Published:Updated:

வெயில் காலத்தில் வதைக்கும் 'மூலம்' - தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்!

வெயில் காலத்தில் வதைக்கும் 'மூலம்' - தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்!
News
வெயில் காலத்தில் வதைக்கும் 'மூலம்' - தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்!

கோடைக்காலத்தில் மூலநோய் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். இளநீர், பதநீர், நுங்கு, மோர், ஐஸ் சேர்க்காத பழச்சாறு, பானகம் அருந்தலாம். அவற்றிலுள்ள தாதுகள் உடல் வெப்பமடையாமல் பார்த்துக்கொள்ளும்.

ணிக்காகக் கிராமங்களை விட்டு நகரத்துக்கு இடம்பெயர்ந்து வரும் இளைஞர்களுக்குப் பெரும் பிரச்னையாக இருப்பது உணவு. உடலைப் பாதிக்காத ரசாயனங்களைத் தவிர்த்து, அக்கறையோடு நல்லுணவு தருபவர்களை நகரங்களில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான இளைஞர்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ், பாஸ்ட் புட் கடைகள்தான். 

வெயில் காலத்தில் வதைக்கும் 'மூலம்' - தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்!

தினமும் பாஸ்ட்புட் உணவுகளையும் பொரித்த, காரணமான உணவுகளையும்  சாப்பிடுவதால் பெரும்பாலானோர் 'பைல்ஸ்' எனப்படும் மூலநோய்க்கு ஆளாகிறார்கள். இந்தப் பாதிப்பு, ஆசனவாயில் அதுகுறித்து வெளியே சொல்லவும் சிகிச்சை பெறவும் தயங்குகிறார்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆசனவாய் ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு, அதன் உள்ளே காணப்படும் ரத்த நாளத்தின் சுவர் மெல்லியதாகி, மலம் கழிக்கும்போது ரத்த நாளங்கள் கிழிந்து ரத்தம் வெளியேறுவதை 'மூலம்' என்கிறோம். அதிக நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருப்பது, மலச்சிக்கல் போன்றவை 'மூலம்' வருவதற்கான முக்கியக் காரணமாகும். 

வெயில் காலத்தில் வதைக்கும் 'மூலம்' - தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்!

''ஹோட்டல்களில் பரிமாறப்படும் உணவுகள் எப்போது தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியாது. பழைய உணவுகளை, புதிதாகச் சமைத்த உணவுகளுடன் கலந்து சில இடங்களில் விற்கிறார்கள். அதைச் சாப்பிடுவதால் மலச்சிக்கல்  உண்டாகிறது. அதேபோல், பாஸ்ட்புட்

வெயில் காலத்தில் வதைக்கும் 'மூலம்' - தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்!

கடைக்காரர்கள் நம்மை அடிக்கடி சாப்பிட வைக்கவும், உப்புத்தன்மையைக் கூட்டவும்  சில சுவையூட்டிகளைச் சேர்க்கிறார்கள். அது நம் உடலில் வறட்சித்தன்மையை உண்டாக்கிவிடும். குளிர்ப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அந்த உணவுகள் சரியாக இருக்கும். நம் தட்பவெட்பநிலைக்கு இட்லி, பொங்கல் போன்ற உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும்..." என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்.

"நூடுல்ஸ் சாப்பிட விரும்புபவர்கள் அதற்குப் பதிலாக இடியாப்பம் சாப்பிடலாம். ஃப்ரைடு ரைஸுக்குப் பதிலாக வெஜ் புலாவ் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். அதேபோன்று பலர் இட்லியைவிடத் தோசையைத்தான் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆனால், இட்லிதான் ஆரோக்கியமானது. இட்லி, ஆவியில் வெந்த உணவு என்பதால் அதில் உப்புத்தன்மை அதிகமிருக்காது. மொறுமொறுவெனச் சாப்பிட வேண்டுமென்பதற்காக அதிகம் எண்ணெய்விட்டு தோசை சுட்டுச் சாப்பிடும்போது பாதிப்பு அதிகமாகும். தோசையை விரும்புபவர்கள் ஊத்தப்பமாகச் சாப்பிடலாம்.

மதிய உணவாகச் சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் போன்ற கலவை சாதங்களைச் சாப்பிடுவது நல்லது. அவற்றுடன் சேர்ந்து மோர் அருந்தினால் வயிறு கெட்டுப் போகாது. வறுவல் உணவுகளைத் தவிர்த்து சுரைக்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த காய்கறிக் கூட்டுகளைச் சாப்பிடலாம். 

வெயில் காலத்தில் வதைக்கும் 'மூலம்' - தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்!

கோடைக்காலத்தில் மூலநோய் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். இளநீர், பதநீர், நுங்கு, மோர், ஐஸ் சேர்க்காத பழச்சாறு, பானகம் அருந்தலாம். அவற்றிலுள்ள தாதுகள் உடல் வெப்பமடையாமல் பார்த்துக்கொள்ளும். 

உடல் சூட்டைக் குறைக்க வாரத்துக்கு இரண்டுமுறை கண்டிப்பாக நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலைக்குத் தேங்காய் எண்ணெய் வைக்க வேண்டியது அவசியம். உடலில் சூடு அதிகமாக இருந்தால், கால் கட்டைவிரல், தொப்புளில் விளக்கெண்ணெய் தடவினால் சூடு குறையும். 

வெயில் காலத்தில் வதைக்கும் 'மூலம்' - தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்!

வெயில்காலத்தில், வயிற்றில் உணவு சீக்கிரமே புளிப்புத்தன்மை அடைந்துவிடும். அதனால் வயிறு அடிக்கடி  உப்புசமாகிவிடும். திட உணவுகள் சாப்பிடத் தோன்றாது. அந்த நேரங்களில் கம்மங்கூழ், கேப்பைக் கூழ் குடிக்கலாம். உடல் குளிர்ச்சிக்காக மோர், சின்ன வெங்காயத்தை அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். மோர் சாதமும் நல்லது. அதிலும், சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.

உடல்சூடு அதிகமாக இருந்தால், வெள்ளைப் பூசணிக்காயை மோரில் போட்டு பச்சடியாகச் சாப்பிடலாம். தினமும் வெந்தயம் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளரிக்காய், வெள்ளரி விதைகளைச் சாப்பிடுவதும் உடலுக்குக் குளிர்ச்சி தரும். வெயிலில் அதிகமாக அலையக் கூடாது, குடை, தொப்பி, தலைப்பாகை அணியலாம். கோடைக்காலத்தில் கடினமான உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்கலாம். 

வெயில் காலத்தில் வதைக்கும் 'மூலம்' - தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்!

ஆசனவாயில் எரிச்சல், வலி இருந்தால் அந்த இடத்தில் விளக்கெண்ணெய் தடவலாம். துத்தி இலையில் சின்ன வெங்காயம் சேர்த்து கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம். துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, பொறுக்கும் சூட்டில் ஆசனவாயில் வைத்துக் கட்டிவந்தால் எரிச்சல், வலி சரியாகும். சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும் கருணைக்கிழங்கு லேகியம், தேற்றான்கொட்டை லேகியம் ஆகியவற்றை வாங்கிச் சாப்பிடலாம். இவற்றால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது'' என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்.