Published:Updated:

``அம்மாகிட்ட அடம்பிடிச்சு, அந்த ராசியான போட்டோவை வாங்கிட்டு வந்தேன்'' - பூர்ணிமா பாக்யராஜ் #WhatSpiritualityMeansToMe

``அம்மாகிட்ட அடம்பிடிச்சு, அந்த ராசியான போட்டோவை வாங்கிட்டு வந்தேன்'' - பூர்ணிமா பாக்யராஜ் #WhatSpiritualityMeansToMe
News
``அம்மாகிட்ட அடம்பிடிச்சு, அந்த ராசியான போட்டோவை வாங்கிட்டு வந்தேன்'' - பூர்ணிமா பாக்யராஜ் #WhatSpiritualityMeansToMe

"மும்பையில எங்க வீடு, டவுனுக்கு வெளியில ஒரு குவார்ட்டஸ்ல இருந்துச்சு. வாராவாரம் செவ்வாய்க்கிழமை காலையில சித்திவிநாயகர் கோயிலுக்கு அம்மாவும் அப்பாவும் சுவாமி கும்பிடப்போவாங்க. அப்போ எங்களையும் கூடவே அழைச்சிக்கிட்டுப் போவாங்க. ஸ்கூல்ல பரீட்சை நேரமா இருந்தா, அப்போ அவங்க மட்டும் போய்ட்டு வருவாங்க. அங்க போயிட்டு வந்தாலே மனசுல ஒரு கான்ஃபிடன்ஸ் கிடைக்கும்."

பூர்ணிமா பாக்யராஜ், 80 களில் தமிழ்த்திரையுலகை அலங்கரித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கதாநாயகிகளுள் ஒருவர். இயக்குநர் பாசில் இயக்கத்தில் `மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' எனும் மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமான பூர்ணிமா, தமிழிலும் தன் வெற்றிப்பயணத்தைத் தொடர்ந்தார். `பயணங்கள் முடிவதில்லை', `தங்க மகன்', `டார்லிங் டார்லிங்' எனப் பல திரைப்படங்களில் நடித்து, புகழ்கொடி நாட்டி முத்திரை பதித்தவர். திரைக்கதை மன்னன் என்று போற்றப்படும் கே.பாக்யராஜின் துணைவியார். பல ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு இப்போது, `கண்மணி' எனும் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். அவர் தனது ஆன்மிகம் குறித்த கருத்துகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.     

``அம்மாகிட்ட அடம்பிடிச்சு, அந்த ராசியான போட்டோவை வாங்கிட்டு வந்தேன்'' - பூர்ணிமா பாக்யராஜ் #WhatSpiritualityMeansToMe

``அப்பாவுக்குப் பூர்வீகம் தஞ்சாவூர்தானென்றாலும், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பையில்தான். அப்பா, அம்மா ரெண்டுபேருமே ரொம்பவும் கடவுள் நம்பிக்கை உள்ளவங்க. சின்னவயசில ஸ்கூல் படிக்கும்போது, நான் கும்பிட்ட தெய்வங்கள்னா ஆஞ்சநேயர், ராமர், குருவாயூரப்பன் ஆகிய மூன்று தெய்வங்களைத்தான். எங்க வீட்டு பூஜை அறையை இந்த மூன்று தெய்வங்களோட படங்கள் எப்போதும் அலங்கரிக்கும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காலையில் தினமும் சுவாமிக்கு, அம்மா பூஜை பண்ணுவாங்க. நாங்களும் பயபக்தியா சாமி கும்பிடுவோம். அம்மா பூஜையறையில, குருவாயூரப்பனின் கறுப்பு வெள்ளை படமொன்றை வைத்து பூஜை செய்வாங்க. அந்தக் காட்சி, இப்பவும் உயிர்ச்சித்திரமா மனசுல அப்படியே பதிஞ்சிருக்கு. திருமணத்துக்குப் பிறகு அம்மாக்கிட்டே கேட்டு, அடம்பிடிச்சு, ராசியான அந்தப் படங்களை வாங்கிட்டு வந்திட்டேன். இப்பவும் என் வீட்டு பூஜையறையில் அந்தப் படங்கள்தான் இருக்கு.

``அம்மாகிட்ட அடம்பிடிச்சு, அந்த ராசியான போட்டோவை வாங்கிட்டு வந்தேன்'' - பூர்ணிமா பாக்யராஜ் #WhatSpiritualityMeansToMe

டான்ஸரான எங்கம்மா, சின்னவயசுலயே பரத நாட்டிய கிளாஸுக்கு என்னை அனுப்பி வெச்சாங்க. நானும் நல்ல விதமா கத்துக்கிட்டேன். அம்மாவுக்குக் குருவாயூரப்பன் கோயில்ல பரதநாட்டிய அரங்கேற்றம் பண்ணணும்னு ஆசை. அதேபோல குருவாயூரப்பன் அருளால, என்னுடைய பத்தாவது வயசுல, பரதநாட்டிய அரங்கேற்றம் குருவாயூர் கோயிலில்தான் நடந்தது. 

