Published:Updated:

`சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பப்ஜி விளையாடத் தடை'... வேலை பாதிப்பதால் அதிரடி உத்தரவு

பிரபலமான மொபைல் கேமான பப்ஜியை விளையாட சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கேமான இதை விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதே நேரம் பப்ஜிக்குத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சிலர் எழுப்பி வருகிறார்கள். அதே போல அதிகமாக எழுந்த கோரிக்கைகளின் காரணமாகக் கடந்த மாதம் நேபாளத்தில் PUBG -க்கு முழுவதுமாகத் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் உள்ள பல பள்ளிகள், மற்றும் கல்லூரிகளில் இதை விளையாடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இதை விளையாடுவதால் அடிமையாகிவிடுகிறார்கள், மன நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது போன்றவையே தடை விதிக்கக் கோரிக்கை வைப்பவர்கள் சொல்லும் காரணமாக இருக்கிறது. இந்நிலையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் PUBG விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

`சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பப்ஜி விளையாடத் தடை'... வேலை பாதிப்பதால் அதிரடி உத்தரவு

வீரர்களின் வேலைகளைப் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தொடர்ச்சியாக பப்ஜியை விளையாடுவது வீரர்களின் வேலை செய்யும் திறனைப் பாதிக்கிறது. மேலும், அதனால் சக வீரர்களுடன் பழகுவது குறைந்து விடுவது மட்டுமன்றி தூக்கமின்மையையும் ஏற்படுத்தி விடுகிறது எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உயர் அதிகாரிகள் வீரர்கள் பப்ஜி விளையாடுவதைத் தடுக்க வீரர்களைக் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Vikatan