Published:Updated:

`குடியை நிறுத்திவிடலாம் என்ற எண்ணம் இந்தியர்களுக்குத்தான் அதிகம்!’ - ஆய்வில் தகவல்

`குடியை நிறுத்திவிடலாம் என்ற எண்ணம் இந்தியர்களுக்குத்தான் அதிகம்!’ - ஆய்வில் தகவல்
`குடியை நிறுத்திவிடலாம் என்ற எண்ணம் இந்தியர்களுக்குத்தான் அதிகம்!’ - ஆய்வில் தகவல்

து குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பிற நாட்டைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும் இந்தியர்களுக்கு அதிகமாகக் காணப்படுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

`குடியை நிறுத்திவிடலாம் என்ற எண்ணம் இந்தியர்களுக்குத்தான் அதிகம்!’ - ஆய்வில் தகவல்

போதைக்கு அடிமையான நிலையில் இல்லாமல் பொழுதுபோக்குக்காக போதைப்பொருள்களைப் பயன்படுத்துபவர்கள் குறித்த சர்வதேச ஆய்வை `தி குளோபல் ட்ரக் சர்வே' என்ற அமைப்பு நடத்தியது. உலகம் முழுவதும் 30 நாடுகளில் ஒரு லட்சம் பேர் இந்த இணையதள ஆய்வில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெற்ற ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

`குடியை நிறுத்திவிடலாம் என்ற எண்ணம் இந்தியர்களுக்குத்தான் அதிகம்!’ - ஆய்வில் தகவல்

ஆய்வில், மதுப்பழக்கம், புகைப்பழக்கம், கஞ்சா ஆகிய மூன்று போதைப்பொருள்களை இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இந்தியர்கள் 12 மாதங்களில் சராசரியாக 41 முறை மது குடிக்கின்றனர். இந்த எண்ணிக்கை இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க் நாடுகளைக் காட்டிலும் குறைவாக உள்ளது. உலக அளவில் இந்த சராசரி 33 ஆக இருக்கிறது. 

ஆய்வில் பங்கேற்றவர்களில் 51 சதவிகிதத்தினர் வரும் நாள்களில் மது குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 41 சதவிகிதத்தினர் மதுப்பழக்கத்தை குறைத்துக்கொள்வதற்கு ஏதேனும் மருத்துவ உதவியை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

`குடியை நிறுத்திவிடலாம் என்ற எண்ணம் இந்தியர்களுக்குத்தான் அதிகம்!’ - ஆய்வில் தகவல்

``அளவுக்கு மீறி மது குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற விழிப்புணர்வு இந்தியர்களிடம் காணப்படுவதையே இந்த ஆய்வு பிரதிபலிக்கிறது" என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Vikatan