Published:Updated:

"அஞ்சு பைசாவுக்கு ரெண்டு ஆரஞ்சு மிட்டாய்!"

"அஞ்சு பைசாவுக்கு ரெண்டு ஆரஞ்சு மிட்டாய்!"

"அஞ்சு பைசாவுக்கு ரெண்டு ஆரஞ்சு மிட்டாய்!"

"அஞ்சு பைசாவுக்கு ரெண்டு ஆரஞ்சு மிட்டாய்!"

Published:Updated:
"அஞ்சு பைசாவுக்கு ரெண்டு ஆரஞ்சு மிட்டாய்!"

'திருப்பாச்சி’, 'சிவகாசி’, 'திருப்பதி’ 'திருவண்ணாமலை’, 'பழநி’ என மற்ற ஊர்களின் பெயர்களில் படம் எடுத்து பிரபலமான இயக்குநர் பேரரசு, தன்னை வளர்த்து ஆளாக்கிய சிவகங்கை அருகில் உள்ள நாட்டரசன் கோட்டையைப் பற்றி இங்கே மனம் திறக்கிறார்.

"அஞ்சு பைசாவுக்கு ரெண்டு ஆரஞ்சு மிட்டாய்!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''கிராமங்கள்ல 'கைராசி டாக்டர்’னு சொல்லிக் கேள்விப்பட்டு இருப்பீங்க. நாட்டரசன்கோட்டையில, எங்க அப்பா வீ.கே.மணி முரசு கைராசியான ஆர்.ஐ.எம்.பி. டாக்டர். யாருக்காவது உடம்பு முடியலைனா நேரம் காலம் பாக்காம மருந்துப் பெட்டியைத் தூக்கிக்கிட்டு ஓடுவார். அதனால அப்பாவுக்கு ஏரியாவுக்கு உள்ள நல்ல மதிப்பு, மரியாதை. ஆனால், நான் அப்படியே ஆப்போசிட். படிக்கும்போதே முரடன். தினமும் எவனையாவது அடிச்சு அழவெச்சிருவேன். 'அந்தப் புண்ணியவானுக்கு புள்ளை வந்து பொறந்துருக்கு பாரு... இதெல்லாம் எங்கே உருப்படப் போகுது’னு தினமும் நாலு பேர்கிட்டேயாவது திட்டு வாங்குவேன்.

வார நாட்கள்ல பள்ளிக்கூடம் போறதுனா கசக்கும். ஆனா, ஞாயிற்றுக்கிழமைகள்ல ஸ்கூல் பொட்டல்ல கபடி விளையாடுறதுக்காகவே மெனக்கெட்டு ஸ்கூலுக்குப் போவோம். எங்க ஊரு வயக்காடுகள்ல ஏற்றக் கேணிகள் பரவலா இருக்கும். மதிய நேரங்கள்ல இந்தக் கேணிகள்ல குதிச்சு

"அஞ்சு பைசாவுக்கு ரெண்டு ஆரஞ்சு மிட்டாய்!"

வெளையாடுறதுக்குனே ஒரு செட்டு போவோம். தண்ணிக்குள்ள யாரு அதிக நேரம் முங்கி இருக்கிறது, கீழ் மட்டம் வரைக்கும் போயி மண் எடுத்துக்கிட்டு வர்றதுனு எங்களுக்குள்ளேயே போட்டிவெச்சுக்குவோம்.

எங்க ஊரு கண்ணாத்தா கோயில் தமிழ்நாடு முழுக்கப் பிரபலம். அந்தக் கோயிலுக்கு வைகாசி மாசம் பத்து நாள் திருவிழா நடக்கும். அதுல அஞ்சாறு நாளாச்சும் கூத்து, கச்சேரினு களைகட்டும். அப்போ எல்லாம் வள்ளி திருமணம் நாடகம்னா உசுரு. 'இன்னைக்கு முழிச்சிருந்து முழுசா நாடகத்தைப் பாத்துரணும்’னு  கங்கணம் கட்டிகிட்டே முதல் வரிசையில துண்டு போட்டு இடம் பிடிப்போம். ஆனா, பஃபூன் ஆட்டம் முடிஞ்சதுமே எங்களுக்கும் தலை கோடாங்கி மாதிரி சுத்த ஆரம்பிச்சிரும். இப்பவும் வைகாசித் திருவிழாவில் திருவிழாக் கடைகளை பாக்குறப்ப, 'அஞ்சு பைசாவுக்கு ரெண்டு ஆரஞ்சு மிட்டாய் வாங்கிச் சுவைத்த அந்தக் காலம் திரும்ப வருமாடா அரசு?’னு என்னை நானே கேட்டுக்குவேன்.  

