Published:Updated:

"இதயத் துடிப்பே எங்களின் இசை!"

"இதயத் துடிப்பே எங்களின் இசை!"

"இதயத் துடிப்பே எங்களின் இசை!"

"இதயத் துடிப்பே எங்களின் இசை!"

Published:Updated:

சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் மையத்தில் அன்று தன்னம்பிக்கை ததும்பி வழிந்தது. காரணம், 'எபிலிட்டி அன்லிமிட்டெட் ஃபவுண்டேஷன்’ குழுவினர் இரண்டு நாட்கள் நடத்திய வீல் சேர் நடனம். இதில் நடனமாடிய மாணவ, மாணவிகள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள். இங்கு நாற்காலி சுற்றும் சத்தமே சலங்கை ஜதி! இந்தக் குழுவின் நிறுவனர் சையத் சலாவுதீன் பாஷாதான் இவர்களுடைய குரு.

"இதயத் துடிப்பே எங்களின் இசை!"
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''30 வருஷம் ஆச்சுங்க. பல மேடைகள் பார்த்தாச்சு. அலுக்குற வரை சலங்கைக் கட்டி ஆடியாச்சு. 'எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்குறது?’னு ஒருநாள் தோணுச்சு. அப்பதான் இந்த மாற்றுத்திறனாளிகள் கண் முன்னே வந்தாங்க. இவங்களும் மத்தவங்களை மாதிரி படிக்கிறாங்க, வேலைக்குப் போறாங்க. ஆனால், நடனமும் விளையாட்டும் இவங்களுக்கு எட்டாத உயரத்துலதான் இருக்கு. அதை இவங்களுக்குப் பக்கத்தில் கொண்டுவரும் முயற்சிதான் இந்த வீல் சேர் பரத நாட்டியம். 1988-ல் இந்தக் குழுவை ஆரம்பிச்சேன். அப்ப இவங்க காலைச் சுத்தி தவழ்ந்து விளையாடும் குழந்தைங்க. நல்லா விளையாட வேண்டிய வயசுல தவழ்ந்துட்டு இருக்காங்களேனு வேதனையா இருந்தது'' என்று வருந்தியவர் தன் குழுவில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தினார்.

குல்ஷன் குமார், ஆஷிக் அலி, மனிஷ் குமார், விஜய்குமார், தர்மேந்திரா, அல்கா ஆஷா, கருணா, பிரியா, ஜோதி. முதல் ஐந்து பேரும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள். கடைசி நான்கு பெண்கள் பேசவும், கேட்கவும் இயலாதவர்கள். டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. நிகழ்த்து கலை படிக்கும் குல்ஷன்,  ''என் அப்பா-அம்மாவுக்கு இஸ்திரி போடும் வேலை.  ஏற்கெனவே கஷ்டப்படுற அவங்களுக்கு நான் இப்படிப் பிறந்ததால் இன்னும் கஷ்டம் அதிகமாயிடுச்சு. சார்கிட்டதான் டான்ஸ் கத்துக்கிட்டேன். நாங்க ஒன்பது பேரும் குருவோட வீட்லயே தங்கி, படிச்சு, டான்ஸ் கத்துக்கிட்டு இப்ப அவர்கிட்டேயே அசிஸ்டென்ட் கோரியோகிராஃபர்களா இருக்கோம்'' என்கிறார். இவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே ஒரு நிமிடத்தில் சுழற்றிய சுற்றுகளின் எண்ணிக்கை 63. இந்தச் சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். இப்படி ஒவ்வொருத்தருக்கும் சோக, சாகசப் பக்கங்கள் உள்ளன.

இரண்டு நாட்கள் நடைபெற்ற நாட்டிய விழாவில் பரத நாட்டியம், சூஃபி நடனம், பகவத் கீதை நாட்டிய நாடகம் என வீல்சேரில் வித்தை காட்டினார்கள். 'மாணவிகளால் கேட்க முடியாது. அவர்களால் எப்படி இசைக்கு ஏற்ப ஆட முடிகிறது?’ என்றதும் குல்ஷன் முன்னால் வந்து சொல்கிறார், ''அவங்களுக்கு இதயத் துடிப்புதான் இசை. 'லப் டப்’ ஒலிதான் பீட்!''

