Published:Updated:

இங்கு அறிவுப்பசியும் ஆற்றப்படும்!

இங்கு அறிவுப்பசியும் ஆற்றப்படும்!

இங்கு அறிவுப்பசியும் ஆற்றப்படும்!
இங்கு அறிவுப்பசியும் ஆற்றப்படும்!

திருவல்லிக்கேணி பாரதி மெஸ், வயிற்றுப் பசியோடு அறிவுப் பசியையும் போக்குகிறது. 'தங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்தப் புத்தகங்களை எடுத்துச்சென்று படிக்கலாம். இலவசம்!’ -மெஸ்ஸுக்குள் நுழைந்ததும் இந்த வாசகம்தான் வரவேற்கிறது. அதன்கீழே ஒரு கண்ணாடிப் பெட்டியில் உலக வரலாறு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை என, ஏகப்பட்ட புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டு உள்ளன.  

##~##

''பாரதி பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதே இந்த மெஸ். பாரதியின் 10 புகைப்படங்களே நம்மிடம் உள்ளன. அவற்றைக் குறிப்புகளுடன் ஃப்ரேம் செய்து இந்த மெஸ்ஸின் சுவர்களில் மாட்டிவைத்துள்ளோம். சாப்பிட வருபவர்கள் காத்திருக்கும் நேரத்தில் இதைப் பார்த்து பாரதியைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். அதேபோல், பாரதியின் பாடல்களும் ஒலிபரப்பப்படுகிறது. இங்கு சாப்பிட வருபவர்கள்தான் இந்த இலவசப் புத்தகங்களை எடுத்துச்செல்ல வேண்டும் என்பது இல்லை. யார் வேண்டுமானாலும் வந்து  எடுத்துச் செல்லலாம்.

வாசிப்புப் பழக்கம் பெருக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். புத்தகங்களை எடுத்துச் செல்பவர்களில் சிலர் திரும்பத் தருவார்கள். பலர் தருவது இல்லை. ஒரு சிலரோ தங்களின் புத்தகங்களையே கொண்டுவந்து கொடுப்பதும் உண்டு. மேலும் பாரதியார் கவிதைகளை 20 ரூபாய்க்கு சலுகை விலையில் அச்சிட்டு விற்பனைக்கு வைத்துள்ளோம். இவை அனைத்தும் மெஸ் வருமானத்தில் இருந்தே செய்யப்படுகிறது. விரைவில் மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்தும் திட்டமும் உள்ளது'' என்கிறார் பாரதி மெஸ்ஸின் மேலாளர் கணேசலிங்கம்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ஜெ.தான்யராஜு

அடுத்த கட்டுரைக்கு