Published:Updated:

அருமையான டிசைன், அடக்கமான பவர்... வந்துவிட்டது சுஸுகியின் புதிய ஜிக்ஸர் 250 SF!

அருமையான டிசைன், அடக்கமான பவர்... வந்துவிட்டது சுஸுகியின் புதிய ஜிக்ஸர் 250 SF!
அருமையான டிசைன், அடக்கமான பவர்... வந்துவிட்டது சுஸுகியின் புதிய ஜிக்ஸர் 250 SF!

முந்தைய ஜிக்ஸர் 155 SF பைக்கில் இருந்த அதே இன்ஜின்தான் என்றாலும், இங்கே 0.7bhp பவரை அது இழந்திருக்கிறது.

250சிசி செக்மென்ட்டில் குறைவான பைக்குகளே (யமஹா FZ25/ஃபேஸர் 25, ஹோண்டா சிபிஆர் 250 ஆர், கேடிஎம் டியூக் 250, கவாஸாகி Z250) இந்தியாவில் உள்ளன. பெனெல்லி தனது TNT25 பைக்கின் விற்பனையை நிறுத்திவிட்டது தெரிந்ததே. இந்நிலையில் அந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, ஜிக்ஸர் 250 SF எனும் புதிய பைக்கை சுஸூகி களமிறக்கியுள்ளது. பைக் பிரியர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கான விடையாக வெளிவந்திருக்கும் இந்த ஃபுல் ஃபேரிங் ஸ்போர்ட்ஸ் பைக்குடன், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஜிக்ஸர் 155 SF பைக்கும் (சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை: 1.10 லட்சம்) அறிமுகமாகியுள்ளது. சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையான 1.71 லட்சத்தில் கிடைக்கும் சுஸூகி 250 SF பைக்கில், அப்படி என்ன ஸ்பெஷல்? 

டிசைன் மற்றும் வசதிகள்

அருமையான டிசைன், அடக்கமான பவர்... வந்துவிட்டது சுஸுகியின் புதிய ஜிக்ஸர் 250 SF!

ஒரு 250சிசி பைக்கிற்குத் தேவையான அதிரடியான தோற்றம் இருப்பது வெரி நைஸ். எனவே சத்தமில்லாமல் தடாலடியாக இந்தச் செக்மென்ட்டில் நுழைந்திருக்கும் ஜிக்ஸர் 250 SF, அதன் டிசைனுக்காகவே அதிகம் போற்றப்படக்கூடிய மாடலாக இருக்கலாம். LED ஹெட்லைட்/டெயில்லைட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில், அப்படியே GSX-R சீரிஸின் சாயல் தெரிகிறது; பெட்ரோல் டேங்க் மற்றும் விண்ட் ஸ்க்ரீனில் ஜிக்ஸர் வாசம்! கிளிப் ஆன் ஹேண்டில்பார், பைக்கை நெரிசலான சாலைகளிலும் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

அருமையான டிசைன், அடக்கமான பவர்... வந்துவிட்டது சுஸுகியின் புதிய ஜிக்ஸர் 250 SF!

ஸ்ப்ளிட் சீட் மற்றும் கிராப் ரெயில், பைக்கின் டிசைனுடன் இயைந்து செல்கிறது. இன்ஜினின் அடிப்பகுதி தங்க நிறத்தில் தகதகக்கிறது. மற்றபடி ஜிக்ஸர் பைக்கிற்கே உரித்தான டூயல் பேரல் க்ரோம் எக்ஸாஸ்ட் தொடர்கிறது. இதிலிருக்கும் பல விஷயங்கள், ஜிக்ஸர் 155 SF பைக்கிலும் இடம்பெற்றுள்ளது ப்ளஸ். ஆனால் இங்கே சிங்கிள் பீஸ் சீட் மற்றும் ஹேண்டில்பாருக்கு மாற்றாக ஸ்ப்ளிட் சீட் மற்றும் ஹேண்டில்பார் இருப்பதால், அது ரைடிங் பொசிஷனில் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும்?

