Published:Updated:

இடியாப்பத்துக்கு செம சைட் டிஷ்... நெல்லை ஸ்பெஷல் சொதிக்குழம்பு! #MyVikatan

பி.ஆண்டனிராஜ்
இடியாப்பத்துக்கு செம சைட் டிஷ்...  நெல்லை ஸ்பெஷல் சொதிக்குழம்பு! #MyVikatan
இடியாப்பத்துக்கு செம சைட் டிஷ்... நெல்லை ஸ்பெஷல் சொதிக்குழம்பு! #MyVikatan

திருநெல்வேலி என்றதும் அல்வாதான் சட்டென்று ஞாபகம் வரும். அல்வா மட்டுமல்ல, அங்கு செய்யும் குழம்பு வகைகளும் தனி ருசி கொண்டவை. குறிப்பாக, நெல்லையில் நடக்கும் திருமணங்களில் பரிமாறப்படும் சொதிக்குழம்பு சிறப்பு வாய்ந்தது. தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலுடன் நிறைய காய்கறிகளைச் சேர்த்துச் செய்யப்படும் இந்தக் குழம்பின் ருசியே தனி.

இடியாப்பத்துக்கு செம சைட் டிஷ்...  நெல்லை ஸ்பெஷல் சொதிக்குழம்பு! #MyVikatan

பொதுவாகத் திருமணம் முடிந்த மறுநாளில் நடக்கும் மறுவீட்டு நிகழ்ச்சியின்போது சொதிக்குழம்பு விருந்து நிச்சயமாக இருக்கும். இதை இடியாப்பத்தின் மீது ஊற்றிச் சாப்பிட்டால்... அமர்க்களமான சுவையில் இருக்கும். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம். அனைத்து வகையான காய்கறிகளுடன் தேங்காய்ப் பால் சேர்வதால், நிறைய சத்துகள் கொண்ட ஆரோக்கியமான உணவாக இது கருதப்படுகிறது. 

இடியாப்பத்துக்கு செம சைட் டிஷ்...  நெல்லை ஸ்பெஷல் சொதிக்குழம்பு! #MyVikatan

இந்தச் சொதிக்குழம்பு பழக்கம் இலங்கையிலிருந்து வந்திருக்கக்கூடும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். திருமண விருந்தின்போது மிச்சம் இருக்கும் தேங்காய்கள், காய்கள் ஆகியவற்றை மறுநாளில் உறவினர்களுடன் சேர்ந்து விருந்தாகக் கொண்டாடி மகிழ்வதற்காக சொதிக்குழம்பு அல்லது தேங்காய்ப்பால் குழம்பு பயன்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அதுவே, ஒரு நடைமுறையாக மாறிவிட்டதால், திருமணத்தின் மறுநாளில் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்கும் விருந்தில் பரிமாறப்படுகிறது.

நெல்லையில் உள்ள சைவ சமூகத்தவர்களின் வீடுகளில் இந்த ரெசிபிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால் வாரத்தில் ஒருநாளாவது சொதிக்குழம்பு செய்கிறார்கள். இப்போதெல்லாம் நெல்லையில் உள்ள சைவ ஹோட்டல்களிலும் இந்த ரெசிபிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, வெள்ளிக்கிழமைகளில் அனைத்து ஹோட்டல்களிலும் சொதிக்குழம்பு ரெசிபி நிச்சயம் இடம் பெற்றிருக்கும்!