‘பாலங்களைக் கட்டுவதற்குப் பதிலாகச் சுவர்களை எழுப்புவதால்தான் மக்களில் பலர் தனித்து இருக்கிறார்கள்’ என்கிறது ஒரு பொன்-மொழி. இப்படி ஒரு பாலம்தான் மணலி மக்களின் உடனடி தேவை. கல், சுண்ணாம்பு, சிமென்ட், இரும்பு கலந்து கட்டப்பட்ட பாலங்-களைவிட சென்னை மணலி சடையான்-குப்பத்தில் உள்ள ஒரு புராதன மரப் பாலத்துக்கு விசிட் அடித்தேன்.

"இதயத் துடிப்பே எங்களின் இசை!"


 

மரப் பாலத்தின் வரலாறு சொல்கிறார் ஊர்த் தலைவர் பரசுராமன். ‘‘எனக்குப் பூர்வீகமே இந்த ஊர்தான். சடையான்குப்பத்துல இருந்து திருவொற்றியூருக்குப் போறதுக்கு ரெண்டே வழிகள்தான். ஒண்ணு ரோட்டு வழியா போகணும். அப்படிப்போனா 14 கிலோ மீட்டர். பைக்னா அந்த ரோட்லதான் போகணும். இன்னொரு வழி, இந்த மரப் பாலம்தான். இப்புடிப் போனா திருவொற்றியூர் அரை கிலோ மீட்டர் தூரம்தான்.

எங்க ஊருக்கு எதிரே பக்கிங்காம் கால்வாய் போவுது. அதைக் கடந்து போறதுக்கு சிமென்ட் பாலம் கட்டி இருக்காங்க. ஆனா, ஏன்னு தெரியலை. இந்த ஆத்தைக் கடக்குறதுக்கு அப்படி எதுவும் பாலம் கட்டலை. ஒவ்வொரு முறையும் அரசுக்கு மனு கொடுப்போம். கொஞ்ச நாளு கழிச்சு கவர்மென்ட்ல இருந்து ஆளுங்க வரு-வாங்க. வந்து பரபரனு போட்டோ புடிப்-பாங்க. ஏதோ அவங்களுக்குள்ள பேசிக்கிட்டு கிளம்பிப் போயிடுவாங்க. அப்புறம் ஒண்ணும் நடக்காது.

பள்ளிக்கூடத்துக்குப் போற பசங்க, சீக்கா-ளிங்க, வயாசானவங்க, கர்ப்பிணிங்கனு பலரும் இந்தப் பாலத்து மேலதான் போறோம். ஆனால், அவசரத்துக்கு பைக், கார்ல போகணும்னா ரொம்பக் கஷ்டமாயிடுதுங்க சார். அதுவும் ஒவ்வொரு மழை, வெள்ளத்துக்கும் இந்தப் பாலம் அடிச்சிட்டுப் போயிடும். பிறகு நாங்களே திரும்பவும் இந்தப் பாலத்தைக் கட்டுவோம். 50 வருஷமா இப்படித்தான் சார் எங்க வாழ்க்கை போயிட்டு இருக்கு. அடுத்த மழை எப்பன்னு தெரியலை!’’ என்று வேதனை-யோடு முடித்தார்.

ஒரு விவசாயி எதிர்பார்க்கும் மழைக்கும், இந்த ஊர் மக்கள் எதிர்பார்க்கும் மழைக்கும் உள்ள வித்தியாசத்தை அந்தப் பாலம் அமைதியாக உணர்த்தியது!

"இதயத் துடிப்பே எங்களின் இசை!"

கட்டுரைகள், படங்கள்: ந.வினோத்குமார்