் மற்றும்  உட்செலுத்துதல் (Temperature Swing Solvent Extraction & hypersaline brines) என அழைக்கப்படுகிறது. நிலத்தடிநீர் மாசுபாட்டிற்கு மிகப்பெரிய மூலமான, அதிக உப்புச்செறிவுகொண்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் எண்ணெய், எரிவாயு போன்றவற்றின் உற்பத்தியின்போது உருவாகும் கழிவுநீர், ஆகியவற்றை ஏழுமுறை சுத்திகரிக்கக்கூடிய வகையில் இந்தமுறை அமைந்துள்ளது.

கொலம்பியாவிலுள்ள பூமி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் Ngai Yin Yi தலைமையிலான ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ள இந்த முறையின்மூலம் நீரிலிருந்து 98.4 சதவிகிதம் வரை உப்பை பிரித்தெடுக்க முடியும். இந்த முறை, கழிவுநீரை சுத்தப்படுத்த மட்டுமின்றி, அதை மனிதர்கள் குடிக்க ஏற்றவாறு குடிநீராக மாற்றவும் உதவுகிறது. தற்போது, பரிசோதனை அளவில் மட்டும் இருக்கும் இந்தமுறை பயன்பாட்டுக்கு வரும்போது, குடிநீர் சுத்திகரிப்பில் நிறைய மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம். 

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு