Published:Updated:

மன அழுத்தம் முதல் வாட்ஸ்அப் பிசினஸ் புதுமை வரை... `யுனிக் த்ரெட்ஸ்’ ஷண்முகப்ரியா

கதைகள் எல்லாமே பாடம், எல்லாமே இன்ஸ்பையரிங். அவங்க எல்லாருக்கும் இதற்கான கமிஷன் கிடைக்கணும்னு ஓடும்போது, இது எனக்கு வெறும் பிசினஸ் மட்டும்தான்னு தோணல. இது கூட்டு உழைப்பு. இது ஒரு மாடல்” என்கிறார் ஷண்முகப்ரியா.

மன அழுத்தம் முதல் வாட்ஸ்அப் பிசினஸ் புதுமை வரை... `யுனிக் த்ரெட்ஸ்’ ஷண்முகப்ரியா
மன அழுத்தம் முதல் வாட்ஸ்அப் பிசினஸ் புதுமை வரை... `யுனிக் த்ரெட்ஸ்’ ஷண்முகப்ரியா

``அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே நல்ல சம்பளத்துல இருந்த வேலையை விட்டுட்டேன். இன்னொரு அம்மாவா இருந்த என் மாமியாரோட இறப்பு, எனக்கும் என் கணவருக்கும் மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்திருச்சு. ஏழு, எட்டு மாத குழந்தையைப் பார்த்துக்கிற பொறுப்பு மொத்தமா என்னுடையதா இருந்ததால, பார்த்த வேலையை விட வேண்டியதா இருந்தது” - பத்துப் பதினைந்து பொதிகளை முதுகில் சுமந்துகொண்டு, வேலைக்குச் செல்லும் வொர்க்கிங் மதர்கள் பெரும்பாலானோர் எதிர்கொள்ள வேண்டிய சூழல் இது.

கிராண்ட் ஸ்லாம்கள், ஒலிம்பிக் தங்கங்கள், மில்லியன்களில் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை என வென்று குவிக்கும் செரீனா வில்லியம்ஸாக இருந்தாலும், குழந்தை பிறப்புக்குப் பிறகு, குழந்தை பராமரிப்பில் ஏற்படும் குற்ற உணர்ச்சியிலிருந்து மீண்டுவிடாமல் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். மிக இயல்பான ஒரு விஷயமாக மாறிவிட்டதும், கவனிக்கப்படாத ஆபத்தாக மாறிவிட்டதுமான இந்த postpartum தடுமாற்றங்களிலிருந்து தன்னைத்தானே மீட்டெடுத்த அவரது கதை, ஆவணமாவது முக்கியம் என நினைத்தேன்.     

மன அழுத்தம் முதல் வாட்ஸ்அப் பிசினஸ் புதுமை வரை... `யுனிக் த்ரெட்ஸ்’ ஷண்முகப்ரியா

வீழ்வேனென நினைத்தாயோ -  முந்தைய பாகங்கள்

``என் கணவர் அவரோட அம்மாவைப் பத்தி அடிக்கடி பேசிட்டே இருப்பார். டெல்லியில் அவர் வேலையில் இருந்தப்போ, அவங்களோட இருந்த நாள்கள் அவங்களுடைய மன உறுதியை நிறையவே உணர்த்துச்சு. நான் வேலைக்குப் போறதும், வேலையில் சில சவால்களையெல்லாம் கடந்து ஜெயிக்கிறதும் என்னைவிட அவங்களுக்கு சந்தோஷமா இருந்ததுன்னு புரிஞ்சுக்கிட்டேன். அவங்க, ராணுவ வீரருடைய மனைவி. சின்ன வயசுல கணவரை இழந்து, தன்னுடைய மகன்களையும் மகள்களையும் வளர்த்திருக்காங்க. துணிகளை வீடுகளுக்குக் கொண்டுபோய் இன்ஸ்டால்மென்ட்ல வித்து, மறுபடி ஒவ்வொரு நாளும் கலெக்‌ஷன் செய்திருக்காங்க. எவ்வளவு கடுமையான உழைப்பு இருக்கணும்னு உணர்ந்தேன்” - டிப்ரெஷனில் இருந்து தன்னைத்தானே மீட்டுக்கொண்டு வந்தது, இந்தக் கதைதான் என்கிறார் ஷண்முகப்ரியா.

டி.ஐ.ஒய் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆடைகள் என, பல சுய தொழில்முனைவோர்களாக வரபிரசாதமாக மாறியிருக்கும் இந்த வாட்ஸ்அப் பிசினஸைப் பொறுத்தவரை, தமிழகத்தில் அதற்கான முன்னோடி ஷண்முகப்ரியாதான். ஐந்து வருடங்களுக்கு முன்பாக, சந்தையின் புது டிசைன்களை, புது ரக ஆடை மாதிரிகளை, புடவைகளைத் தேடித் தேடி எடுத்து, அதை வாட்ஸ் அப் மூலமாக பலருக்கும் தெரியச் செய்திருக்கிறார் ப்ரியா. அவர்கள் மூலமாக பிசினஸ் கிடைக்கும்போது அவர்களுக்கே அதில் பங்கை அளிக்கும் புதுமுறையை ஏற்படுத்தியிருக்கும் அவரது பிராண்டான `யுனிக் த்ரெட்ஸின்’ மாத வருமானம் இப்போது 1.5 லட்சம் ரூபாய்!

மன அழுத்தம் முதல் வாட்ஸ்அப் பிசினஸ் புதுமை வரை... `யுனிக் த்ரெட்ஸ்’ ஷண்முகப்ரியா

சுய தொழில்முனைவோரின் பல வெற்றிக் கதைகளைக் கேட்டிருப்போம். ஷண்முகப்ரியாவின் காரணமும் அவருக்கு இதில் கிடைத்திருக்கும் திருப்தியும் ஒரு சமூகப் பாடம் சொல்கிறது கவனித்தீர்களா?

``நான் ஒருத்தியா இதைச் செஞ்சிருக்க சாத்தியமே இல்லை. பலரையும்போல வீட்டிலேயே நைட்டி, புடவைகளை வாங்கி விற்க ஆரம்பிச்சதுதான் இது. க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருவருக்கு வாட்ஸ் அப் பண்ணி ஸ்டாக் எல்லாமும் தீர்ந்தது. அதுக்கப்புறம் அதையே பழக்கமாக்கினேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த வாட்ஸ் அப் இப்போ இருக்கிற மாதிரியான பயன்பாட்டுல இல்லை. ஆனா, இதுதான் ஃப்யூச்சர்னு தோணுச்சு. என்னுடைய ரீடெயிலர்ஸ் பலரும் தனியா வாழும் பெண்கள். அவங்களுடைய கதைகள் எல்லாமே பாடம், எல்லாமே இன்ஸ்பையரிங். அவங்க எல்லாருக்கும் இதற்கான கமிஷன் கிடைக்கணும்னு ஓடும்போது, இது எனக்கு வெறும் பிசினஸ் மட்டும்தான்னு தோணல. இது கூட்டு உழைப்பு. இது ஒரு மாடல்” என்கிறார் ஷண்முகப்ரியா.

குழப்பம்,  மன அழுத்தம், சமூக அழுத்தம் என எல்லாவற்றிலிருந்தும் மீளும் பெண்களின் கதைகளுள், இவரின் வெற்றியும் ஒரு கிரீடம். 

Vikatan