இன்ஜின் மற்றும் மெக்கானிக்கல் பாகங்கள் 

அருமையான டிசைன், அடக்கமான பவர்... வந்துவிட்டது சுஸுகியின் புதிய ஜிக்ஸர் 250 SF!

புதிய ஜிக்ஸர் 250 SF பைக்கில் இருக்கும் சிங்கள் சிலிண்டர் 249சிசி இன்ஜின், SOHC - ஆயில் கூல்டு - 4 வால்வ் - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் அமைப்பைக் கொண்டிருக்கிறது. 26.5bhp@9000rpm பவர் மற்றும் 2.26kgm@7500rpm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த SOCS ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜின். 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது லிக்விட் கூலிங் மிஸ் ஆவது, பைக்கை நம் ஊரின் நெரிசல்மிக்கச் சாலைகளில் ஓட்டும்போது தெரிந்துவிடும். முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் - ஏபிஎஸ் டிஸ்க் பிரேக் - 110/70 R17 டியூப்லெஸ் டயர் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் - ஏபிஎஸ் டிஸ்க் பிரேக் - 150/60 R17 டியூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. 

அருமையான டிசைன், அடக்கமான பவர்... வந்துவிட்டது சுஸுகியின் புதிய ஜிக்ஸர் 250 SF!

12 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட ஜிக்ஸர் 250 SF பைக்கின் எடை 161 கிலோ. முந்தைய ஜிக்ஸர் 155 SF பைக்கில் இருந்த அதே இன்ஜின்தான் என்றாலும், இங்கே 0.7bhp பவரை அது இழந்திருக்கிறது. மேலும் பழைய பைக்குடன் ஒப்பிடும்போது, புதிய பைக்கின் எடையும் 6 கிலோ அதிகரித்துவிட்டது! புதிய ஃபுல் ஃபேரிங் இதற்கான பிரதான காரணி என்பதால், அதற்கேற்ப சேஸி மற்றும் சஸ்பென்ஷனில் டியூன் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது சுஸூகி. இதில் கார்புரேட்டர் மற்றும் கிக் ஸ்டார்ட் ஆப்ஷன் கிடையாது. 

முதல் பார்வை

அருமையான டிசைன், அடக்கமான பவர்... வந்துவிட்டது சுஸுகியின் புதிய ஜிக்ஸர் 250 SF!

கொடுக்கும் விலைக்கேற்ற சிறப்பம்சங்கள் மற்றும் செக்மென்ட்டுக்கு ஏற்ற இன்ஜினோடு விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது சுஸூகி ஜிக்ஸர் 250 SF. வரும் மாதங்களில் இந்த பைக்கின் நேக்கட் வெர்ஷனை அறிமுகப்படுத்தும் முடிவில் இந்த நிறுவனம் உள்ளது. இது யமஹா FZ25 மற்றும் கேடிஎம் டியூக் 250 போன்றவற்றுக்குப் போட்டியாக வெளியாகும் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து நேக்கட் ஜிக்ஸர் 155 பைக்கும் வருவதற்கான சாத்தியம் உள்ளது. புதிய ஜிக்ஸர் SF சீரிஸ் பைக்குகள், 2 கலர்களில் கிடைக்கின்றன.

அருமையான டிசைன், அடக்கமான பவர்... வந்துவிட்டது சுஸுகியின் புதிய ஜிக்ஸர் 250 SF!

சமீபத்தில் ஹீரோ விற்பனைக்குக் கொண்டுவந்த எக்ஸ்ட்ரீம் 200S பைக்குடன் போட்டிபோடுகிறது ஜிக்ஸர் SF 155. ஒருகாலத்தில் விலைகுறைவான ஃபுல் ஃபேரிங் கொண்ட பைக் என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருந்த இது. அந்தப் பெயரை ஹீரோவுக்குத் தாரை வார்த்துவிட்டது என்றே சொல்லவேண்டும். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு