Published:Updated:

புதிய போராளிகள்!

புதிய போராளிகள்!

'' 'நண்பர்கள் கட்டண சேவை’. எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்குல்ல? கரெக்ட். 'போராளி’ படத்தில் சசிகுமாரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து 'பிள்ளையார் கட்டணச் சேவை’ என்ற பெயரில் பெய்டு சர்வீஸ் சென்டர் ஆரம்பிச்சு வாழ்க்கையில் முன்னேறுவாங்களே... அதே கான்செப்ட்தான்'' என்று 'போராளி’ போஸ் கொடுக்கிறார் ராஜ்குமார். இவர் தன் நண்பர்களுடன் இணைந்து அரும்பாக்கத்தில் இந்தக் 'கட்டண சேவை மையம்’ தொடங்கிய கதையைச் சொல்கிறார்.

புதிய போராளிகள்!
##~##

''நான் ஏழெட்டு வருஷமா வாட்டர் கேன் சர்வீஸ் பண்ணிட்டு வர்றேன். ஆட்டோ டிரைவர், மெக்கானிக்,  ஓவியர்கள், தியேட்டர்ல வேலை செய்பவர்கள்னு ஏகப்பட்ட நண்பர்கள். எல்லாருமே சசிகுமார் அண்ணனின் தீவிர ரசிகர்கள். அவர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்துடுவோம். 'போராளி’யையும் அப்படித்தான் பார்த்தோம். 'படத்தில் வர்ற 'பிள்ளையார் கட்டண சேவை’ கான்செப்ட் நல்ல ஐடியாவா இருக்கே, இதே டைப்ல நாம ஏன் ஒரு கட்டண சேவை மையத்தை ஆரம்பிக்கக்கூடாது?’னு தோணுச்சு. நண்பர்கள் கலந்து பேசினோம். 'நண்பர்கள் கட்டணச் சேவை’ உருவாகிடுச்சு. 'சினிமாவுக்கு ஓ.கே-ப்பா. ஆனா, நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா?’னு கேள்விப்பட்டவங்க எல்லாம் கேலியும் கிண்டலுமா சிரிச்சாங்க. 'ஏன் சினிமா நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடாதா?’னு திருப்பிக் கேட்டோம். அமைதியாகிட்டாங்க.

புதிய போராளிகள்!

மினரல் வாட்டர் சேவை மூலம் ஏகப்பட்ட வாடிக்கையாளர்களின் அறிமுகம்தான் இந்தச் சேவை மையத்தின் மூலதனம்.  எல்லார்கிட்டேயும் தகவல் சொன்னப்ப, 'சூப்பர்ப்பா. நல்லபடியா பண்ணுங்க. தினமும் எங்க வீட்டுக்கு இந்த லிஸ்ட்ல உள்ளபடி காய்கறி சப்ளை பண்ணிடுங்க’, 'சுகர் பேஷன்ட் அப்பாவுக்கு இந்த மாத்திரைகளை வாராவாரம் வாங்கித் தந்துடுங்க’, 'பையனை ஸ்கூலுக்கு அழைச்சிட்டுப் போற ஆட்டோ டிரைவர் சரியில்லை. வேற ஆட்டோ டிரைவரைப் பிடிச்சுத் தாங்களேன்’னு தொடங்கி செம ரெஸ்பான்ஸ்.

500 ரூபாய் வரை பொருள் வாங்கித் தர 50 ரூபாய் சேவைக் கட்டணம். 1000 ரூபாய்க்கு 100-ம், 2000- ரூபாய்க்கு 200-ம் வசூல் பண்றோம். காய்கறி, மளிகை சாமான்னு எல்லாப் பொருட்களையும் வீட்டுக்கே கொண்டுபோய் கொடுக்கிறோம். போகப் போக சென்னையின் மற்ற பகுதிகளிலும் இந்தச் சேவையைத் தொடங்கலாம்னு இருக்கோம். ஐடியா தந்து உதவிய  'போராளி’ டீமுக்கு நன்றி!'' என்கிறார் ராஜ்குமார்.

புதிய போராளிகள்!

தொகுப்பு: தி.முத்துராஜ், 
படங்கள்: ப.சரவணகுமார்

அடுத்த கட்டுரைக்கு