மும்பையில எங்க வீடு, டவுனுக்கு வெளியில ஒரு குவார்ட்டஸ்ல இருந்துச்சு. வாராவாரம் செவ்வாய்க்கிழமை காலையில சித்திவிநாயகர் கோயிலுக்கு அம்மாவும் அப்பாவும் சுவாமி கும்பிடப்போவாங்க. அப்போ எங்களையும் கூடவே அழைச்சிக்கிட்டுப் போவாங்க. ஸ்கூல்ல பரீட்சை நேரமா இருந்தா, அப்போ அவங்க மட்டும் போய்ட்டு வருவாங்க. அங்க போயிட்டு வந்தாலே மனசுல ஒரு கான்ஃபிடன்ஸ் கிடைக்கும். வளர்ந்த பிறகு, ஒவ்வொரு சனிக்கிழமையும் ரெகுலரா ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போவேன். பிறகு மகாலட்சுமி, துர்கை ஆகிய பெண்தெய்வங்களையும் விரும்பி வணங்க ஆரம்பிச்சேன். 

``அம்மாகிட்ட அடம்பிடிச்சு, அந்த ராசியான போட்டோவை வாங்கிட்டு வந்தேன்'' - பூர்ணிமா பாக்யராஜ் #WhatSpiritualityMeansToMe

இயக்குநர் பாசில் மூலமா `மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' மலையாளப் படத்தில் அறிமுகமான நான், தொடர்ந்து தமிழ் உட்படப் பல படங்கள்ல நடிச்சு பிரபலமானேன். சினிமாவுல ரொம்ப பீக்ல இருக்கும்போதே, பாக்யராஜ் சாரை திருமணம் பண்ணிக்கிட்டேன். எங்களுடைய திருமணம் 1984-ல திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோயிலில வச்சு, அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தலைமையில நடந்துச்சு. அது எங்களுக்குக் கிடைச்ச பெரிய பாக்கியம். அதுக்குப் பிறகு மூகாம்பிகை கோயிலுக்கும் போய் சாமி கும்பிட்டுட்டு வந்தோம். எங்களுடைய படம் ரிலீஸாகிற நாளிலெல்லாம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குக் காலையிலே போய் பூஜை பண்ணிட்டு வந்திடுவேன்.

எங்க வீட்டுக்காரரைப் பொறுத்தவரை அவர் ஒரு முருக பக்தர். மருதமலை, பழநி ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபடுவார். இரண்டுபேரும், திருப்பதிக்கு அடிக்கடி போய் வேங்கடேசப் பெருமாளை தரிசனம் பண்ணிட்டு வருவோம். ஆனா, மற்ற கோயில்கள் எப்படியோ, திருப்பதிக்கு மட்டும் பெருமாள் நினைச்சா மட்டும்தான் நம்மால அவரை தரிசனம் பண்ணமுடியும். ஒருமுறை திருத்தணிக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம். `இவ்வளவு தூரம் வந்திட்டோம், அப்படியே திருப்பதிக்குப் போயிட்டு வருவோம்'னு கிளம்பிப் போயிட்டோம். அங்க போய்ப் பார்த்தால், அன்றைக்கு ஒரு ஆச்சர்யமான விஷயமா, கோயில்நடையைப் பகல்லயே சாத்திட்டாங்க. 

``அம்மாகிட்ட அடம்பிடிச்சு, அந்த ராசியான போட்டோவை வாங்கிட்டு வந்தேன்'' - பூர்ணிமா பாக்யராஜ் #WhatSpiritualityMeansToMe

திருமலையிலே தங்கியிருந்து மறுநாள் தரிசனம் பண்ணலாம்னா, வேலைகள் நிறைய இருந்துச்சு. அதனால, சுவாமியைப் பார்க்காமலே திரும்பி வந்துட்டோம். அதுக்கப்புறம் பல முறை போயிருக்கோம். எப்போ போனாலும் இரண்டு நாள் தங்கி இருந்துதான் தரிசனம் பண்ணிட்டு வருவோம். என் மருமகள் கீர்த்தியும் என்னை மாதிரியே ரொம்ப பக்திபூர்வமா இருப்பாள். அவ ஷீரடிசாய்பாபா பக்தை.

``அம்மாகிட்ட அடம்பிடிச்சு, அந்த ராசியான போட்டோவை வாங்கிட்டு வந்தேன்'' - பூர்ணிமா பாக்யராஜ் #WhatSpiritualityMeansToMe

வாழ்க்கை எங்கோ ஆரம்பிச்சு, பல இடங்கள் பயணப்பட்டு, பல கஷ்ட நஷ்டங்களைத் தாண்டித்தான் நமக்கான ஒரு இடத்துக்கு வந்து சேருது. ஆனா, எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் நமக்குக் கை கொடுப்பவை நம் பிரார்த்தனைகள்தான். கஷ்டமான நேரங்கள்ல `ஹனுமன் சாலிஷாவைச் சொல்லுவேன், மனசுக்கு ரொம்ப இதமாயிருக்கும். பிரச்னையும் சூரியனைக் கண்ட பனி மாதிரி விலகிப்போயிடும். அதுவும் சின்ன வயசுல கேட்ட மராத்தி மொழியில இருக்கிற `ஹனுமன் சாலிஷா'வைக் கேட்கிறதும் பாடுறதும் எனக்கு மிகவும் பிடிக்கும்'' என்றவாறே அந்த ஸ்லோகத்தைப் பாடிக் காண்பித்து, தனது ஆன்மிக அனுபவத்தை நிறைவுசெய்தார் பூர்ணிமா பாக்யராஜ்.