Published:Updated:

கற்பனை மெழுகு...கனவுச் சுடர்... அழகுவத்திகள் !

நா.இள.அறவாழி படங்கள்: எஸ்.தேவராஜன்

கற்பனை மெழுகு...கனவுச் சுடர்... அழகுவத்திகள் !

நா.இள.அறவாழி படங்கள்: எஸ்.தேவராஜன்

Published:Updated:
##~##

இன்வெர்ட்டர் இல்லாத காலகட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டால் குடும்பமே ஒன்றுசேர்ந்து தேடுவது மெழுகு வத்தியாகத்தான் இருக்கும். ''ஆனால், அதைத் தவிர மெழுகை வைத்து பெருசா என்ன செய்திட முடியும்?'' என்று கேள்வி கேட்டால், ''அதுதான்யா என்னோட குடும்பத் தொழிலே!'' என்று பூரிக்கிறார் பாலமுருகன். புதுச்சேரி லாஸ்பேட்டையில் 'ஆரோதனம்’ என்ற பெயரில்  மெழுகுப் பொருட்களை தயாரித்து வரும் பாலமுருகனின் மெழுகுவத்தி ஒவ்வொன்றும் அழகுவத்திகள்! பார்த்தவுடனே வாயில் அள்ளிப் போட்டுக் கொள்ளத் தூண்டும் கேக் துண்டங்கள் போல... பேனாஸ்டாண்ட் போல... நட்சத்திரக் கோலங்கள் போல என்று விதவிதமாக ஜாலம் காட்டுகின்றன இந்த வித்தியாச மெழுகுவத்திகள்.

''விசைத் தறி தொழிலைத்தான் தான் பரம்பரை பரம்பரையா செய்துவந்தோம். காலப்போக்கில் விசைத்தறி தொழில் நலிவடைஞ்சதால அப்பா அந்தத் தொழிலைக் கைவிட்டுட்டாரு. ஆரோவில்லில் மெழுகு வத்தி செய்ற கம்பெனில நாலு வருஷம் வேலை செஞ்சேன். அங்க தொழிலை நல்லாவும் சுத்தமாவும் கத்துக்கிட்டு சொந்தமா பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அதுக்கு முதல் படியா 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டுல  மூலப் பொருட்களை வாங்கி 2001-ல் தொழிலைத் தொடங்கினேன். அப்பவே கிட்டத்தட்ட 15  மாடல்களுக்கு மேல செய்ய ஆரம்பிச்சோம். கடுமையான உழைப்பு இருந்தும் முதல் ரெண்டுவருஷத் துக்கு நாங்க எதிர்பார்த்த மாதிரி விற்பனை இல்லை. ரொம்பவே கஷ்டப்பட்டோம். வெளி மாநிலங்களில் நடக்கும் கண்காட்சி யில் எங்களுடைய  தயாரிப்புகளை டிஸ்ப்ளே செய்து புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கிட்டோம். மூணாவது வருஷம்தான் எங்க உழைப்புக்கு ஏற்ற  பலன் கிடைச்சுது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்பனை மெழுகு...கனவுச் சுடர்... அழகுவத்திகள் !

இயந்திரத்தனமா ஒரே மாதிரி பொருட் கள் செய்யாமல் அடுத்தடுத்த கட்டங் களுக்கு மெழுகு பொருட்கள் உற்பத்தியைக் கொண்டு போனதுதான் என்னோட வளர்ச்சிக்குக் காரணம். இலைகளை மலர்களை ஒட்டி யும், வாசனை திரவியங்களைச் சேர்த்தும் மெழுகு விளக்குகளைத் தயாரிக்கஆரம்பிச் சோம். மெழுகு எரியும்போது  வாசனையும் சேர்ந்து வர்ற மாதிரி தயாரிச்சோம். மெழுகுகள் மட்டுமில்லாம அகர்பத்திகள், வாசனைப் பொருட்கள்னு உற்பத்தி செய்தோம். இந்தப் பொருட்களை கிஃப்ட் பாக்ஸ்ல போட்டு விற்பனை செய்ததுக்கு நல்ல வரவேற்பு கிடைச் சுது. என்னோட முன்னேற்றத்தில் வாடிக்கையாளர்களுக்கும் பங்கு உண்டு. காரணம், விதவித மான ஐடியாக்கள் கொடுத்து எனக்குள்ள இருந்த கற்பனைத் திரியைத் தூண்டினது அவங்கதான்.

கற்பனை மெழுகு...கனவுச் சுடர்... அழகுவத்திகள் !

ஒரு  பொருள் செய்த உடனே அதோட சூட் டைக் குறைக்க வழக்கமா தண்ணியில எடுத்துப் போட்டுடுவாங்க. ஆனா, நாங்க ஃபேன் காற்றில் காயவைப்போம். மூணு முறை மெழுகை மோல்ட் மீது ஊற்றிக் கெட்டிப்படுத்துவோம். இந்தியன் வாக்ஸ்தான் இதுக்கு மூலப் பொருள். மூலப்  பொருளோட  தரமும் அதனோடுகலக்கப் படும் ஸ்டீரிக் ஆசிட் என்னும் அமிலமும்தான் மெழுகுப் பொருட்களின் தன்மையை நிர்ணயிக் கின்றன. அதே மாதிரி தரமான வாசனை திரவியங்களைப் பயன்படுத்தணும். லிட்டர்    

கற்பனை மெழுகு...கனவுச் சுடர்... அழகுவத்திகள் !

400-ல் இருந்து

கற்பனை மெழுகு...கனவுச் சுடர்... அழகுவத்திகள் !

1,000 வரைக்கும் வாசனைத் திரவியங்கள் கிடைக்கும். தரமானதைத் தேர்ந்தெடுத்தாத்தான் தரமான பொருளைத் தயாரிக்க முடியும்.

கற்பனை மெழுகு...கனவுச் சுடர்... அழகுவத்திகள் !

சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லினு முக்கியமான நகரங்களுக்கு ஏற்றுமதி பண்றோம். அமெரிக்கா, தாய்லாந்து, பிரான்ஸில் எங்க டீலர்கள் வாங்கி விற்பனை செய்றாங்க. எதிர்காலத்தில் இன்னும் புதுப்புது உத்திகளைப் பயன்படுத்தணும். சுடுமண் பொம்மைகள் செய்து அது மேல மெழுகுவத்திவைக்கணும், மூங்கிலில் மெழுகு ஊத்தி நீரில் மிதக்கவைக் கிற  மாதிரித் தயாரிக்கணும். இந்த மாதிரி  நிறைய ஐடியா இருக்கு சார்!'' கற்பனை மெழுகில் கனவுச் சுடர் பற்றவைக்கின்றன பாலமுருகனின் கண்களும் சொற்களும்!