Published:Updated:

தேனியில் 20 நிமிடங்கள் தாமதமாக எண்ணப்பட்ட தபால் வாக்குகள்!

தேனியில் 20 நிமிடங்கள் தாமதமாக எண்ணப்பட்ட தபால் வாக்குகள்!
தேனியில் 20 நிமிடங்கள் தாமதமாக எண்ணப்பட்ட தபால் வாக்குகள்!

தேனியில் 20 நிமிடங்கள் தாமதமாக எண்ணப்பட்ட தபால் வாக்குகள்!

தேனி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி இன்று தேனி கொடுவிலார்பட்டி கம்மவார் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. சரியாக 8 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய வாக்குப்பதிவு, 20 நிமிடங்கள் தாமதமாகத்  தொடங்கியது.

தேனியில் 20 நிமிடங்கள் தாமதமாக எண்ணப்பட்ட தபால் வாக்குகள்!

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்துக்கட்சி முகவர்களை அழைத்துப் பேசிய மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பல்லவி பல்தேவ், வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும், கட்சி முகவர்கள் முன்னணி நிலவரங்களை எப்படிப் பெறுவது போன்ற விவரங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தார். மற்ற மாவட்டங்களில் தபால் வாக்குகள் எண்ணப்படும் பணி  தொடங்கி சென்றுகொண்டிருக்கும்போது, தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் மட்டும் கட்சி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தார்.

தேனியில் 20 நிமிடங்கள் தாமதமாக எண்ணப்பட்ட தபால் வாக்குகள்!

இதனால், சீல் உடைக்கப்படாத நான்கு தபால் வாக்குகள்கொண்ட பெட்டிகளை வாக்கு எண்ணும் அரசு அதிகாரிகள் பார்த்துக்கொண்டிருந்தனர். தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதியில் உள்ள அரசு ஊழியர்கள் செலுத்திய தபால் வாக்குகள், நேற்றைய நிலவரப்படி 7ஆயிரத்து 38. இந்நிலையில், இன்று காலை 7.35 மணி வரை 51 வாக்குகள் செலுத்தப்பட்டன. ஆக மொத்தம் 7ஆயிரத்து 89 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு