Published:Updated:

``ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்...!"- வானதி சீனிவாசன் உற்சாகம் #WhatSpiritualityMeansToMe

"பள்ளிக்கூட படிப்பு முடிஞ்சதும் சென்னைச் சட்டக்கல்லூரிக்குப் படிக்க வந்துட்டேன். அப்போ நானும் என்னோட தோழிகள் நாலுபேரும் மந்தைவெளியில வீடெடுத்துத் தங்கியிருந்தோம். ரொம்பநாளா நான் மயிலாப்பூர்ல இருக்கிறதால, எனக்கு மிகவும் பிடிச்ச தெய்வம் கற்பகாம்பாளும் கபாலீஸ்வரரும்தான்."

வானதி சீனிவாசன், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர். அரசியல் விவாதங்களில் தன் தரப்பு வாதங்களைக் கனிவாகவும் அழுத்தமாகவும் எடுத்து வைக்கும் பாங்குக்காகவே ஏராளமான ஆதரவாளர்களைப் பெற்றவர். இவரின் கணவர் சீனிவாசன், வழக்கறிஞர். தேர்தல் பரபரப்பு முடிந்து ஓய்வில் இருந்த வானதி சீனிவாசனிடம் அவரது ஆன்மிகம் குறித்துக் கேட்டோம். 

``ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்...!"- வானதி சீனிவாசன் உற்சாகம் #WhatSpiritualityMeansToMe

``நான் பிறந்து வளர்ந்தது கோவை தொண்டாமுத்தூர்ல. சின்னவயசுல கோவை கோனியம்மன் கோயிலுக்குப் போவேன். அப்பாவின் குலதெய்வமான பத்ரகாளியம்மன் கோயிலுக்கும் போறதுண்டு. 1997-ல் அங்குதான் என்னுடைய திருமணம் நடந்துச்சு.  

பள்ளிக்கூட படிப்பு முடிஞ்சதும் சென்னைச் சட்டக்கல்லூரிக்குப் படிக்க வந்துட்டேன். அப்போ நானும் என்னோட தோழிகள் நாலுபேரும் மந்தைவெளியில வீடெடுத்துத் தங்கியிருந்தோம். ரொம்பநாளா நான் மயிலாப்பூர்ல இருக்கிறதால, எனக்கு மிகவும் பிடிச்ச தெய்வம் கற்பகாம்பாளும் கபாலீஸ்வரரும்தான்.

``ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்...!"- வானதி சீனிவாசன் உற்சாகம் #WhatSpiritualityMeansToMe

கல்லூரி முடிஞ்சதும் மாலை நேரங்கள்ல கபாலீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிடப் போவேன். போகும்போதெல்லாம், `நீ இருக்கிற இடத்திலேயே எனக்கும் ஒரு வீடு அமையணும்'னு வேண்டிக்குவேன். அந்த கபாலீஸ்வரர் என் வேண்டுதலை நிறைவேற்றினார். . அதேபோல நான் வேண்டிக்கிட்ட மாதிரியே மந்தைவெளியில் 2002-ல் சொந்த வீடும் அமைஞ்சது. 

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் நடக்கும் அறுபத்து மூவர் விழா எங்களுக்கு மிக முக்கியமான திருவிழா. விழா நடக்கும் நாளில், பந்தல் அமைச்சு சர்க்கரைப் பொங்கல், சுண்டல் இதையெல்லாம் தயாரிச்சு சுவாமிக்குப் படைச்சிட்டு எல்லோருக்கும் கொடுப்போம். சிறிய அளவுல ஆரம்பிச்சோம். அப்புறம், நான் அரசியலுக்கு வந்ததுக்கப்புறம் அன்னதானத்தோட சேர்த்து 2 டன் தர்பூசணி, ஒரு டன் வெள்ளரி, மோர், பானகம்னு ஏராளமா தானம் செய்யும் அளவுக்கு அது விரிவடைஞ்சிருக்கு. என்னைப் பொறுத்தவரை கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் சென்னையிலிருக்கிற இன்னொரு அம்மா- அப்பா.

``ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்...!"- வானதி சீனிவாசன் உற்சாகம் #WhatSpiritualityMeansToMe

வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கிறதாலே மந்தைவெளி ஆஞ்சநேயர் கோயில் என்னோட இஷ்டமான தெய்வம். கபாலீஸ்வரருக்குப் பிறகு நான் அதிகம் வழிபடும் கோயில் அதுதான். வீட்டுல வெற்றிலைக்கொடி, செம்பருத்தி மலர்கள்னு செடிகள் நிறைய வெச்சிருக்கேன். வெற்றிலைக்கொடி நல்லா வளர்ந்திருக்குது. ஆஞ்சநேயருக்கு முன்பெல்லாம் வடைமாலை, துளசிமாலை சாத்துவேன். இப்போ அடிக்கடி வெற்றிலை மாலைதான் சாத்துறேன்.

ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான். எவ்வளவு சிக்கலான சூழ்நிலையாயிருந்தாலும் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொண்டு வந்துடுவார் ஆஞ்சநேயர். தவிர வருஷத்துக்கொருமுறை திருப்பதிக்குப் போயிட்டு வருவோம். பசங்களுக்கு ஸ்கூல் திறக்கிற முதல் நாள், கோர்ட் திறக்கிற நாள்களிலெல்லாம் கோயிலுக்குப் போய்விட்டு வந்துதான் அந்த வருஷத்தைத் தொடங்குவோம். எல்லா விரதங்களும் ரெகுலரா இருப்பேன்னு சொல்ல முடியாது. ஆனால், வரலட்சுமி விரதத்தை மட்டும் தவிர்க்கிறதில்லை. 

``ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்...!"- வானதி சீனிவாசன் உற்சாகம் #WhatSpiritualityMeansToMe

காலையில் குளித்து முடித்ததும்,  

"தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே"

என்னும் அபிராமி அந்தாதியைத்தான் எனது பூஜை வேளையில் உச்சரிப்பேன். `நல்லசிந்தனை, நல்ல செயல் நாளும் நான் செய்திட வழித்துணையாய் வா' என வேண்டுவதே எனது பிரார்த்தனையாக எப்போதும் இருக்கும்'' என்கிறார் வானதி சீனிவாசன்.   

Vikatan
அடுத்த கட்டுரைக்கு