Published:Updated:

அரோமா மேஜிக்... புத்துணர்ச்சிக்கு புதுவழி!

அரோமா மேஜிக்... புத்துணர்ச்சிக்கு புதுவழி!
அரோமா மேஜிக்... புத்துணர்ச்சிக்கு புதுவழி!

அகர்பத்திகள், விளக்கில் எறியும் எண்ணெயின் வாசம், சாம்பிராணி புகையின் நறுமணங்கள் எப்போதுமே நமக்குள் பேரமைதியை  ஏற்படுத்தும். இன்றைய நவீன வாழ்க்கை முறையின் குறியீடாக அரோமா மாறியிருப்பது அந்த பின்னணியில்தான்.

ன்று செயற்கை வாழ்விலிருந்து மக்கள்  விலக விரும்புகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக இயற்கையை நேசிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கு முக்கிய சாட்சி, அரோமா பொருள்களின் விற்பனை அதிகரித்திருப்பதுதான். கார்ப்பரேட் கலாசாரத்தில்கூட இவை முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன. பெரும்பாலான அலுவலகத்தின் மீட்டிங் மற்றும் கலந்தாலோசனை அறைகளில் நறுமணம் வீசும் எண்ணெய்களை வைக்கின்றனர். அறைக்குள் நுழையும்போதே இயற்கை வாசனை, பணியாளர்களின் டென்ஷனைக் குறைத்து புத்துணர்ச்சியை அளிக்கிறது என்பதால், பெரும்பாலான கூட்டங்கள் வெற்றிகரமானதாகவே அமைகின்றன.

இயற்கையே அரோமாவின் ஆதாரம்!

அரோமா மேஜிக்... புத்துணர்ச்சிக்கு புதுவழி!

நறுமணங்களைச் சுவாசிக்கும்போது, நமக்குள் ஏற்படும் மாற்றத்தை, உத்வேகத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. வகைவகையான சென்ட், பாடி ஸ்ப்ரே என வந்துவிட்டாலும், இயற்கை முறையில் தயாராகும் ஜவ்வாது வாசனைக்கு ஈடுயிணை உண்டா? அது தனித்து தெரிவதற்குக் காரணம், இயற்கை! இன்றைய நிலையில் அரோமா பொருள்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதற்குக் காரணமும் அவற்றின் இயற்கை குணமே.

நறுமணம் வீடெங்கும் வீசட்டும்!

அரோமா மேஜிக்... புத்துணர்ச்சிக்கு புதுவழி!

அகர்பத்திகள், விளக்கில் எரியும் எண்ணெய்யின் வாசம், சாம்பிராணிப் புகையின் நறுமணங்கள் எப்போதுமே நமக்குள் பேரமைதியை  ஏற்படுத்தும். இன்றைய நவீன வாழ்க்கைமுறையின் குறியீடாக அரோமா பொருள்கள் மாறியிருப்பது அந்தப் பின்னணியில்தான். அரோமா எண்ணெய்கள், நறுமணம் தரும் காய்ந்த பூக்கள், மணம் வீசும் குச்சிகள் மற்றும் மெழுகுவத்திகள் என வெவ்வேறு வடிவங்களிலும், படிக்கும் அறை, படுக்கும் அறை, குழந்தைகள் விளையாடும் அறை, வரவேற்பு அறை, சமையலறை, குளியலறை என அறைகளுக்கு ஏற்றவாறும் மாறுபட்ட நறுமணங்களில் இன்று கிடைக்கின்றன. இந்தப் பொருள்கள் பார்ப்பதற்கு அழகாகவும் நேர்த்தியாகவும் இருப்பதால், அவற்றை வீட்டின் முக்கியமான இடங்களில் அலங்காரப் பொருள்களாகவும் வைத்துக்கொள்ளலாம்.

அரோமா தெரப்பி!

அரோமா மேஜிக்... புத்துணர்ச்சிக்கு புதுவழி!

தெரப்பிகளில் மிகவும் பிரபலமானது, மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் அரோமா தெரப்பிதான். ஏனெனில், நறுமணம்தான் இந்த தெரப்பியின் ஆதாரம். மசாஜின்போது கொடுக்கப்படும் அழுத்தத்தைவிட, அந்தச் சமயத்தில் சுவாசிக்கும் நறுமணம் தன் வேலையைக் கச்சிதமாகச் செய்யும். பூவிதழ்கள், செடிகளின் தண்டு, இலை என அனைத்திலிருந்தும் இயற்கை முறையில் எடுக்கப்படும் எண்ணெய்களின் வாசம், சுவாசிப்பவரை கிரங்கச் செய்யும். அந்த நறுமணங்கள் ஆழ்ந்த அமைதிக்கு ஒருவரை அழைத்துச் செல்வதால், தெரப்பியின் முழுமையான பயன்களை அவரால் பெற முடிகிறது. இந்தச் சிறப்பு, மற்ற தெரப்பிகளிலும் மசாஜ்களிலும் கிடைப்பதில்லை. 

இதுதான் இப்போது ட்ரெண்டு!

அரோமா மேஜிக்... புத்துணர்ச்சிக்கு புதுவழி!

மகிழுந்தின் மகிழ்ச்சியான பயணத்துக்கு இன்னிசைப் பாடல்கள் ஒருபுறம் உதவி செய்தாலும், அதனுள் கமழ்கிற நறுமணமும் பயணத்தின் இன்பத்துக்கு அவசியம். ஜூட் மற்றும் மரத்தினாலான நறுமணம் வீசும் காம்பேக்ட் பொருள்களாக  இவை இருப்பதால், காருக்குள் மட்டுமல்லாமல் துணிகளை வைக்கும் வீட்டு அலமாரிகளில்கூட வைத்துக்கொள்ளலாம். லாவண்டர், ஜாஸ்மின், ப்ரங்கிபேனி என, பூக்களின் நறுமணத்துடன் கிடைக்கும் எண்ணெய் வகைகள்தான் இன்று ட்ரெண்டில் இருக்கின்றன. வீட்டின் உள் அலங்காரங்களுக்கு ஏற்ற வகையில், அழகியலுடன்கூடிய அரோமா பொருள்களை ஹோம் சென்டர் மாதிரியான இடங்களில் வாங்க முடியும். குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்தும் கிடைக்கின்றன. இவை அனைத்துமே இயற்கை முறையில் தயாரிக்கப்படுபவை என்பதால், பக்கவிளைவுகள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை.

நறுமணம், நுகரும்போது ஒருவரை ஆசுவாசப்படுத்துகிறது. அந்த ஆசுவாசமே ஆரோக்கியத்தை அளிக்க வல்லது என்பதை உணர, நீங்கள் தயாரா?

Vikatan
அடுத்த கட்டுரைக்கு