Published:Updated:

ரே... ரே... ரே... ரேக்ளா!

ரே... ரே... ரே... ரேக்ளா!

ரே... ரே... ரே... ரேக்ளா!

ரே... ரே... ரே... ரேக்ளா!

Published:Updated:

'ரே... ரே... ரே... ரேக்ளா... ஒதுங்கு ஒதுங்கு ராஜா தேசிங்கு குதிரை வருது... ஒதுங்கு ஒதுங்கு... ரே... ரே... ரே... ரேக்ளா’-உற்சாகமும் ஆவேசமும் கலந்த கூக்குரலுடன் குதிரையை வண்டியில் பூட்டி, புயல் வேகத்தில் செல்கிறார்கள் வீரர்கள். இது சேலத்து ரேக்ளா ரேஸ்! கிட்டத்தட்ட ஜல்லிக்கட்டைப் போல இதுவும் வீர விளையாட்டுதான். கம்பீரக் குதிரைகளை வண்டியில் பூட்டி காற்றாகப் பறக்கிறார்கள் வீரர்கள். ஒரு வண்டியுடன் இன்னொரு வண்டி உரசினால்கூட அவ்வளவுதான்... ஹாலிவுட் சினிமாக் காட்சிப் போல குதிரையுடன் சேர்ந்து வண்டியும் ஆளும் குட்டிக் கர்ணம் அடிக்க வேண்டியதுதான்.

ரே... ரே... ரே... ரேக்ளா!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளாக இந்தப் பந்தயங்கள் நடந்தாலும் இதுவரை பெரிய அளவில் விபரீதங்கள் நடந்தது இல்லை. கடந்த வாரம் சேலம் மாவட்டம், ஆத்தூர் உடையார்பாளையத்தில் களைகட்டியது ரேக்ளா ரேஸ்.

பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பெங்களூரு  உள்ளிட்ட ஊர்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அசத்தலான குதிரைகளுடன் வந்து இறங்கினார்கள் ஆட்கள். குதிரையைப் பூட்டும் வண்டிக்குப் பெயர் ரேக்ளா அல்லது சைக்கிள் தட்டான். அந்த வண்டியில் ஒரு நபர் மட்டுமே உட்கார முடியும். ஆனால், அதில் உட்கார்ந்து எல்லாம் அதிவேகத்தில் ஓடும் குதிரையைக் கட்டுப்படுத்துவது சவாலான விஷயம்.

உடையார்பாளையம் தொடங்கி ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கும் தளவாய்ப்பட்டிப் பிரிவு சாலை வரைக்கும் அதிவேகத்தில் சென்று அதே வேகத்தில் திரும்ப வேண்டும். எந்தக் குதிரை வீரர் முதலில் வருகிறாரோ அவருக்கு முதல் பரிசு. இந்தப் போட்டிக்காகக் காவல் துறையினர், உடையார்பாளையத்தில் இருந்து தளவாய்ப்பட்டிப் பிரிவு சாலை வரைக்கும் போக்குவரத்து மற்றும் சாலையில் நடக்கத் தடை செய்து இருந்தார்கள். சாலையின் இரு பக்கமும் தடுப்புக் கட்டைகள் கட்டி மக்கள் வெள்ளம் ஜேஜே எனக் காத்திருக்க... வாயு வேகத்தில் பாயத் தொடங்கின குதிரைகள்.

குதிரை வீரர்கள் சிலர் கையில் இருந்த இரும்புக் கம்பியால் சாலையில் தேய்த்துக்கொண்டே குதிரையை விரட்ட... பந்தயத்தில் நிஜமாகவே அனல் பறந்தது. ஒரு ரேக்ளா வண்டியை, இன்னொரு ரேக்ளா வண்டி சேஸ் செய்யும் காட்சிகள் உண்மையிலேயே செம த்ரில்லிங். ஆரம்பம் முதலே யாரையும் சேஸ் செய்யவிடாமல் அதி வேகமாக ஓடியது பவானியைச் சேர்ந்த செல்லவேலுக்குச் சொந்தமான குதிரை. இதன் ஜாக்கி சின்னா. கடைசியில் அவரே வெற்றியும் பெற்றார். ''என் குதிரைப் பேரு ஏழாம் அறிவு. குதிரை மட்டும் வேகமா ஓடினால் போதாது. நல்ல ஜாக்கியும் அமையணும். கடந்த நாலு வருஷமா அப்படி எனக்கு அமைஞ்சவர்தான் சின்னா. இந்தக் குதிரையை மைசூரில் இருந்து ஒன்றரை லட்சத்துக்கு வாங்கினேன். எல்லாக் குதிரைகளையும் இந்தப் பந்தயத்துக்குப் பயன்படுத்த முடியாது. குறைஞ்சது ஒரு வருஷமாவது பயிற்சி தரணும். போட்டியில ஜெயிச்சதைப் பொறுத்து குதிரையோட விலை பல மடங்கு ஏறும். இப்ப என் குதிரையை மூணு லட்சம் ரூபாய்க்குக் கேட்குறாங்க. ஆனா, நான் தர மாட்டேன்...'' என்கிறார் பெருமையாக!

ரே... ரே... ரே... ரேக்ளா!

குதிரைப் போட்டியை கடந்த 23 ஆண்டுகளாக நடத்திவருகிறார் உடையார்பாளையம் நண்பர் கள் குழுவின் தலைவர் சந்திரன். ''பொங்கல் விழாவுக்காக விளையாட்டா ஆரம்பிச்சதுதான் இந்த ரேஸ். மக்கள் தந்த வரவேற்பைப் பார்த்துட்டு தொடர்ந்து நடத்துறோம். தமிழகம் மட்டும் இல்லாம கர்நாடகா, ஆந்திராவுல இருந்துகூட நிறையப் பேர் ரேஸைப் பார்க்கவும் கலந்துக்கவும் வருவாங்க. ஆனா, பந்தயத் தொகை பெருசா இருக்காது. முதல் பரிசு

ரே... ரே... ரே... ரேக்ளா!

11,500, இரண்டாம் பரிசு

ரே... ரே... ரே... ரேக்ளா!

10,000, மூன்றாம் பரிசு

ரே... ரே... ரே... ரேக்ளா!

9,000 அவ்வளவுதான். ஆனா, ஜெயிப்புதான் முக்கியம். ஏன்னா இங்க ஒரு குதிரை ஜெயிச்சா அதோட மதிப்பு லட்சக்கணக்குல எகிறிடும்'' என்கிறார் விழிகள் விரிய!

ரே... ரே... ரே... ரேக்ளா!

ம.சபரி
படங்கள்: எம்.விஜயகுமார்