கண்ணாத்தாள் கோயில் தெப்பக்குளத்துலஇருந்துதான் ஊருக்கே குடி தண்ணீர் எடுக்குறாங்க. இந்தக் குளத்துக்குத் தண்ணீர் சேகரமாகி வர்றதுக்காகவே அந்தக் காலத்துல 30 ஏக்கர் நிலத்தை வெறும் பொட்டலாப் போட்டு வெச்சிருக்காங்க. இதில் யாரும் எந்தவிதமான ஆக்கிரமிப்போ, அசுத்தமோ பண்ணக் கூடாதுங்குறது ஊர்க் கட்டுப்பாடு. ஏரி, குளம் எல்லாம் வீட்டு மனைகளா மாறிக்கிட்டு வர்ற இந்தக் காலத்திலேயும் அந்தக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் நாட்டரசன்கோட்டை மக்களை நினைத்தால் பெருமையாத்தான் இருக்கு.

"அஞ்சு பைசாவுக்கு ரெண்டு ஆரஞ்சு மிட்டாய்!"

நாட்டரசன்கோட்டைக்கு இன்னொரு முக்கியமான சிறப்பும் உண்டு. கோவலன் பரம்பரையினரான செட்டியார்கள் காவிரிப்பூம்பட்டினத்தை அடிக்கடி கடல் கொண்டதால் அங்கு இருந்து வெளியேறி பாண்டிய நாட்டில் 96 ஊர்களில் குடியேறினாங்க. அதில் முதல் ஊர் எங்க ஊருதான். புயல், வெள் ளம் வந்தால் பாதிக்காம இருக்கணும்கிறதுக்காக இங்கே, உயரமான பிரமாண்டமான மாளிகை வீடுகளைக் கட்டினாங்க. ஒரு தெருவையும் இன்னொரு தெருவையும் இணைக்கும் அளவுக்கு  கால் கிலோ மீட்டர் நீளத்துக்குக் கட்டப்பட்ட அந்த வீடுகள், இன்னமும் நிகழ்காலச் சாட்சிகள். சிறுவனாக இருக்கும்போது அந்த வீடுகளைப் பார்த்து வியந்திருக்கேன். சொந்த ஊரில் அதுபோல கலை நுணுக்கத்துடன் ஒரு வீட்டைக் கட்டணும்கிறது என்னோட ஆசை. அது முடியுமானு தெரியலை.

கண்ணாத்தா கோயிலுக்கு சைடுல இருக்கிற மேடையில் 'அடுத்தது என்ன?’ங்கிற என் முதல் நாடகத்தை அரங்கேற்றம் பண்ணினேன்.  எப்ப வந்தாலும், கண்ணாத்தாளைக் கும்பிடும்போது இந்த மேடையையும் நான் மறக்காம கும்பிடுவேன். அதுவும் தெய்வந்தானே?!

நாட்டரசன்கோட்டைனாலே கண்ணாத்தாளும் கம்பர் அருட் கோயிலும்தான் எனக்கு ஞாபகத்துக்கு வரும். கம்பரைப் போல நாவன்மை வரணும்கறதுக்காக, எங்க ஊர் குழந்தைகளுக்குக் கம்பர் கோயில் மண்ணை எடுத்து ஊட்டுவாங்க. எனக்கும் கொடுத்தாங்க; நான் என்னுடைய மகள் சுகிஷாவுக்கும் கொடுத்தேன். மனசு பாரமா இருக்கும்போது கண்ணாத்தா கோயில் தெப்பக்குளத்தின் வடமேற்கு மூலையில் போய் அமைதியாக உட்கார்ந்துடுவேன். கொஞ்ச நேரத்துலேயே மனசு லேசாகிரும்; புதிய சிந்தனைகள் பிறக்கும். ஊருக்கு வைத்தியர் எங்கப்பா. என் மனசுக்கு வைத்தியர் இந்தக் கண்ணாத்தாதான்''

-பயபக்தியுடன் கைகூப்புகிறார் பேரரசு!

"அஞ்சு பைசாவுக்கு ரெண்டு ஆரஞ்சு மிட்டாய்!"
"அஞ்சு பைசாவுக்கு ரெண்டு ஆரஞ்சு மிட்டாய்!"

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்