Election bannerElection banner
Published:Updated:

காய்கறியே கதாநாயகன்!

காய்கறியே கதாநாயகன்!

'மறந்து போன தென் மாவட்ட பாரம்பரிய உணவுகளை நினைவுபடுத்தும் முயற்சிதான் இந்த உணவுத் திருவிழா. வெறும் காய்கறிகளை மட்டுமே வைத்து நடைபெறும்  இந்த ஸ்பெஷல் திருவிழாவில் என் விகடன் கலந்துகொள்ளுமா?’ - இது தி.நகர் கோவிந்தன் தெருவில் உள்ள ஹோட்டல் செல்லாஸின் உரிமையாளர் செல்லதுரை வாய்ஸ் நாப்பில் தந்த தகவல்.  

காய்கறியே கதாநாயகன்!
##~##

''சென்னையில் ஃபுட் ஃபெஸ்டிவல்ங்கிற பேர்ல செஞ்சு அடுக்கிவெச்சு இருக்கிற ஏகப்பட்ட வடநாட்டு உணவு அயிட்டங்களைப் பார்த்து இருப்பீங்க. சாப்பிட்டும் இருப்பீங்க. விலையும் எக்கச்சக்கமா இருக்கும். அந்த உணவை நம்ம உடம்பு ஏத்துக்குமா, ஏத்துக்காதானு எதுவும் தெரியாமலேயே ஒரு பிடி பிடிப்போம்.

ஆனால், இந்தத் திருவிழாவில் கதாநாயகனே காய்கறிதான். மெயின் டிஷ்ஷே காய்கறி பதார்த்தங்கள்தான். அதுவும் குறிப்பா குழந்தைகளுக்குக் காய்கறிகளின் முக்கியத்துவத்தை உணர்த்துறதுதான் இந்தத் திருவிழாவின் நோக்கம். அவரைக்காய், பீன்ஸ், கேரட்னு வழக்கமான காய்கறிகள்தான். ஆனால், அதைவெச்சு வெரைட்டியா குழந்தைகளுக்குப் பிடிக்கிற மாதிரி எப்படிச் சமைக்கிறதுனு சொல்லாமச் சொல்லி இருக்கோம். குழந்தைகளே தங்களுக்கு வேணும்கிறதை எடுத்துச் சாப்பிடலாம். இந்த ஃபுல் மீல்ஸ் 99 ரூபாய்தான். எங்க விலைப் பட்டியல்ல இதுதான் அதிகபட்ச விலை.

காய்கறியே கதாநாயகன்!

அதுமட்டுமில்லாம எங்க திருவிழாவில் இன்று கிடைக்காத பல்வேறு காய்கறிகளில் செய்யப்பட்ட டிஷ்கள் ஸ்பெஷல். முக்கியமா அதலைக்காய்-ஆவாரம்பூ கூட்டு. அதலைக்காய் என்பது விருதுநகர் மாவட்டத்தில் அதிகமா விளையும் காய். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்ப நல்லது. இது சென்னையில கிடைக்காது. விருதுநகர்ல இருந்து வரவழைச்சிருக்கோம். நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறதால இந்தக் காய்கறித் திருவிழாவை மாசாமாசம் நடத்தலாம்னு இருக்கோம்'' என்கிறார் செல்லதுரை.

- தொகுப்பு: தி.முத்துராஜ்,
படங்கள்: ப.சரவணகுமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு