Published:Updated:

சிறப்புக் குழந்தைகள் தன் தேவைகளைச் செய்துகொள்ள பெற்றோர் எவ்வாறு உதவலாம்? வழிகாட்டல்! #SpecialChildren

``குழந்தைகள் தங்கள் தேவைகளே தாங்களே செய்துகொள்வதை இயல்பாகப் பல வீடுகளில் பார்க்க முடியும். ஆனால், உடல் மற்றும் மன அளவில் குறைபாடுள்ள சிறப்புக் குழந்தைகளுக்குப் பெற்றோர் அல்லது மற்றவர்கள் உதவுகிறார்கள். சிறப்புக் குழந்தைகளால் செய்துகொள்ள முடிகிற செயல்களைச் செய்துகொள்ள பெற்றோர் உதவ வேண்டும்" என்கிறார் இயன்முறைமருத்துவர் ரமேஷ் முருகேசன். அதற்குப் பெற்றோர்கள் எவ்வாறு உதவலாம் என்றும் விளக்குகிறார். 

சிறப்புக் குழந்தைகள் தன் தேவைகளைச் செய்துகொள்ள பெற்றோர் எவ்வாறு உதவலாம்? வழிகாட்டல்! #SpecialChildren
சிறப்புக் குழந்தைகள் தன் தேவைகளைச் செய்துகொள்ள பெற்றோர் எவ்வாறு உதவலாம்? வழிகாட்டல்! #SpecialChildren

 ``சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், தங்கள் குழந்தையின் இயலாமைகள் எவையெனத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். பிறகு, அவற்றில் எவையெல்லாம் அக்குழந்தையே செய்துகொள்ள முடியும் என்பதையும் முடிவுசெய்துகொள்ள வேண்டும். பிறகு, தனது முடிவுகள் சரிதானா என்பதை மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும். அப்போது அவர் வழிகாட்டும் நெறிமுறைகளைக் கவனமாக நினைவில் வைத்திருக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் எனில், தயங்காமல் கேட்க வேண்டும். பிறகே, அவர்களின் குழந்தைகளுக்குப் பயிற்சியை அளிக்கத் தொடங்க வேண்டும். 

சிறப்புக் குழந்தை ஒன்று, தானே சாப்பிட விரும்புகிறது என்றால், அதற்கு ஏதுவாக, தட்டை எங்கு வைக்க வேண்டும்; அதில் உணவை எந்தப் பகுதியில் வைக்க வேண்டும்; கையால் எடுத்துச்சாப்பிடலாமா; ஸ்பூன் தேவையா உள்ளிட்டவற்றைத் திட்டமிட வேண்டும். குழந்தையின் கை மற்றும் கண் இரண்டின் ஒருங்கிணைப்பு இதற்கு மிகவும் முக்கியம். ஒருவேளை கை மற்றும் கண் ஒருங்கிணைப்பு சரியாக இல்லையெனில், அதைச் சரி செய்வதற்கான பயிற்சி அளிப்பது அவசியம். மேலும் நீண்டநேரம் அளிக்க வேண்டிய பயிற்சி எனில், அதைச் சின்னச் சின்னதாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்பட்சத்தில்தான் அக்குழந்தையால் அந்தப் பழக்கத்தைப் பழகிக்கொள்ள முடியும். ஒருமுறை ஆழமாக அதை ஏற்றுக்கொண்டு விட்டால் எப்போதும் மறக்காது. இப்படி கான்செப்ட், கான்செப்ட்டாகப் பயிற்சியை அளிக்கும்போது அதை அக்குழந்தை புரிந்துகொள்வதற்கு வாய்ப்பு அதிகம். 

சிறப்புக் குழந்தைகள் தன் தேவைகளைச் செய்துகொள்ள பெற்றோர் எவ்வாறு உதவலாம்? வழிகாட்டல்! #SpecialChildren

இன்னொரு முக்கியமான விஷயம், ஒரு பயிற்சியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், இதனால் பலன் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. பயிற்சி அளிக்கும் முறையை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். மேலும், பயிற்சியை அவர்களால் செய்யமுடியாத நடைமுறைச் சிக்கல்கள் எவையென ஆராய்வது அவசியம். அப்போதுதான் உங்களின் பயிற்சி முறையை மாற்றி அமைக்கும்போது சரியான முறையைத் தேர்ந்தெடுக்க முடியும். அந்தக் குழந்தையை நீங்கள் அளித்த பயிற்சியினால் தானே அந்தத் தேவையைச் செய்துகொள்ள பழகிவிட்டது என்றால், சில நாள்களுக்கு உடனிருந்து கவனியுங்கள். தவறும்பட்சத்தில் உதவுங்கள். ஒருகட்டத்தில் முழுமையாகச் செய்துகொள்ளும் நிலை வரும்போது, தனியாகச் செய்துகொள்ள அனுமதியுங்கள். மேலும், அடுத்த தேவைக்கான பயிற்சியை அளிக்கத் தொடங்குங்கள். அதாவது ஒரேநேரத்தில் பல பயிற்சிகள் என்பதாக அல்லாமல், ஒரு பயிற்சி முடிந்து அடுத்த பயிற்சி எனப் பழக்குங்கள். அப்படிச் செய்கையில்தான் இக்குழந்தைகள் விரைவாகப் பழகிக்கொள்வார்கள். இந்த முறையை அக்குழந்தை கல்வி கற்றலுக்குக் கொண்டுசெல்லலாம்.  

ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வது அல்லது பழகிக்கொள்வது என்பது இயல்பாக இருப்பவர்களுக்குமே ஒரு குறிப்பிட்ட வயதுவரை விரைவாக நடக்கும்; வயது கூடக்கூட பழகிக்கொள்ள நேரம் அதிகரிக்கலாம். சிறப்புக் குழந்தைகளுக்கும் இது பொருந்தும். எனவே, அடிப்படைப் பயிற்சிகளையும் கல்வி அளிப்பதையும் மிகச் சிறிய வயதிலிருந்தே தொடங்குவதே நல்லது. ஏதேனும் தொழிற்கல்வியையும் அளிக்கும்பட்சத்தில் பொருளாதார அளவிலும் மனதளவிலும் பெரும் நம்பிக்கை பெறுவார்கள். மேலும், அவர்கள் வளர்ந்தபிறகு யாரின் உதவியையும் எதிர்நோக்காது, அவர்களின் வேலைகளைச் செய்துகொள்ள முடியும். 

சிறப்புக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி என்பது பெற்றோரின் பொறுப்பு மட்டுமல்ல, வீட்டினர், அக்கம் பக்கத்தினர் உட்பட அக்குழந்தை இயங்கும் இடங்களில் உள்ளவர்களின் ஒத்துழைப்போடு செய்ய வேண்டிய கூட்டு முயற்சி. இது நம் சமூகக் கடமை என்று செய்வதால் மட்டுமே சிறப்புக் குழந்தைகளும் இந்தச் சமூகத்தின் ஓர் இயல்பான அங்கமாக மாற முடியும்" என்கிறார் ரமேஷ் முருகேசன்.