Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

மெரிக்க அரசு இணையத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் கொண்டு வர முயன்ற சோபா மசோதா செல்லா மல் போய்விட்டது என்ற மகிழ்ச்சியில் இருந்த இணைய சுதந்திர விரும்பிகளுக்கு, 'தேசவாரியாக ட்வீட்டுகளைத் தணிக்கை செய்யும் வசதி தங்களுக்கு இருக்கிறது’ என்ற ட்விட்டரின் அறிவிப்பு, சற்றே சோகம் வரவைக்கும்!

 'நாஜி கொள்கைகளைப் பற்றி ஜெர்மனியிலும் பிரான்ஸிலும் விமர் சிப்பது சட்டப்படி தவறு. எனவே, இந்தச் சட்டத்தை மீறிய ட்வீட்டுகளை யாராவது அனுப்பினால், அதை நாங்கள் சென்சார் செய்தாக வேண்டும்!’ என்று ட்விட்டர் அறிவித்து இருந்தாலும்,  இந்தப்புதிய கொள்கைக்கு முக்கியக் காரணம், சீனச் சந்தைக்குள் ட்விட்டர் செல்ல இருக்கும் சூழலில், சமூக வலைதளங்களுக்கு அங்கு உள்ள கடுமையான சூழலும், சமீபத்தில் தணிக்கைபற்றி இந்திய அரசு விடுத்த மிரட்டலுமே என நினைக்கிறேன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

இதை ட்விட்டர் நடைமுறைப்படுத்தினால் என்ன ஆகும்?

சீனாவில் இருக்கும் ஒருவர் சீன அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று ட்விட்டரில் எழுதினால், அந்த ட்வீட்டு கள் சீனாவுக்குள் மறைக்கப்படும். மற்ற நாடுகளில் இதே ட்வீட்டைப் பார்க்க முடியும். ஆனால், சீனாவின் எல்லைக்குள் இந்த ட்வீட்டுகள் மற்ற ட்விட்டர் பயனாளர்களால் பார்க்க முடியாது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னால், ட்விட்டரின் நிலைப்பாடு வேறு மாதிரியாக இருந்தது. கருத்துச் சுதந்திரமே முக்கியம்... அதை நிலைநாட்ட எங்களால் ஆன எதையும் செய்வோம் என்றது ட்விட்டர். சட்டரீதியாக ஏதாவது ட்வீட்டுகளைத் தணிக்கை செய்ய நேர்ந்தால், அதையும் வெளிப்படையாக 'சில்லிங் எஃபெக்ட்ஸ்’ (http://chillingeffects.org/) என்ற நிறுவனம் மூலமாகப் பகிர்ந்துகொள்வோம் என்றது. இது இணைய நிறுவனங்களுக்கு கருத்துச் சுதந்திரம்பற்றிய அறிவுரை வழங்கும் வணிக லாப நோக்கற்ற நிறுவனம். விக்கிலீக்ஸ் பற்றிய ட்வீட்டுகளின் தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க நீதித் துறை நோட்டீஸ் (Subpoena) கொடுத்தபோது, அதைப் பற்றி வெளிப்படையாக அறிவித்தது.

ஆனால், ட்விட்டரின் இன்றைய அறிவிப்பு அந்த நிலைப்பாட்டில் இருந்து அது பின்வாங்கி இருப்பதாகவே தெரிகிறது. 'சர்வதேசச் சந்தைகளுக்குள் நுழைந்துகொண்டு இருக்கும் நமக்கு, சில நாடுகள் 'கருத்துச் சுதந்திரம்’ என்பதற்கு வேறுவிதமான அர்த்தத்தைக்கொண்டு இருக்கலாம் என்பது புலப்படுகிறது!’ என்று பட்டும் படாமலும் சொல்லியிருக்கும் ட்விட்டர்,சில்லிங் எஃபெக்ட்ஸ் நிறுவனத்துக்குத் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுமா என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லவில்லை!

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை, ஸ்டீவின் மறைவுக்குப் பின்னர், அந்த நிறுவனம் என்ன ஆகும் என்று கவலைப்பட்டவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி அளித்திருக்கிறது. 35 மில்லியன் ஐ-போன்கள், 15 மில்லியன் ஐ-பேடுகள் என வாங்கித் தீர்த்திருக்கிறார்கள் உலகம் முழுக்க இருக்கும் நுகர்வோர். விளைவு..? கிட்டத்தட்ட 14 பில்லியன் டாலர்களை இந்தக் காலாண்டில் மட்டும் சம்பாதித்து இருக்கிறது ஆப்பிள். கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்களைப் பணமாக வைத்திருக்கும் ஆப்பிள், இந்தப் பணத்தைக்கொண்டு என்ன செய்யப்போகிறதுஎன்பது தான் அடுத்த கேள்வி.

இந்தத் தருணத்தில் டென்னிஸ் ரிட்சி பற்றிச் சொல்லியாக வேண்டும்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ஸ்டீவின் அகால மரணத்துக்கு அமெரிக்க அதிபர் வரை அனுதாபம் தெரிவித்து, அவரது வாழ்க்கையையும் சாதனைகளையும் கொண்டாடியபடி இருந்த அந்த வாரத்தில், யாருக்குமே தெரியாதபடி தன்னந்தனியாகத் தனது அபார்ட்மென்ட் டில் இறந்துபோனார் டென்னிஸ் மெக் ஆலிஸ்டர் ரிட்சி.

சோகம் என்னவென்றால், டெக் உலகுக்கு டென்னிஸின் பங்களிப்பு ஸ்டீவின் பங்களிப்புடன் ஒப்பிடும்போது எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.

கணினிப் பொறியியல் அல்லது   விஞ்ஞானம் பயில்பவர்களுக்கு டென்னிஸ் ரிட்சி என்ற பெயர் பரிச்சயமானது. காரணம், கணினிகளை இயக்கும் கீழ்நிலை நிரலாக்க மொழியான 'சி’-யைத் தோற்றுவித்தவர் டென்னிஸ். பெருங்கணினிகளை இயக்கும் பிரபலமான யூனிக்ஸ் (UNIX) இயங்கு மென்பொருளைத் தோ

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ற்றுவித்த கென் தாமசனு டன் இணைத்து எழுதிய 'சி புரொகிராமிங் லாங்குவேஜ்’ கணினிக்கு மென்பொருள் எழுதுபவர்களுக்கு பைபிள். டென்னிஸ் தோற்றுவித்த 'சி’ மொழி இல்லாது இருந்தால், ஆப்பிள் கணினியில் பயனீட்டு மென்பொருள்கள் உருவாக்கப்பட்டதே சாத்தியம் இல்லாமல் போய்இருக்கும்.

டென்னிஸ் ரிட்சிபற்றி எப்படிச் சொல்லாமல் இருக்கலாம் அண்டன் என்று என்னிடம் சாட்டிலும் மின் அஞ்சலிலும் உரிமையுடன் கோபப்பட்ட தீவிர 'டெக்’கர்களுக்கு எனது நன்றிகள்!

LOG OFF