Published:Updated:

வாப்பா, உம்மா, சாச்சா, சாச்சி, லாத்தா, காக்கா... நல்லதொரு குடும்பம்!

வாப்பா, உம்மா, சாச்சா, சாச்சி, லாத்தா, காக்கா... நல்லதொரு குடும்பம்!

வாப்பா, உம்மா, சாச்சா, சாச்சி, லாத்தா, காக்கா... நல்லதொரு குடும்பம்!

வாப்பா, உம்மா, சாச்சா, சாச்சி, லாத்தா, காக்கா... நல்லதொரு குடும்பம்!

Published:Updated:

'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதைக் குடும்ப நிகழ்ச்சி மூலம் நிரூபித்துவருகிறார்கள் திருப்பூரைச் சேர்ந்த மறைந்த பாப்ஜி சாஹிப்பின் வாரிசுகள்! உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடும்பத்தின் அத்தனை உறவுகளும் ஒன்றுகூடி அன்பில் திளைக்கிறார்கள். சமீபத்தில் திருப்பூரில் நடந்த இவர்களுடைய குடும்ப விழாவில் 228 பேர் ஒன்றுகூடி விழா எடுத்துள்ளார்கள்!

வாப்பா, உம்மா, சாச்சா, சாச்சி, லாத்தா, காக்கா... நல்லதொரு குடும்பம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த மெகா விழாவுக்கு நாங்கள் சென்றோம். அது ஒரு குடும்ப விழா போலவே தெரியவில்லை. விழா தொடங்கும்போதே தேசியக் கொடி ஏற்றி, ஒன்று சேர 'வந்தே மாதரம்’ என்று முழங்கினார்கள். தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து என்று பக்கா சம்பிரதாயமான விழாவாகவே இருந்தது. பாப்ஜி சாஹிப்பின் பேரன் ஆபித் உசேனிடம் பேசினோம்.

''எங்க தாத்தா பாப்ஜி சாஹிப்பின் பூர்வீகம் திருப்பூர்தான். சாதாரண நிலையில் இருந்து உழைப்பால் முன்னுக்கு வந்தவர் அவர். சின்ன அளவுல மூங்கில் வியாபாரம் செய்தவர், படிப் படியா முன்னேறி இரும்பு வியாபாரம் செய்து கோடீஸ்வரர் ஆனார். 1938-ல் திருப்பூரில் முதன் முதலா மாடி வீடு கட்டியது அவர்தான். அவருக்குப் பின்னாடி அஞ்சு தலைமுறை வந்தாச்சு.

வாப்பா, உம்மா, சாச்சா, சாச்சி, லாத்தா, காக்கா... நல்லதொரு குடும்பம்!

இப்ப எங்க சொந்தக்காரங்க துபாய், ஹாங்காங், சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட பல நாடுகளிலும் இருக்காங்க. வசதி வாய்ப்புகளும் தொழில்நுட்பங்களும் அதிகமாகிட்ட இந்தக் காலத்துல உறவுகளும் பந்த பாசமும் குறைஞ்சுப் போச்சு. வெளிநாட்டுக்கு நாம போறது சம்பாதிக்க மட்டும்தான். ஆனால், வெளிநாட்டு மோகத்தில் நம்மை வளர்த்த பெற்றோரையும் உறவுகளையும் நிறையப் பேர் மறந்துடறாங்க. பெத்தத் தாயோட ஈமச் சடங்கைக்கூட வீடியோ கான்ஃபிரன்ஸ்ல பார்க்கிற அளவுக்கு நிலைமை மோசமாயிடுச்சு.

இதை எல்லாம் எங்களால் மட்டுமே மாத்த முடியாது. ஆனா, உறவுகளோட அருமையை மத்தவங்களுக்குப் புரியவைக்க முடியும். அதுக்காகத்தான் இந்த விழாவைத் தவறாமக் கொண்டாடுறோம். என்னோட சகோதரர் ஷகில் அகமதுதான் இந்த யோசனையை முதலில் சொன்னார். ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை இப்படி ஒரு விழா நடத்த முடிவு செஞ்சு, 2009-ம் வருஷம் இதேமாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். அப்ப எங்க குடும்பத்தில் இருந்த 216 பேரில் 213 பேர் வந்தாங்க. இந்த வருஷம் மொத்தம் இருக்கிற குடும்ப உறுப்பினர்கள் 228 பேரும் தவறாம வந்து கலந்துக்கிட்டாங்க.

விழாவுல கலந்துக்கிட்ட ஒவ்வொருத்தர் முகத்திலும் பயங்கர சந்தோஷம். 'வாப்பா, உம்மா, சாச்சா, சாச்சி, லாத்தா, காக்கா’னு  ஒருத்தரை ஒருத்தர் கட்டித் தழுவி, தேம்பி அழ ஆரம்பிச்சுட்டாங்க. விழாவில் விநாடி - வினாப் போட்டி, நடனப் போட்டி, பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி எல்லாம்வெச்சு பரிசு கொடுத்தோம். கடைசியில் பிரிய மனசே இல்லாமத்தான் ஒவ்வொருத்தரும் கிளம்பினாங்க...'' என்றார் நெகிழ்வுடன்!

வாப்பா, உம்மா, சாச்சா, சாச்சி, லாத்தா, காக்கா... நல்லதொரு குடும்பம்!

குடும்பத்தின் மூத்த உறுப்பினர் 91 வயதான இப்ராஹிம் சாகிப். ''இது ஒரு குடும்பத்தின் நிகழ்வாக மட்டும் சுருங்கிடக் கூடாதுனு 'பாப்ஜி நசீபா அறக்கட்டளை’யைத் தொடங்கி இருக்கோம். எங்க குடும்ப உறுப்பினர்கள் யாராவது சிரமமான நிலையில் இருந்தா அவங்களுக்குக் கல்வி, மருத்துவம், திருமணம் உட்பட நல்லது கெட்டதுகளுக்கு இந்த அறக்கட்டளை மூலமா உதவி செய்றோம். அடுத்தகட்டமா திருப்பூரில் கஷ்டப்படுகிற நிலைமையில் இருக்கிற அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த அறக்கட்டளை மூலமாக உதவி செய்யத் தீர்மானிச்சு இருக்கோம். இந்த விழாவில் கலந்துக்கிட்ட கடைக்குட்டி, மூணு மாசக் குழந்தை முகம்மது விக்ரம். அவனோட தலைமுறை தொடங்கி அவன் கொள்ளுப் பேரனின் தலைமுறையைத் தாண்டியும் இப்படி ஒரு நெகிழ்ச்சியான விழா தொடரணும்கிறது என் ஆசை...'' என்று நெகிழ்கிறார் இந்தத் தாத்தா!

- டி.எல்.சஞ்சீவிகுமார்,     ச.ஆ.பாரதி
படங்கள்: செ.பாலநாக அபிஷேக்