Published:Updated:

`புகைபிடிப்பவர்களுக்கு இரண்டாவது முறை 'ஸ்ட்ரோக்' ஏற்பட வாய்ப்புகள் அதிகம்!' - எச்சரிக்கும் புதிய ஆய்வு

இரா.செந்தில் குமார்

க்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகைபிடித்தால், மீண்டும் பக்கவாதம் (ஸ்ட்ரோக்) ஏற்பட  வாய்ப்புகள் அதிகமிருப்பதாக, ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

`புகைபிடிப்பவர்களுக்கு இரண்டாவது முறை 'ஸ்ட்ரோக்' ஏற்பட வாய்ப்புகள் அதிகம்!' - எச்சரிக்கும் புதிய ஆய்வு

புகைபிடிப்பவர்களுக்கு மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், ஏற்கெனவே ஒருமுறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளை புகைப்பழக்கம் அதிகப்படுத்துகிறது என்பது சீனாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட  ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு, 'ஜர்னல் ஆப் அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேசன்' என்கிற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

புகைப்பழக்கம் உள்ள 1,475 பேர், புகைப்பழக்கத்தைக் கைவிட்ட 276 பேர், புகைப்பழக்கம் இல்லாத 1,318 பேர் எனப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 3,069 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. புகைப்பழக்கம் உள்ள 1,475 பேரில், 908 பேர் பக்கவாதம் வந்த பிறகு,புகைப்பழக்கத்தை கைவிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட இந்த ஆய்வின் மூலம், புகைப்பழக்கம் இல்லாதவர்களைக் காட்டிலும், புகைப்பழக்கம் இருந்து பக்கவாதம் ஏற்பட்ட பிறகு அதைக் கைவிட்டவர்களுக்கு இரண்டாவது முறை பக்கவாதம் ஏற்படுவதற்கு ஓரளவுக்கு வாய்ப்பிருக்கிறது என்றும், பக்கவாதம் ஏற்பட்ட பிறகும் தொடர்ந்து புகைபிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

`புகைபிடிப்பவர்களுக்கு இரண்டாவது முறை 'ஸ்ட்ரோக்' ஏற்பட வாய்ப்புகள் அதிகம்!' - எச்சரிக்கும் புதிய ஆய்வு

''ஸ்ட்ரோக்  ஏற்பட்ட பிறகு, புகைபிடித்தால், மூளைக்குச் செல்லகூடிய ரத்த ஓட்டத்தில் பிரச்னைகள் உண்டாகும். ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும். அதனால் பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்'' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Vikatan